“என் அப்பு (தந்தை) ஒரு தினக்கூலி தொழிலாளர். ஆனால் மீன் பிடிப்பது அவருக்கு பிடித்த வேலை. ஒரு கிலோ அரிசிக்கு மட்டும் எப்படியாவது பணத்தை சம்பாதித்து கொடுத்து விட்டு, கிளம்பி விடுவார்! என் அம்மி (தாய்) மிச்ச எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்,” என்கிறார் பெல்தாங்காவின் உத்தர்பரா பகுதியிலுள்ள வீட்டின் மாடியில் அமர்ந்திருக்கும் கோஹினூர் பேகம்.

“யோசித்துப் பாருங்கள். அந்த ஒரு கிலோ அரிசியில்தான் என் அம்மி நான்கு குழந்தைகளுக்கும் தாதிக்கும் (தந்தை வழி பாட்டி) தந்தைக்கும் அத்தைக்கும் தனக்கும் உணவு தயார் செய்ய வேண்டும்.” ஒரு கணம் தாமதித்து பேசும் அவர், “அவற்றை தாண்டியும் மீன் பிடிக்க கொஞ்ச அரிசி வேண்டுமென கேட்கும் துணிச்சல் அபுவுக்கு உண்டு. அவரை பொருட்படுத்துவதையே நாங்கள் நிறுத்திவிட்டோம்,” என்கிறார்.

55 வயதான கோஹினூர் அக்கா, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜானகி நகர் பிரதாமிக் வித்யாலயா தொடக்கப் பள்ளியின் மதிய உணவு சமைக்கும் வேலை செய்கிறார். அவகாசம் கிடைக்கும்போது பீடி சுற்றுகிறார். இந்த வேலையில் இருக்கும் பெண்களுக்கான உரிமைகளை பிரசாரம் செய்யும் வேலையையும் செய்கிறார். முர்ஷிதாபாதில் ஏழ்மையிலுள்ள பெண்கள்தான், பீடி சுற்றும் வேலை செய்கின்றனர். உடல்ரீதியாக அந்த வேலை பெரும் தண்டனை. இளம் வயதிலிருந்து தொடர்ந்து புகையிலையுடன் புழங்குவது அவர்களின் ஆரோக்கியத்தை பெரும் ஆபத்தில் தள்ளுகிறது. உடன் படிக்க: புகைமயமாகும் பெண் பீடித் தொழிலாளர்களின் ஆரோக்கியம்

2021ம் ஆண்டின் டிசம்பர் மாத காலை ஒன்றில் கோஹினூர் அக்கா பீடித் தொழிலாளர்களுக்கான பிரசாரத்துக்கு சென்று வரும்போது இந்த செய்தியாளரை சந்தித்தார். பிறகு, ஆசுவாசமான நிலையிலிருந்த கோஹினூர், தன் பால்ய காலத்தை பற்றி பேசினார். சொந்தமாக எழுதிய பாடலை பாடவும் செய்தார். கடினமான உழைப்பை பற்றியும் பீடித் தொழிலாளர்கள் பணிபுரியும் சுரண்டல் மிக்க சூழல் பற்றியும் பேசும் பாடல் அது.

குழந்தையாக இருந்தபோது குடும்பத்தின் வறுமை, நிறைய அசவுகரியத்தை வீட்டில் கொடுத்ததாக சொல்கிறார் கோஹினூர் அக்கா. சிறுமியாக அவருக்கு அச்சூழல் தாங்க முடியாததாக இருந்தது. “எனக்கு ஒன்பது வயதுதான் அப்போது,” என்கிறார் அவர். “ஒரு காலை, வீட்டில் வழக்கமாக இருக்கும் குழப்பத்துக்கிடையே என் அம்மா கரித்துண்டுகள், சாணம் மற்றும் விறகு ஆகியவற்றைக் கொண்டு அடுப்பை தயார் செய்து கொண்டே அழுவதை பார்த்தேன். சமைப்பதற்கு தானியம் ஏதுமில்லை.”

இடது: சமூகத்தில் தனக்கான இடத்தை பெற போராடுவதற்கான உத்வேகத்தை பெற காரணமாக இருந்த தாயுடன் கோஹினூர் பேகம். வலது: டிசம்பர் 2022-ல் முர்ஷிதாபாத்தின் பெர்ஹாம்பூரில் ஓர் ஊர்வலத்தை தலைமை தாங்கும் கோஹினூர்.  புகைப்படங்கள்: நஷிமா காடுன்

ஒன்பது வயது சிறுமிக்கு ஓர் யோசனை. “நிலக்கரி டிப்போ வைத்திருக்கும் ஒருவரின் மனைவியை ஓடிச் சென்று சந்தித்து, ‘அத்தை, எனக்கு தினமும் ஒரு கரிக்குவியல் தருகிறீர்களா?’ எனக் கேட்டேன்,” என பெருமிதத்துடன் நினைவுகூருகிறார். “கொஞ்சம் வலியுறுத்திய பிறகு, அவர் சம்மதித்தார். டிப்போவிலிருந்து ரிக்‌ஷா வைத்து நிலக்கரி கொண்டு வரத் தொடங்கினேன். போக்குவரத்துக்கு 20 பைசா செலவு செய்தேன்.”

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து, 14 வயது ஆகும்போது உதிரி நிலக்கரியை தன் ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் கோஹினூர் விற்கத் தொடங்கினார். அவரது இளம் தோள்களில் ஒரு நேரத்தில் 20 கிலோ வரை தூக்கிச் செல்வார். “கொஞ்சமாகதான் வருமானம் கிட்டியது என்றாலும் என் குடும்பத்தின் உணவுக்கு அது உதவியது,” என்கிறார் அவர்.

உதவ முடிந்ததில் சந்தோஷமும் நிம்மதியும் இருந்தபோதும் வாழ்க்கையை இழந்து கொண்டிருப்பது போல் கோஹினூர் உணர்ந்தார். “சாலையில் கரி விற்கும்போது, பள்ளிக்கு செல்லும் சிறுமிகளையும் கல்லூரி செல்லும் இளம்பெண்களையும் அலுவலகங்களுக்கு கைப்பைகளை தோள்களில் போட்டு செல்லும் பெண்களையும் பார்ப்பேன். என் மீதே எனக்கு பரிதாபம் ஏற்படும்,” என்கிறார் அவர். குரல் கனக்கத் தொடங்கியதும், கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “நானும் தோளில் பையை மாட்டிக் கொண்டு செல்ல வேண்டியவள்தான்…” என்கிறார்.

அச்சமயத்தில் நகராட்சியால் நடத்தப்படும் பெண்களுக்கான சுய உதவிக் குழுவை ஒன்று விட்ட சகோதரி ஒருவர் அறிமுகப்படுத்தினார். “கரியை பல வீடுகளுக்கு விற்கும்போது பல பெண்களை நான் சந்தித்தேன். அவர்களின் கஷ்டங்கள் எனக்கு தெரியும். என்னையும் ஓர் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கும்படி நகராட்சியை நான் வலியுறுத்தினேன்.”

ஆனால் அவரின் ஒன்று விட்ட சகோதரி ஒரு பிரச்சினை எழுப்பினார். கோஹினூருக்கு முறையான கல்வி இல்லாதது சுட்டிக் காட்டப்பட்டது. வரவு செலவு கணக்குகளை பார்க்கும் வேலைக்கு அவர் பொருந்த மாட்டார் என கருதப்பட்டது.

“எனக்கு அது பிரச்சினையே இல்லை,” என்கிறார் அவர். “எண்ணுவதிலும் கணக்கு போடுவதிலும் நான் தேர்ந்தவள். கரி விற்கும்போது கணக்கு போட கற்றுக் கொண்டேன்.” தவறுகள் எதுவும் நடக்காது என உறுதியளித்த கோஹினூர், டைரியில் எல்லாவற்றையும் எழுத ஒன்று விட்ட சகோதரி உதவ வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். “மற்றவற்றை நான் பார்த்துக் கொள்ள முடியும் என்றேன்.”

Kohinoor aapa interacting with beedi workers in her home.
PHOTO • Smita Khator
With beedi workers on the terrace of her home in Uttarpara village
PHOTO • Smita Khator

இடது: வீட்டில் பீடித் தொழிலாளர்களுடன் உரையாடும் கோஹினூர் அக்கா. வலது: உத்தர்பரா கிராமத்தின் தன் வீட்டு மாடியில் பீடித் தொழிலாளர்களுடன் கோஹினூர்

அவரும் பார்த்துக் கொண்டார். உள்ளூர் சுய உதவிக் குழுவில் பணிபுரிந்ததில் பல பெண்களின் அறிமுகம் கோஹினூருக்கு கிடைத்தது. அவர்களில் பெரும்பாலானோர் பீடி சுற்றுபவர்கள். சேமித்து, நிதித் தொகுப்பு உருவாக்கி, அதிலிருந்து கடன் பெற்று, திரும்பக் கட்டும் முறைகளை அவர் கற்றுக் கொண்டார்.

பணம் கோஹினூருக்கு தொடர்ந்து போராட்டமாக இருந்தபோதும், களப் பணி அவருக்கு ‘மதிப்புமிக்க அனுபவமாக’ இருந்தது என்கிறார். “அங்குதான் அரசியல் விழிப்புணர்வு எனக்கு கிடைத்தது. ஏதேனும் தவறை பார்த்தால் நான் எப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன். தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுடன் நட்பை உருவாக்கிக் கொண்டேன்.”

ஆனால் அவரின் குடும்பத்திலும் உறவினர்களிடமும் இத்தகைய நடத்தைக்கு வரவேற்பு இல்லை. “எனவே அவர்கள் எனக்கு மணம் முடித்து வைத்தனர்.” 16 வயதில் அவரை ஜமாலுதின் ஷேக்குக்கு மணம் முடித்து வைத்தனர். இருவருக்கும் மூன்று குழந்தைகள்.

அதிர்ஷ்டவசமாக கோஹினூர் விரும்பி பார்த்த வேலைக்கு திருமணத்தால் தடையேதும் நேரவில்லை. “என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை நான் அவதானித்தேன். என்னை போன்ற பெண்களின் உரிமைகளுக்காக களத்திலிருந்து இயங்கும் அமைப்புகளின் மீது மதிப்பு கொண்டேன். அவர்களுடனான என்னுடைய செயல்பாடு அதிகரித்தது.” ஜமாலுதின், பிளாஸ்டிக் மற்றும் குப்பை சேகரிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் பள்ளியில் கோஹினூர் பணிபுரிந்து கொண்டு முர்ஷிதாபாத் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கத்திலும் இயங்கிக் கொண்டிருந்தார். அங்கு அவர் பீடித் தொழிலாளர்களின் உரிமைக்காக இயங்கினார்.

“ஞாயிற்றுக்கிழமை காலைகளில்தான் எனக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும்,” என்னும் அவர், அருகே இருக்கும் புட்டியிலிருந்து தேங்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றுகிறார். முடியில் எண்ணெய் தடவி, தலைவாருகிறார்.

தலைக்கு துப்பாட்டாவால் முக்காடிட்டு, முன்னால் இருக்கும் சிறு கண்ணாடியில் தன்னைப் பார்த்து கொள்கிறார். “இன்று பாடலாம் என இருக்கிறேன். பீடி சுற்றுவதை பற்றி ஒரு பாட்டு பாடுகிறேன்.”

காணொளி: உழைப்பை பற்றிய கோஹினூர் அக்காவின் பாடல்கள்

বাংলা

একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

শ্রমিকরা দল গুছিয়ে
শ্রমিকরা দল গুছিয়ে
মিনশির কাছে বিড়ির পাতা আনতে যাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

পাতাটা আনার পরে
পাতাটা আনার পরে
কাটার পর্বে যাই রে যাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

বিড়িটা কাটার পরে
পাতাটা কাটার পরে
বাঁধার পর্বে যাই রে যাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
ওকি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

বিড়িটা বাঁধার পরে
বিড়িটা বাঁধার পরে
গাড্ডির পর্বে যাই রে যাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

গাড্ডিটা করার পরে
গাড্ডিটা করার পরে
ঝুড়ি সাজাই রে সাজাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

ঝুড়িটা সাজার পরে
ঝুড়িটা সাজার পরে
মিনশির কাছে দিতে যাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

মিনশির কাছে লিয়ে যেয়ে
মিনশির কাছে লিয়ে যেয়ে
গুনতি লাগাই রে লাগাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

বিড়িটা গোনার পরে
বিড়িটা গোনার পরে
ডাইরি সারাই রে সারাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই
একি ভাই রে ভাই
আমরা বিড়ির গান গাই

ডাইরিটা সারার পরে
ডাইরিটা সারার পরে
দুশো চুয়ান্ন টাকা মজুরি চাই
একি ভাই রে ভাই
দুশো চুয়ান্ন টাকা চাই
একি ভাই রে ভাই
দুশো চুয়ান্ন টাকা চাই
একি মিনশি ভাই
দুশো চুয়ান্ন টাকা চাই।

தமிழ்

கேளுங்க அண்ணே
எங்க சத்தத்த கேளுங்க
பீடியப் பத்தி நாங்க
பாடும் இந்த பாட்ட கேளுங்க

தொழிலாளர்கள் சேருங்க
தொழிலாளர்கள் சேருங்க
தரகர்கள்கிட்ட போய், பீடி இலை வாங்குவோம் வாருங்க
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

இலைகளை நாங்க கொண்டு வாரோம்
இலைகளை நாங்க கொண்டு வாரோம்
வெட்டறதுக்கு அதை எடுத்து வைக்கறோம்
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

பீடிய வெட்டி முடிச்சோம்
இலைய வெட்டி முடிச்சோம்
கடைசியா பீடி சுற்ற தயாராகுறோம்
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

பீடி சுத்தி முடிச்சோம்
பீடி சுத்தி முடிச்சோம்
எல்லாத்தையும் கட்டத் தொடங்குறோம்
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

கட்டியும் முடிச்சாச்சு
கட்டுகள கட்டி முடிச்சாச்சு
எங்க கூடைகள கட்டத் தொடங்குறோம்
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

கூடைய கட்டி முடிச்சுட்டோம்
இப்போ கூடை கட்டி முடிச்சுட்டோம்
அதை தூக்கி தரகனை பார்க்கப் போறோம்.
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

தரகர் வீட்டுக்கு போயிட்டோம்
தரகர் வீட்டுக்கு போயிட்டோம்
கடைசி கணக்கு முடிக்கத் தொடங்குறோம்
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

கணக்கு முடிச்சாச்சு
கணக்கு முடிச்சாச்சு
டைரி வந்ததும் நாங்க கிறுக்குறோம்.
கேளுங்க அண்ணே
நாங்க பாடற
பீடி பத்திய பாட்ட
நீங்களும் கேளுங்க

டைரியும் நிரம்பிடுச்சு
டைரியும் நிரம்பிடுச்சு
சம்பளத்தை கொடுத்துட்டு எங்க கோஷத்தை கேளுங்க.
கேளுங்க அண்ணே
எங்க சம்பளத்துக்கு நாங்க கோஷம் போடுறோம்
இரண்டு நூறும் அம்பத்தி நாலு சில்லரையும்
கேளு தரகரே, தயவுசெஞ்சு ஏற்பாடு செய்.
இருநூத்தமபத்து நாலு ரூபாய்தான் எங்க தேவை
கேளு தரகரே.. காது கொடுத்து நெஜமா கேளு.

பாடலில் பங்களித்தவர்கள்:

வங்காளி பாடல்: கோஹினூர் பேகம்

தமிழில் : ராஜசங்கீதன்

Smita Khator

Smita Khator is the Translations Editor at People's Archive of Rural India (PARI). A Bangla translator herself, she has been working in the area of language and archives for a while. Originally from Murshidabad, she now lives in Kolkata and also writes on women's issues and labour.

Other stories by Smita Khator
Editor : Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Video Editor : Shreya Katyayini

Shreya Katyayini is a filmmaker and Senior Video Editor at the People's Archive of Rural India. She also illustrates for PARI.

Other stories by Shreya Katyayini
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan