"இந்த ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நெருப்பிலிட்டு எங்கள் லோஹ்ரியை கொண்டாடினோம்", என்று பஞ்சாபின் சங்கூர் மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் சுக்தேவ் சிங் கூறுகிறார். அறுபதுகளின் மத்தியில் இருக்கும் சிங் தனது வாழ்நாளில் பெரும்பகுதி விவசாயியாகவே  இருந்திருக்கிறார். இப்போது அவர் ஹரியானா தில்லி எல்லையில் உள்ள சிங்குவில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களுள் ஒருவர்.

"இந்த லோஹ்ரி நிச்சயமாக மாறுபட்டது", என்று அவர் கூறுகிறார். "பொதுவாக நாங்கள் அதை எங்களது வீடுகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையோடு கொண்டாடுவோம் - அது ஒரு மகிழ்ச்சியான நேரம். இந்த முறை நாங்கள் எங்களது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் தூரத்தில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் ஒன்றாக இருக்கிறோம். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம், அதாவது இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடியும் வரை இருக்க நேர்ந்தாலும் இங்கேயே நாங்கள் இருப்போம்", என்று கூறினார்.

பிரபலமான லோஹ்ரி பண்டிகை முதன்மையாக பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்படுகிறது இது பொதுவாக மகரசங்கராந்திக்கு முந்தைய நாள் இரவில் (குளிர்கால கதிர் திருப்பத்தைக் கடந்து சந்திர நாட்காட்டியில் மாதத்தின் கடைசி நாள்) அனுசரிக்கப்படுகிறது மேலும் வசந்த காலத்தின் தொடக்கம் மற்றும் நீளமான நாட்களின் துவக்கத்தையும் இது குறிக்கிறது. மக்கள் நெருப்பு மூட்டுகின்றனர், வெல்லம் நிலக்கடலை, மற்றும் பிற பாரம்பரிய உணவுப் பொருட்களை சூரியனுக்குப் படைக்கின்றனர், அதே நேரத்தில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அறுவடையையும் வேண்டுகின்றனர்.

இந்த ஆண்டு சிங்கு எல்லையில் லோஹ்ரி ஜனவரி 13 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்ட பாதையில் பல இடங்களில் நெருப்பு மூட்டப்பட்டு மூன்று வேளாண் சட்டங்கள் அச்சிடப்பட்ட காகிதங்களை எரித்ததன் மூலம் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் ஒற்றுமைக்கான முழக்கங்களை எழுப்பினர் மேலும் தங்கள் டிராக்டர்களுக்கு அருகில் எரிந்த புனிதத் தீயில் காகிதங்கள் எரிவதைச் சுற்றி ஒன்றாக பாடி நடனம் ஆடினார்கள்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

PHOTO • Anustup Roy

லோஹ்ரி கொண்டாட்டத்தை தொடங்க பஞ்சாபின் விவசாயி தனது டிராக்டர் அணிவகுப்பில் பாடல்கள் பாடுகிறார்

PHOTO • Anustup Roy

லோஹ்ரி நெருப்புக்கு முன்னதாக பஞ்சாபை சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ரோகித் ஆகிய இரு விவசாயிகளும் மாலை நேரத்தில் மேளம் வாசித்தனர்

PHOTO • Anustup Roy

இந்த சிறப்பு லோஹ்ரி பண்டிகையின் லங்கருக்கு ரொட்டிகளை தயாரிக்கின்றனர்- இந்த ஆண்டு அச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராடும் உறுதியை அது குறிக்கிறது

PHOTO • Anustup Roy

லோஹ்ரி பண்டிகை உணவிற்காக ஜிலேபிகள் தயாரிக்கப்படுகின்றன

Left: Posters announcing that the three farm laws will be burnt at 7 that evening on the occasion of Lohri. Right: Farmers raise slogans as the Lohri fire burns.
PHOTO • Anustup Roy
Left: Posters announcing that the three farm laws will be burnt at 7 that evening on the occasion of Lohri. Right: Farmers raise slogans as the Lohri fire burns.
PHOTO • Anustup Roy

இடது: லோஹ்ரி தினத்தன்று மாலை 7 மணிக்கு மூன்று வேளாண் சட்டங்கள் எரிக்கப்படும் என்று அறிவிக்கும் பதாகைகள்.

வலது: எரிகின்ற லோஹ்ரி தீயின் முன்பு விவசாயிகள் கோஷங்கள் எழுப்புகின்றனர்

PHOTO • Anustup Roy

மூன்று வேளாண் சட்டங்கள் அச்சிடப்பட்ட காகிதங்களை லோஹ்ரி தீயில் இட்டு எரிக்கிறார் ஒரு விவசாயி

PHOTO • Anustup Roy

அச்சட்டங்கள் அச்சிடப்பட்ட பல தாள்கள் மேலும் தீயிலிடப்படுகின்றது

PHOTO • Anustup Roy

இந்த ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நெருப்பிலிட்டு எங்கள் லோஹ்ரியை கொண்டாடினோம்', என்று பஞ்சாபின் சங்கூர் மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் சுக்தேவ் சிங் கூறுகிறார்

PHOTO • Anustup Roy

மாலை நேரம் செல்ல செல்ல விவசாயிகள் ஒன்றாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கின்றனர்."இந்த லோஹ்ரி நிச்சயமாக மாறுபட்டது", என்று அவர் கூறுகிறார். "பொதுவாக நாங்கள் அதை எங்களது வீடுகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையோடு கொண்டாடுவோம் - அது ஒரு மகிழ்ச்சியான நேரம். இந்த முறை நாங்கள் எங்களது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் தூரத்தில் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் ஒன்றாக இருக்கிறோம். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம், அதாவது இந்த அரசாங்கத்தின் ஆட்சி காலம் முடியும் வரை இருக்க நேர்ந்தாலும் இங்கேயே நாங்கள் இருப்போம்", என்று கூறினார்

தமிழில்: சோனியா போஸ்

Anustup Roy

Anustup Roy is a Kolkata-based software engineer. When he is not writing code, he travels across India with his camera.

Other stories by Anustup Roy
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose