பிரவீன்குமார் ஒரு ஸ்கூட்டரில் தனது ஊன்றுகோலுடன் உட்கார்ந்து இருக்கும் இடத்திற்கு அருகில், ஒரு கையில் தூரிகையுடன், தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களுடன் பேசிக்கொண்டே, 18 அடி நீளமுள்ள பெரிய கேன்வாஸில் சிங்குவில் நடைபெற்று வரும் விவசாய போராட்டத்தின் காட்சிகளை சித்திரமாக்கிக் கொண்டிருக்கிறார்.

சிங்குவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள  லூதியானாவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளார் பிரவீன். இவர் ஒரு ஓவியர் மற்றும் ஓவிய ஆசிரியராவார். ஜனவரி 10 ஆம் தேதி ஹரியானா - தில்லி எல்லையிலுள்ள போராட்ட களத்தை அடைந்தவர் தனது பங்களிப்பை அளிக்க விரும்பினார்.

"இதை நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை, கடவுள் எனக்கு மிகுதியாகவே தந்துள்ளார், அது குறித்து எனக்கு எந்த பதற்றமும் இல்லை. இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன் என்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

"நான் 70% மாற்றுத்திறன் உடையவன்", என்று அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது போலியோ நோயின் தாக்கத்தினால் முடங்கிய அவரது கால்களை காண்பித்துக் கூறுகிறார். இந்தக் குறைபாடோ அல்லது அவரது குடும்பத்தினரின் தொடக்ககால அதிருப்தியோ அவர் சிங்குவிற்கு பயணம் செய்வதை தடுக்கவில்லை.

43 வயதாகும் பிரவீன், லூதியானாவில் தான் வரையத் தொடங்கிய பெரிய கேன்வாஸ் ஓவியத்தை சிங்குவிற்கு கொண்டு வந்தார். அங்கும் அவர் தொடர்ந்து வரைந்து வந்தார், போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தெருவில் அமர்ந்து கொண்டு அந்த வேலையை அவர் தொடர்ந்து செய்து வந்தார் - அது தயாராகும் வரை.
Praveen Kumar, whose painting covers the stages of the protests, says, 'What makes me happy is that I am now a part of this agitation'
PHOTO • Anustup Roy
Praveen Kumar, whose painting covers the stages of the protests, says, 'What makes me happy is that I am now a part of this agitation'
PHOTO • Anustup Roy

போராட்டக்காரர்களின் மேடையில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியத்தை வரைந்த பிரவீன், 'நான் இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது', என்று கூறுகிறார்

தலைநகரின் எல்லையில் உள்ள சிங்கு மற்றும் பிற போராட்டக் களங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், முதலில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டது, பின்னர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த மாதம் 20-ஆம் தேதிக்குள்ளாகவே அது சட்டமாக்கப்பட்டது.

இந்த சட்டங்கள் பரவலான அழிவை ஏற்படுத்தும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் - வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 ; விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ; அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 . இந்திய அரசியலமைப்பின் 32வது பிரிவை குறை மதிப்பிற்கு உட்படுத்தி அனைத்து குடிமக்களுக்கும் சட்டரீதியான உதவிக்கான உரிமையை முடக்குகிறது என்பதால் ஒவ்வொரு இந்தியருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதையடுத்து நடந்த போராட்டங்களின்  பல்வேறு காலகட்டங்களை பிரவீனின் ஓவியங்கள் உள்ளடக்கியிருக்கிறது. இந்த கேன்வாஸில் வரையப்பட்டிருக்கும் ஓவியம் இப்போராட்ட காலத்தினை தொடராக சித்தரித்துள்ளது - விவசாயிகள் ரயில் மறியல் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீச்சி அடிப்பு ஆகியவற்றை எதிர்கொண்ட காலகட்டத்தையும், இன்று அவர்கள் தில்லியின் எல்லைகளில் உறுதியுடன் போராாடிக் கொண்டிருக்கும் இந்நாள் வரை அந்த ஓவியத்தில் அடங்கியுள்ளது.

அவர் அந்த கேன்வாஸை மிகுந்த சிரத்தை எடுத்து வரைந்துள்ளார் ஆனால் அதை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறார்.  “அதன் இறுதி   வரை நான் இந்த ஓவியத்தை கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்கிறார் அவர் – அதாவது வெற்றி மட்டும் மற்றும் வேளாண் சட்டங்களை ரத்து செய்தல் ஆகியவை தான் அது என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Anustup Roy

Anustup Roy is a Kolkata-based software engineer. When he is not writing code, he travels across India with his camera.

Other stories by Anustup Roy
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose