
SANGUR, PUNJAB
|SAT, JUN 21, 2025
விழாக்களும் அவற்றை அலங்கரிப்பவர்களும்
புராணம், இயற்கை, தெய்வீகம், மாறும் காலநிலைகள், அறுவடை சந்தோஷம் என எல்லாவற்றுக்கும் இந்தியாவில் விழாக்கள் இருக்கின்றன. மக்களை ஒன்றாக்கி, மதமாச்சரியம் இன்றி, பாலினம் மற்றும் சாதி பேதங்களை இந்த விழாக்கள் கடக்க வைக்கிறது. பாரம்பரிய தொடர்ச்சிக்காக கொண்டாடப்பட்டாலும் அந்த விழாக்கள், அன்றாட வாழ்க்கை மற்றும் உழைப்பிலிருந்து தற்காலிக விடுதலையை அளிக்கிறது. விருந்துகள், இசை, நடனம் மற்றும் வழிபாடு என பல்வேறு சமூகங்களை சேர்ந்த கலைஞர்கள் செய்யும் பணிகள்தாம் இத்தகைய விழாக்கள் நடக்க காரணங்களாக இருக்கின்றன. பல்வேறு விழாக்களையும் கொண்டாட்டங்களையும் பாரியின் இக்கட்டுரைகள் ஆவணப்படுத்துகின்றன
Author
Translation
36. கூடும் பட்டன் கோடோலியின் மஞ்சள் மேகங்கள்
ஒவ்வொரு வருடமும், அக்டோபர் மாதம், தங்கர் மற்றும் குருப மேய்ப்பர் சமூகங்களைச் சேர்ந்த பலர் கூடும் வருடாந்திர விட்டல் பிர்தேவ் யாத்திரையில், கொண்டாட்டம் மற்றும் நம்பிக்கையின் வண்ணமயமான சூழலை சித்தரிக்கும் புகைப்படக் கதை இது
35. ’அம்மாவுக்கு கோபம் வந்தா, கடலோட போயிடுவா’
மாசி மாதத்தில் இருளர் சமூகத்தினர் சென்னைக்கருகே இருக்கும் மாமல்லபுரத்தில் கூடி, அவர்களின் தெய்வம் கன்னியம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் திரும்பி வரக் கேட்பார்கள். மொத்த கடற்கரையிலும் பூசாரிகள் திருமணங்களை நடத்துவார்கள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள், ஆசிர்வாதம் வழங்குவார்கள்
34. புலம்பெயர்த்தப்பட்ட தெய்வத்தின் நடனம்
தெற்கு சட்டீஸ்கரில், கங்ரெல் மடய் என்பது கோண்ட் பழங்குடியினரால் நாள் முழுக்க கொண்டாடப்படும் விழாவாகும்
33. உகாதி கொண்டாட்டம், அதிகாரம் மற்றும் அடையாளம்
ஆந்திராவின் மேடாபுரத்தில் வருடந்தோறும் பிரம்மாணடமாக நடக்கும் உகாதி விழாவை, கடவுள் சிலையை ஊருக்குக் கொண்டு வந்த மடிகா சமூகத்தினர் ஒருங்கிணைக்கின்றனர்
32. மீனவர்களைப் பாதுகாக்கும் சிலை செய்பவர்
வட சென்னை மீனவ சமூகத்தின் காவல் தெய்வமான கன்னி சாமிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில், உயிர் கொடுக்கிறார் டில்லி அண்ணா. களி மண்ணும், வைக்கோல் கூளமும் கொண்டு இந்த சிலைகள் செய்யப்படுகின்றன. ஆனால், நகரமயமாகிக் கொண்டிருக்கும் பகுதியில் இந்த இரண்டும் கிடைப்பது அரிதாகி வருகிறது
31. ‘எங்கள் மண் சிலை, கல் சிலையானது’
தமிழ்நாட்டின் பங்களாமேடு கிராமத்திலுள்ள இருளர் சமூகம் தங்கள் தெய்வத்தை வழிபடும் முறையில் மெதுவாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது
30. துளு நாட்டின் பட்டாசு கைவினைஞர்கள்
கர் நாடகாவின் ஒத்திசைவான பண்பாட்டு பாரம்பரியத்தில், நம்பிக்கைகளை தாண்டி மதம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் பட்டாசுகளை வீசும் பணியை முஸ்லிம்கள் செய்கின்றனர். இந்த அசாதாரண கலை மற்றும் கர்னால் சாய்பேர் பற்றிய படம் இது
29. சந்தால் திருவிழாவில் சாதர் பாதனி பொம்மலாட்டம்
தபன் முர்மூ, சந்தால் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஓர் இளம் விவசாயி; மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர். தங்கள் அறுவடைத் திருவிழாவின்போது பொம்மலாட்டம் நிகழ்த்தும் இவர், தன் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கலை மீது ஆர்வம் குறைந்திருக்கிறது என கவலைப்படுகிறார்
28. ராஸ் மகா உற்சவமும் மஜூலியின் சத்திரங்களும்
பல இடங்களில் நாடகங்களும் கலை நிகழ்வுகளும் நடத்தப்படும் அசாமின் இந்த வருடாந்திர விழா மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும். இடப்பெயர்வும் இளம் தலைமுறையின் மங்கும் ஆர்வமும் கலைஞர்கள் கிடைப்பதை கஷ்டமாக்கியிருக்கிறது
27. துளுநாட்டின் ஒத்திசையும் பாரம்பரிய பூதாக்கள்
அரபிக் கடலோர கர்நாடகப் பகுதியில் பூத வழிபாட்டுக்கு பல சமூகங்கள் ஒன்றிணைகின்றனர். இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்தும் சையது நசீர் மற்றும் அவரது இசைக்குழு பாரம்பரியம் குறித்த படம் இது
26. லடாக்கில் கொண்டாடப்படும் சகா திவா விழா
திபெத்திய பவுத்தர்களின் முக்கியமான விழா இது. ஹன்லே ஆற்றுப் பள்ளத்தாக்கில் மேளதாள வாத்திய இசை சூழ ஆறு கிராமங்கள் ஒன்றாகி விழா கொண்டாடப்படுகிறது
25. பஸ்தாரின் மூங்கில் குழாய் துப்பாக்கிகள்
சட்டீஸ்கரில் நடக்கும் வருடாந்திர கோஞ்சா விழாவில் உள்ளூர் பழங்குடிச் சமூகங்கள் ஒரு தனித்துவ கவுரவ காவலரைக் கொண்டிருக்கின்றனர்
24. சாய்நகர் தர்காவினருகே உள்ள சிறு பிள்ளையார்
ஆந்திராவின் அனந்தப்பூர் டவுன் குழந்தைகளுக்குப் பிடித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வாரக்கணக்கில் தொடர்கிறது
23. எண்பது ஆண்டுகளாக தீபாவளி விளக்குகள் செய்பவர்
தீபாவளியின்போது வீடுகளுக்கு ஒளியூட்டும் லட்சக்கணக்கான விளக்குகளை எஸ்.பரதேசம் செய்திருக்கிறார். விசாகப்பட்டினத்தின் கும்மாரி வீதியில் இருக்கும் கடைசி குயவரான அவர் விழாவுக்கான விளக்குகளை செய்கிறார்
22. சுரு பள்ளத்தாக்கில் முகர்ரம் அனுசரிப்பு
ஷியா இஸ்லாமியர்கள் அனுசரிக்கும் முகர்ரம் மாதச் சடங்குகள் லடாக்கின் கார்கில் மாவட்டத்தின் டாய் சுரு கிராமத்தில் பல நாட்களுக்கு தொடர்கிறது. குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, அந்த நாள்தான் நண்பர்களை சந்தித்து நேரம் கழிப்பதற்கான நாளாக அமைகிறது
21. குஜராத்தின் சங்கராந்தி தின வானத்தை உருவாக்கும் காற்றாடி செய்பவர்கள்
கம்பத் மற்றும் அகமதாபாத்தில் காற்றாடி செய்யும் பெண்களின் கடுமையான வாழ்க்கைகள், அவர்களின் உழைப்பில் அற்புத நிறங்களுடன் இருக்கும் வானத்துக்கு முரணாக இருக்கின்றன
20. துர்க்கையின் தாகி மேளக்காரர்கள்
அக்டோபர் 11ம் தேதி வரும் துர்கா பூஜைக்கான தாகி மேளங்கள் இப்போதே அகர்தாலாவில் ஒலிக்கத் தொடங்கி விட்டது. பிற நேரங்களில் இந்த மேளக்காரர்கள் சைக்கிள் ரிக்ஷாக்களை ஓட்டுகிறார்கள். விவசாயிகளாகவோ சிறு வியாபாரிகளாகவோ எலக்ட்ரீஷியன்களாகவோ இருக்கிறார்கள்
19. மாலையில் இருக்கும் பூக்களைப்போல நடனம் ஆடுகின்றனர்
குளிர்கால மாதங்களின் கொண்டாட்டங்களின் போது சத்தீஸ்கரின் கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி ஹல்கி மந்திரி மற்றும் கோலாங் நடனங்களை நிகழ்த்துகின்றனர் மேலும் ரேலா பாடல்களையும் பாடுகின்றனர்.
18. விசாக் குயவர்கள்: களிமண் சிலைகளும், மூழ்கடிக்கும் கடன் சுமையும்
விநாயகர் சதுர்த்தியுடன் இவ்வாரம் தொடங்கும் பண்டிகைக் காலத்தில், ஆந்திராவின் இந்த நகரத்துக் கலைஞர்கள் பெரும்பாலும் வருமானம் பார்ப்பார்கள். ஆனால், இவ்வருடம் அவர்களுக்கு விநாயகர் சிலைகள் உட்பட எந்தவொரு பெரிய ஆர்டரும் கிடைக்கவில்லை
17. பொதுமுடக்கம் நொறுக்கிய பானைகளில் ஒன்று
டெல்லியின் உத்தம் நகர் குயவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி தொடங்கியதும் துர்கா பூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகைக் காலம் வருவதால் தொழில் உச்சத்தில் இருக்கும். இப்போது விற்பனை மந்தமாகியுள்ளதால் மேற்குவங்கம் கஞ்ச் பகுதி குயவர்கள் சோகத்தில் உள்ளனர்
16. தெய்வங்கள், நடனங்கள் மற்றும் அருள் வாக்குகள்
கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நடைபெறும், இந்த நூற்றாண்டுகள்-பழமையான சடங்குகளில், சாமியாடிகள் மறக்கப்பட்ட தலித் சமூக நாயகர்கள் குறித்தும், தீர்க்கப்பட்ட பிரச்னைகள் குறித்தும் கதைகளைச் சொல்லி, அருள்வாக்கு தருகின்றனர்
15. ஒடிசாவில் விதைத் திருவிழா
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் பல தலைமுறைகளாக நாட்டு விதைகளைப் பாதுகாத்து வருகின்றனர்; ஆண்டுதோறும் இதற்காக நடைபெறும் திருவிழாவில் ஒன்றுகூடும் அவர்கள் விதைகள் பரிமாறும் சடங்குகளை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்
14. சூர்யபெட்டின் ‘மக்கள் கடவுள்’
தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேச கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஹஸ்ரத் ஜன்பக் ஷகீதின் உர்ஸ் திருவிழாவிற்கு வருகை தருகிறார்கள். பலர் தர்கா மீதுள்ள நிரந்தர நம்பிக்கையாலும், சிலரோ இங்கு நடைபெறும் விறுவிறுப்பான வியாரத்திற்காகவும் வருகிறார்கள்
13. கிலியூட்டும் ஆவேசமும், சாட்டை அடியும் ஆட்டமும்
ஒவ்வொரு ஆண்டும் போனாலு திருவிழாவின் போது ஹைதராபாத்தில் உள்ள வாகன உதிரி பாகங்கள் வியாபாரியான போசானி அஸ்வின், போதுராஜுவாக மாறுகிறார். அது நோய்களைத் தடுக்கும் தெய்வம் என்று நம்பப்படுகிறது - 'அருள் வந்ததும்', அவர் மக்களை ஆசீர்வதித்து மேலும் பெருங்கூட்டத்தை கவர்ந்து இழுக்கிறார்
12. தூல்பெட் தெய்வங்களின் வடிவமைப்பாளர்கள்
இங்கு வரிசையாக அமர்ந்திருக்கும் கலைஞர்களில் பெரும்பாலானோர் ஹைதராபாத்துக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிலை செய்வதற்காக புலம் பெயர்ந்து வந்தவர்கள். மலிவான விலையில், சந்தையில் பொருட்கள் உள்ளதால், வழக்கமான வேலை கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்
11. கடவுளுக்கு ஆடை தைக்கும் கலைஞர்கள்…
வரலாற்று சிறப்புமிக்க மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளன்று அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்திற்கு முன்பாக பெரிய ஊர்வலம் ஒன்றும் நடந்தேறும். அப்போது சில பக்தர்கள் வண்ணமயமான ஆடைகள் தரித்து வலம்வருவதைக் காண முடியும். யார் இந்த ஆடைகளைத் தைக்கிறார்கள் என்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது
10. வார்லி குக்கிராமத்தில் ஒரு தீபாவளியை நினைவுக்கூர்தல்
பட்டாசுகள், நகரத்தின் விளக்குகளுக்கு அப்பால், மும்பைக்கு வெளியே உள்ள பதா எனும் பழங்குடியினக் குடியிருப்பில், என்னுடைய குடும்பத்தினர் ஒவ்வோர் ஆணடையும்போலவே இந்த ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடினர். பாரம்பரியமான பண்டங்கள், சமூகச் சடங்குகள், இயற்கைக்கு மரியாதை என மகிழ்ச்சியாக இருந்தது, கொண்டாட்டம்
9. மாறிவிட்ட அயோத்தியில் ராமர் கதை நிகழ்வு
தசரா மாதத்தில், ராமர் கதையை மேடைகளில் அரேங்கேற்றும் குழுவினர், அவர்களின் பணிகளுக்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னர், பரபரப்பாக அயோத்தியின் பல இடங்களில் இங்குமங்கும் மாறி மாறி சென்று நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருப்பார்கள். புராண கதையை திரும்ப கூறும் கலாச்சார நிகழ்ச்சியை தற்காலிக அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்
8. கணபதி சிலைகளைச் செதுக்க வங்கம் பரோடாவை சந்திக்கிறது
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த கைவினைக் கலைஞர்கள் வதோதராவில் சிலை தயாரிக்கும் பாணியில் இரண்டரக்கலந்து உள்ளனர், தபன் மொண்டல்-ஐ போன்ற சிலர், தனித்துவமான பட்டறைகளை நடத்தி வருகின்றனர், அதே நேரத்தில் இன்னும் பலர் விவசாய தொழிலாளர்களாகவோ, வீடுகளுக்கு வர்ணம் பூசுபவர்களாகவோ அல்லது பிற வேலைகளிலோ ஈடுபட்டுள்ளனர்.
7. செம்மர்கானில் நடக்கும் முன்னோர் தெய்வங்களின் கூடுகை
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை, கோண்டு பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள செம்மர்கான் கிராமத்தில் நடைபெறும் விழாவுக்கு தங்கள் குல தெய்வங்களை எடுத்து வருகிறார்கள். தங்கள் மூதாதையர்களிடம் வேண்டிக் கொள்வதற்கும், அவர்களின் வழிகாட்டுதல்களைக் கோருவதற்கும், ‘இறந்தவர்களும்’ கூட அவர்களுடன் கூடுவதற்கான நிகழ்வாக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்
6. நியாம்கிரியில் கேம்ப்ஃபயர் கூட்டம்
ஒடிசாவில் உள்ள நியாம்கிரி பீடபூமியில், ஆண்டுதோறும் வண்ணமயமான திருவிழாவில் ஒன்றுகூடும் டோங்கிரியா கோந்துகள். சுரங்க அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும், தாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் இந்த கொண்டாட்டம் பேசுகிறது
5. ஒருநாள் எங்களையும் ஏற்பார்கள்
தமிழகத்தில் இந்த வருடம் ஏப்ரல் 25ந்தேதியோடு முடிவடைந்த கூவாகம் திருவிழாவில், மாற்றுப்பாலினத்தவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அழுவதற்கும், சிரிப்பதற்கும், தொழுவதற்கும், புறக்கணிப்புக்கு அப்பால் தாமாகவே வாழ்வதற்கும் அங்கு வருகிறார்கள்.
4. கேரளாவின் குட்டிக்குதிரை எனும் திருவிழா கொண்டாட்டம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்ட உப்பங்கழியை ஒட்டியுள்ள கார்த்திகாபள்ளி மற்றும் பிற கிராமங்களில் குழந்தைகள் சொந்தமாக சப்பரங்கள் செய்து வருடாந்திர பவனியில் குதூகலத்துடன் பங்கேற்கின்றனர்
3. குமார்துலியின் வழியே ஒரு பயணம்
கொல்கத்தாவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்தக் குயவர்கள் காலனியைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் இரவு முழுவதும் களிமண் சிலைகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை விரைவில் நகர்ப்பகுதியில் நடைபெறும் துர்கா பூஜைக்கு அனுப்பப்படவுள்ளது
2. மா போன்பீபி எனும் வனதெய்வம்
மேற்கு வங்கத்தின் சுந்தரவன தெய்வம், விலங்குகளுடனான தனது ஒப்பந்தத்தை நிலைநிறுத்த இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகிறது
1. சஹாரியாக்களின் ஹோலி
ஹோலி, அறுவடை கொண்டாட்டங்களுக்கு தயாராகும் ராஜஸ்தானின் ஏழ்மையான பரன் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாரியா சமூகத்தினர்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/festivals-and-the-folks-who-fashion-them-ta




































