இங்கே ஆயிரக்கணக்கான நாடோடி மேய்ப்பர்கள் உள்ளனர். பலரும் வந்த வண்ணமாக உள்ளனர். அவர்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தங்கர்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், மற்றும் குருபர்கள், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஆகியோர் தங்களின் வருடாந்திர இடப்பெயர்வு பாதை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு அக்டோபர்-நவம்பர் மாதங்களிலும் கொண்டாட்டத்தின் அடையாளமாக விளங்கும் மஞ்சள் மேகங்களை தொடர்ந்து வந்து பட்டன் கோடோலி கிராமத்தில் ஒன்றுகூடுகின்றனர்.
ஹட்கனங்கேல் தாலுகாவின் அசாதாரண கிராமத்தில் உள்ள அவர்களின் பொது தெய்வமான விட்டல் பிர்தேவ் மகாராஜின் பிறந்தநாளைக் கொண்டாட கூடுகின்றனர். மாவட்டத்தில் உயிர்கள், வீடுகள் மற்றும் வயல்கள் எதற்கும் சேதமில்லாமல், கொண்டாட்ட மழையும் நடனமாடும் பக்தர்கள் வெள்ளமும் கோலாப்பூரை நிறைக்கிறது.
விட்டல் பிர்தேவை மேய்ப்பர்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலராகக் கருதும், தங்கர்கள் மற்றும் குருபர்களின் துணைக்குழுக்கள் மற்றும் துணை சாதிகளைச் சேர்ந்த பல சமூகங்கள், நாடு முழுவதிலுமிருந்து இந்த விழாவிற்காக மகாராஷ்டிராவிற்கு வருகிறார்கள். "விட்டல் பிர்தேவ் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் எங்கள் தெய்வீக பாதுகாவலர், எங்கள் ஆன்மீக ஆறுதல், எங்கள் வழிகாட்டி. அவர் அசைக்க முடியாத பற்று, நம்பிக்கை மற்றும் பக்தியின் சின்னம்," என்று ஒரு யாத்ரீகர் கூறுகிறார்.





























