ஃபாட்..!
துப்பாக்கியிலிருந்து பெங் பழத் தோட்டா வெளியேறியதும் கேட்கும் சத்தம் அது. இரண்டும் சேர்ந்து சட்டீஸ்கரின் ஜக்தல்பூர் டவுனில் நடக்கும் கோஞ்சா விழாவின் கொண்டாட்ட காவலராக பெருமை கொள்கிறது.
மூங்கிலால் செய்யப்பட்ட துப்பாக்கியில் ‘பெங்க்’ பழங்கள் தோட்டாக்களாக பயன்படுத்தப்படுகிறது. கடவுள் ஜகன்னாதரின் ரதத்தை சுற்றி நடத்தப் படும் பிரபல விழாவில் துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. ஜூலை மாதத்தில் நடத்தப்படும் நிகழ்வு பஸ்தாரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
“அருகாமை கிராமங்களில் இருந்து கோஞ்சா விழாவுக்கு வரும் மக்கள் நிச்சயமாக ஒரு துப்பாக்கி வாங்குவார்கள்,” என்கிறார் ஜக்தல்பூரில் வசிக்கும் வன்மலி பனிகிரகி. அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்தப்படாத காலமென ஒன்று அவருக்கு நினைவில்லை.
தோட்டாவாக பயன்படுத்தப்படும் சிறு வட்டமான பசிய மஞ்சள் நிறப் பழம், அருகே உள்ளே காடுகளில் தென்படும் வாலுளுவைக் கொடியில் காய்ப்பது ஆகும்.
கோஞ்சா விழா புரி பகுதியிலும் கொண்டாடப்படுகிறது. ஆணால் துப்பாக்கி மற்றும் பெங்க் பழம் கொண்டு வணக்கம் செலுத்துவது பஸ்தார் பகுதிக்கு மட்டுமே உரிய ஒன்று. ஒரு காலத்தில் காட்டு மிருகங்களை விரட்ட அந்த ரகத் துப்பாக்கி பயன்பட்டிருக்கிறது.









