ராஜஸ்தானின் பரன் மாவட்டம் மமோனி கிராமத்தில் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் பவுர்ணமி நாளில் வரும் இப்பண்டிகைக்கு ஒரு வாரம் வரை கொண்டாட்டம் நடைபெறுகிறது. அறுவடை காலம் தொடங்குவதற்கு முன் இறைவனுக்கும், இயற்கைக்கும் இக்கிராம மக்கள் நன்றி செலுத்துகின்றனர். ராஜஸ்தானின் மிகவும் ஏழ்மையான மாவட்டமாக பரன் கருதப்படுகிறது.
ஹோலிக்கு முதல்நாள் இரவு ஹோலிகா என்ற பெயரில் கோதுமை கதிர்கள் தீயில் எரிக்கப்படுகிறது. முன்பெல்லாம் அந்த சாம்பலை முகத்தில் பூசிக் கொள்வர். நாளடைவில், சாம்பலுக்கு பதிலாக வண்ணப் பொடிகள் வந்துவிட்டன. இப்போது நாடெங்கும் இப்பண்டிகை இப்படி தான் கொண்டாடப்படுகிறது.
















