பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகளில் ‘சுவாமிநாதன் ரிப்போர்ட்’ அல்லது ‘சுவாமிநாதன் கமிஷன் ரிப்போர்ட்’ ஆகியவையும் நிச்சயமாக இருக்கும். அந்த அறிக்கை முன் வைக்கும் முக்கியமான பரிந்துரையும் அவர்களுக்கு தெரியும்: குறைந்தபட்ச ஆதார விலை (MSP) = விளைச்சலுக்கு ஆகும் விரிவான செலவு + 50 சதவிகிதம் (C2 + 50 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்படும்).

அரசாங்கத்தாலோ அதிகாரவர்க்கத்தாலோ அறிவியல் நிறுவனங்களாலோ மட்டும் நினைவுகூரப்படுபவர் அல்ல பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் (NCF) அறிக்கையை அமல்படுத்தக் கோரும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் நிறைந்தவர் அவர்.

பெரிய பங்களிப்பும் தாக்கமும் ஏற்படுத்தக் கூடிய NCF அறிக்கைகளை ‘சுவாமிநாதன் அறிக்கை’ என்றுதான் இந்திய விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தார்.

ஆனால் அந்த அறிக்கைகளை இருட்டடிப்பு செய்து, UPA மற்றும் NDA ஆகிய இரு அரசாங்கங்களும் ஏமாற்றின. முதல் அறிக்கை டிசம்பர் 2004-ல் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை அக்டோபர் 2006-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் பொருட்டு நாம் கேட்கும் விவசாய நெருக்கடி விவாதிக்கும் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு என்பது நடக்கவே இல்லை. பிரச்சினை சார்ந்து ஒரு மணி நேர விவாதம் கூட நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை. முதல் அறிக்கை வந்து 19 வருடங்கள் ஆகிவிட்டன.

2014ம் ஆண்டில் சுவாமிநாதன் அறிக்கையையும் அதன் குறிப்பான அம்சமான குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது மோடி அரசாங்கம். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள், அத்தகைய பரிந்துரை அமல்படுத்தினால் சந்தை விலைகள் பாதிப்படையும் என வேகவேகமாக பிரமாணப் பத்திரத்தை அளித்தனர்.

ஒருவேளை அந்த அறிக்கைகள், விவசாயிகளுக்கு அதிக சார்புடன் இருப்பதாக UPA-வும் NDA-வும் கருதியிருக்கலாம். ஏனெனில் இரு அரசாங்கங்களும் இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்க முயன்று கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பிறகு விவசாயத்தை ஆக்கப்பூர்வமாக அணுகிய ஒரே விஷயம் அறிக்கைதான். அதை அளித்த சுவாமிநாதனை பொறுத்தவரை, விவசாய வளர்ச்சியை விளைச்சலை கொண்டு இல்லாமல்  விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதை கொண்டே அளவிட வேண்டும்.

Women are central to farming in India – 65 per cent of agricultural work of sowing, transplanting, harvesting, threshing, crop transportation from field to home, food processing, dairying, and more is done by them. They were up front and centre when farmers across the country were protesting the farm laws. Seen here at the protest sites on the borders of Delhi.
PHOTO • Shraddha Agarwal

இந்தியாவில் விவசாயத்தில் பெண்கள் பிரதான பங்கு வகிக்கின்றனர். விவசாய வேலையின் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை, போரடித்தல், பயிர் போக்குவரத்து, உணவு பதப்படுத்துதல், பால் உற்பத்தி போன்ற பல விஷயங்களை அவர்கள் செய்கின்றனர். நாட்டின் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும்போதும் அவர்கள்தான் முன்னணி வகித்தனர். இங்கிருக்கும் படங்கள் தில்லி எல்லையின் போராட்டக் களங்களில் எடுக்கப்பட்டவை

Bt-cotton occupies 90 per cent of the land under cotton in India – and the pests that this GM variety was meant to safeguard against, are back, virulently and now pesticide-resistant – destroying crops and farmers. Farmer Wadandre from Amgaon (Kh) in Wardha district (left) examining pest-infested bolls on his farm. Many hectares of cotton fields were devastated by swarming armies of the pink-worm through the winter of 2017-18 in western Vidarbha’s cotton belt. India has about 130 lakh hectares under cotton in 2017-18, and reports from the states indicate that the pink-worm menace has been widespread in Maharashtra, Madhya Pradesh and Telangana. The union Ministry of Agriculture of the government of India has rejected the demand to de-notify Bt-cotton
PHOTO • Jaideep Hardikar
Bt-cotton occupies 90 per cent of the land under cotton in India – and the pests that this GM variety was meant to safeguard against, are back, virulently and now pesticide-resistant – destroying crops and farmers. Farmer Wadandre from Amgaon (Kh) in Wardha district (left) examining pest-infested bolls on his farm. Many hectares of cotton fields were devastated by swarming armies of the pink-worm through the winter of 2017-18 in western Vidarbha’s cotton belt. India has about 130 lakh hectares under cotton in 2017-18, and reports from the states indicate that the pink-worm menace has been widespread in Maharashtra, Madhya Pradesh and Telangana. The union Ministry of Agriculture of the government of India has rejected the demand to de-notify Bt-cotton
PHOTO • Jaideep Hardikar

இந்தியாவில் விளைவிக்கப்படும் பருத்தியில் 90 சதவிகிதம் பிடி பருத்திதான். இந்த மரபணு மாற்ற பயிர் எதிர்க்க வேண்டிய பூச்சிகள், திறன் அதிகரித்து பூச்சிக்கொல்லியை மறுக்கும் தன்மையுடன் மீண்டு வந்து பயிர்களையும் விவசாயிகளையும் அழிக்கிறது. வர்தா (இடது) மாவட்டத்தின் அம்காவோனை சேர்ந்த விவசாயி வதாந்த்ரே, பூச்சி பாதித்த பருத்திக் காய்களை பார்க்கிறார். மேற்கு விதர்பாவில் 2017-18ன் குளிர்காலத்தில் இளஞ்சிவப்பு புழுக்கள் திரண்டு பல ஹெக்டேர் பருத்தி நிலங்களை அழித்தன. இப்புழுக்கள் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இடங்களில் பரவலாக இருப்பதாக மாநிலங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சகம் பிடி காட்டன் பயிரை நீக்கவில்லை

தனிப்பட்ட முறையில் 2005ம் ஆண்டில், NCF தலைவராக இருந்தபோது அவரை விதர்பாவுக்கு வரும்படி அழைத்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்பகுதியில் நாளொன்றில் 6-8 விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை இருந்தது. நிலவரம் கடுமையாக இருந்தது. அவற்றை பற்றி உங்களின் ஊடகங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. (2006ம் ஆண்டில், விவசாயம் நொடித்துப் போன ஆறு மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்கொலைகள் நேர்ந்து கொண்டிருந்தபோது ஆறு பேரளவுக்குதான் விதர்பாவை தாண்டி அச்செய்திகளை எழுதிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் மும்பையில் நடந்த லாக்மே ஃபேஷன் நிகழ்ச்சியை 512 முன்னணி பத்திரிகையாளர்கள் 100 தினசரி டிக்கெட்டுகளை கொண்டு செய்திகளாக்கிக் கொண்டிருந்தனர். ஃபேஷன் நிகழ்ச்சியின் கருப்பொருள் பருத்தி என்பதுதான் முரண்நகை. மாடல்கள் ஒய்யாரமாக பருத்தி ஆடைகளில் நடந்து வரும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அதை விளைவிக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரு மணி நேர விமானப் பயண தூரத்தில் அளப்பறிய எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.)

2005ம் ஆண்டில் விதர்பா நிலவரத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களாகிய நாங்கள் முன் வைத்த அழைப்பை, எங்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி வேகமாக ஏற்று, NCF குழுவுடன் அங்கு வந்து சேர்ந்தார் பேராசிரியர் சுவாமிநாதன்.

விலாஸ்ராவ் தேஷ்முக் அரசாங்கம் எச்சரிக்கை அடைந்தது. அதிகாரிகளுடன் கலந்துரையாடல், விவசாயக் கல்லூரி விழாக்கள் போன்ற தங்களின் வழிகாட்டுதலுடன் கூடிய பயணத் திட்டத்தில் அவரை உள்ளடக்கக் கடுமையாக முயன்றார்கள். ஆனால் பணிவான ஆளுமையான அவர், மகாராஷ்டிரா அரசாங்கம் விரும்பும் இடங்களுக்கு செல்வதாக ஒப்புக் கொண்ட அதே நேரம், நானும் ஜெய்தீப் ஹர்திகர் போன்ற சக பத்திரிகையாளர்களும் விடுத்த அழைப்பின்படி களத்துக்கும் செல்லவிருப்பதாக கூறி விட்டார்.

வர்தாவில் நாங்கள் அவரை ஷ்யாம்ராவ் கடாலேவின் வீட்டுக்கு அழைத்து சென்றோம். அவரின் இரு மகன்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். பசியால் வாடி, மகன்களின் இழப்பால் துயருற்று, உடல்நலம் குன்றி சற்று முன்தான் ஷ்யாம்ராவும் இறந்திருந்த விஷயம் தெரிய வந்தது. அவரின் இறப்பை சொல்லி, பயணத் திட்டத்தை மாற்ற அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் சுவாமிநாதன் இறுதி மரியாதை செலுத்த வேண்டுமென சொல்லி, சென்று செலுத்தவும் செய்தார்.

Young Vishal Khule, the son of a famer in Akola’s Dadham village, took his own life in 2015. Seen here are Vishal's father, Vishwanath Khule and his mother Sheela (on the right); elder brother Vaibhav and their neighbour Jankiram Khule with Vishal’s paternal uncle (to the left). Dadham, with a population of 1,500, is among the poorest villages in western Vidarbha, Maharashtra’s cotton and soybean belt, which has been in the news since the mid-1990s for a continuing spell of farmers’ suicides. The region is reeling under successive years of drought and an agrarian crisis that has worsened
PHOTO • Jaideep Hardikar

அகோலாவின் தாதாம் கிராமத்தின் விவசாயியின் மகனான இளம் விஷால் குலே 2015ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். இங்கு விஷாலின் தந்தை விஷ்வநாத் குலே மற்றும் தாய் ஷீலா (வலது) படத்தில் இருக்கின்றனர். அண்ணன் வைபவும் அண்டை வீட்டார் ஜானகிராம் குலே விஷாலின் அப்பா வழி மாமாவுடன் (இடது). மகாராஷ்டிராவின் பருத்தி மற்றும் சோயாபீன் பயிர் பகுதியான மேற்கு விதர்பாவிலுள்ள ஏழ்மை நிறைந்த கிராமங்களில் 1,500 பேர் வசிக்கும் தாதாமும் ஒன்று. 1990களின் மத்தியிலிருந்து தொடர் விவசாயிகளின் தற்கொலைகளால் பெயர் பெற்ற பகுதி அது. தொடர் பஞ்சம் மற்றும் மோசமான விவசாய நெருக்கடி நிலவும் பகுதி அது

அடுத்தடுத்து சென்ற வீடுகளில், தற்கொலை செய்தவர்களின் குடும்பத்தினர் சொல்வதை கேட்டு அவர் கண்ணீர் விட்டார். விவசாய நெருக்கடியில் இருந்த விவசாயிகள் வர்தாவின் வைஃபதில் ஒருங்கிணைத்த கூட்டத்துக்கும் அவர் சென்றார். அக்கூட்டத்தை சந்தேகமே இன்றி நம் விஜய் ஜவாந்தியாதான் ஒருங்கிணைத்திருந்தார். விவசாயப் பிரச்சினைகள் சார்ந்து இயங்கும் முக்கியமான அறிஞர் அவர். ஒரு கட்டத்தில், கூட்டத்திலிருந்து ஒரு மூத்த விவசாயி கோபத்துடன் எழுந்து, ஏன் அரசாங்கம் அவர்களை வெறுக்கிறது என கேள்வி கேட்டார். நாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்பதற்காக தீவிரவாதிகளாக வேண்டுமா என்றார். மனம் நொடிந்திருந்த பேராசிரியர் அவருடனும் அவரின் நண்பர்களுடனும் பொறுமையாக பேசினார்.

அப்போது சுவாமிநாதன் 80 வயதுகளில் இருந்தார். அவரிடம் இருந்த உறுதியும் நிதானமும் அமைதியும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவரின் பணி மற்றும் கருத்துகளை விமர்சித்தவர்களுடன் எவ்வளவு உண்மையாக அவர் பேசினார் என்பதையும் நாங்கள் கண்டோம். எத்தனை பொறுமையாக கவனித்தார், சமயங்களில் சில விமர்சனங்களுடன் கூட உடன்பட்டார் என்பதையும் நாங்கள் கண்டோம். அவரைத் தவிர, எனக்குத் தெரிந்த வேறு எவரும் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்த விமர்சகர்களை அழைத்து தன்னுடைய பயிற்சி வகுப்புகளிலோ நிகழ்ச்சிகளிலோ நேரடியாக அந்த விமர்சனங்களை கூற சொன்னதில்லை.

தன்னுடைய பணியில் எடுத்த முக்கியமான முடிவுகள் தற்போது அடைந்திருக்கும் தோல்விகளையும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் ஒப்புக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான குணம். அது அவரிடம் இருந்தது. பசுமை புரட்சிக்கு பிறகு, ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் ஏற்படுத்திய பாதிப்பு, கற்பனை செய்திராதளவு கட்டுப்பாட்டை மீறி சென்றதை கண்டு அதிர்ச்சி கொண்டதாக கூறினார். கடந்த சில பத்தாண்டுகளில் அவர் சுற்றுச்சூழல் மீதும் நீராதார பாதுகாப்பு மீதும் அதிக அக்கறை செலுத்துகிறார். கடந்த சில வருடங்களில், வரம்பு மீறி பயன்படுத்தப்படுகிற பிடி மற்றும் மரபணு மாற்ற பயிர்கள் குறித்தும் அவர் அதிகம் விமர்சித்திருக்கிறார்.

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதனின் மறைவால், முன்னணி வேளாண் விஞ்ஞானியை மட்டுமின்றி, ஒரு சிறந்த மனதையும் நல்ல மனிதரையும் இந்தியா இழந்திருக்கிறது.

இக்கட்டுரை செப்டம்பர் 29, 2023 அன்று முதன்முதலாக The Wire-ல் பிரசுரிக்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan