ஒவ்வொரு நாள் காலையும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பெரும்பாலானோர் ஆதிவாசி மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், உத்ரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தின் மாணிக்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தருகின்றனர். அவர்கள் ஜீப் அல்லது ஆட்டோவிற்கு பகிர்ந்து பணம் கொடுத்து அங்கு வருகின்றனர். அல்லது 100 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமத்தினர் சைக்கிளிலும் இங்கு வந்தடைகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட விறகு கட்டுகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு கட்டும் 20 முதல் 50 கிலோ வரை எடை உள்ளது. அவற்றை மத்திய பிரதேசம் மற்றும் உத்ரபிரதேசத்தின் எல்லையில் உள்ள பாதா காடுகளிலிருந்து சேகரிக்கின்றனர்.

இவற்றை அருகில் உள்ள சந்தைகளில் விற்பது அவர்கள் குடும்பத்திற்கு நிலையான வருமானத்தை கொடுப்பதாகும். மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சட்டங்கள், மரங்கள் வெட்டுவதை தடை செய்தபோதும், இவர்களுக்கு வேறு வழியில்லை. இங்குள்ள உள்ளூர்வாசிகள் விறகு விற்கும் தொழிலை செய்து வருபவர்களுக்கு சிறிதளவோ அல்லது சுத்தமாகவோ பயன்தரக்கூடிய நிலங்கள் இல்லை. அவர்களின் நிலைத்த வருமானத்திற்கான மற்றுமுள்ள ஒரு வழி கட்டிடங்கள் கட்டுமிடத்தில் தினக்கூலி அடிப்படையில் கட்டிட வேலை செய்வதாகும்.

அவர்கள் விறகு கட்டுகளை எடுத்து வருகின்றனர். அவை பெரும்பாலும் டெண்டு மற்றும் பலாஷ் மரங்களாக இருக்கின்றன. 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்வியிலிருந்தோ அல்லது 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷன்கார்காரிலிருந்தோ வரும் பயணிகள் ரயில்களில் மாணிக்பூரிலிருந்து பயணம் செய்து அலகாபாத் வழித்தடத்தில் உள்ள பல்வேறு சிறு நகரங்களுக்கு  எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர்.

காய்ந்துள்ள அளவு, தரம் மற்றும் விறகின் தேவை அதிகமுள்ள காலம் ஆகியவற்றைப்பொருத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் ரூ.150 முதல் ரூ.300 வரை ஈட்டுகின்றனர்.

Cutting wood, which will later be taken to the Manikpur railway station and then to markets in towns along the train route
PHOTO • Akshay Gupta

பின்னர் மாணிக்பூர் ரயில் நிலையத்திற்கும் மற்றும் மற்ற ரயில் நிலையங்களுக்கும் எடுத்துச்செல்ல உள்ள வெட்டப்பட்ட விறகுகள், அங்கிருந்து ரயில் செல்லும் பாதையில் உள்ள சிறிய நகரங்களுக்கும், சந்தைக்கும் எடுத்துச்செல்லக்கூடும்

Women crossing the sluice gate of a dam, carrying their daily load of firewood
PHOTO • Akshay Gupta

தாங்கள் தினந்தோறும் சேகரித்து வரும் விறகு கட்டுகளை சுமந்தபடி அணையின் நுழைவாயிலை கடக்கின்றனர்

Crossing a tributary of the Mandakini river after collecting wood from the nearby forest
PHOTO • Akshay Gupta

அருகில் உள்ள காடுகளிலிருந்து விறகுகளை சேகரித்துக்கொண்டு மந்தாகினி நதியின் துணை நதிகளை கடக்கின்றனர்

Carrying the firewood across rivers, roads and railways
PHOTO • Akshay Gupta

அதிக எடையுள்ள விறகுகளை சுமந்துகொண்டு ஆறுகள், சாலைகள் மற்றும் ரயில்பாதைகளை கடந்து செல்கின்றனர்

Waiting to load the firewood on the train at Shankargarh station
PHOTO • Akshay Gupta

ஷங்கர்கர் ரயில் நிலையத்தில் விறகு கட்டுகளை ரயிலில் ஏற்றிவிடுவதற்காக காத்திருக்கின்றனர்

Waiting for the train to reach the town of Chitrakoot Dham (Karwi) to sell the logs
PHOTO • Akshay Gupta

சித்திரகூட் நகரை ரயில் நெருங்குகிறது, இங்கு சிலர் விறகுகளை விற்பதற்காக இறங்கிக்கொள்வார்கள்

A woman unloads the firewood as the train stops at Jasra
PHOTO • Akshay Gupta

ஜாஸ்ராவில் ரயில் நிற்கும்போது, பெரிய கட்டுகளை ஒவ்வொன்றாக இறக்குகின்றனர்

Tired,  returning from the daily chaos of survival. Selling firewood barely brings Rs. 100-300 a day, depending on weather conditions, market demand, and the quality of wood
PHOTO • Akshay Gupta

விறகுகளை விற்றுவிட்டு திரும்பும்போது, தங்கள் அன்றாட பணிகளை முடித்த களைப்பில் வருகின்றனர். விறகுகளை விற்பதன் மூலம் தரம், காலநிலை மற்றும் தேவையைப்பொருத்து நாளொன்றுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை மட்டுமே பெறமுடிகிறது

இந்த செய்தியில் எந்தவொரு நபரின் பெயரும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் விறகு விற்பவர்கள் அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை

தமிழில்: பிரியதர்சினி. R.

Akshay Gupta

Akshay Gupta is a freelance photojournalist from Chitrakoot Dham (Karwi), now based in Delhi.

Other stories by Akshay Gupta
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.