அகமெதோஸ் பாரிஸுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவரின் தந்தை அனுமதிக்கவில்லை. “வெளியுலகத்தை பார்த்துவிட்டால், நீ திரும்பி வர மாட்டாய்,” என்றார் அவர். அந்த வார்த்தைகளை நினைவுகூரும் 99 வயது அகமெதோஸின் முகம் புன்னகை உதிர்க்கிறது.

சிதார் கருவி உருவாக்கும் ஐந்தாம் தலைமுறை 30 வயதுகளில் இருந்தபோது, பாரிஸிலிருந்து இரு பெண்கள், சிதார் தயாரிக்கும் கலையை கற்க டவுனுக்கு வந்திருந்தனர். “அனைவரிடமும் விசாரித்து விட்டு, அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வந்தார்கள். நானும் கற்றுக் கொடுத்தேன்,.” என்கிறார் அகமெதோஸ் இரண்டு மாடி வீட்டில் தரைதளத்தில் அமர்ந்து கொண்டு. அவரின் வீடு, பல தலைமுறைகளாக அவரது குடும்பம் வசித்து வரும் மிரஜின் சிதார் தயாரிப்பு தெருவில் இருக்கிறது.

“அச்சமயத்தில் எங்கள் வீட்டில் கழிவறை கிடையாது,” என தொடர்கிறார் அகமெதோஸ்.  “வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவர்களை எங்களை போல் வயல்களுக்கு போக சொல்ல முடியாதென்பதால், ஒரே நாளில் கழிவறை கட்டினோம்,” என்கிறார். அவர் பேசுகையில், சிதார் கருவி ராகம் சேர்க்கும் சத்தமும் கேட்கிறது. அவரது மகனான கவுஸ், வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இரு இளம்பெண்களும் அகமெதோஸின் குடும்பத்துடன் ஒன்பது மாதங்கள் வசித்தனர். ஆனால் இறுதிக் கட்டத்தை கற்கும் முன்பு அவர்களின் விசா காலாவதி ஆனது. சில மாதங்கள் கழித்து, மிச்ச பாடத்தை கற்பிக்க அவரை அவர்கள் பாரிஸுக்கு வரும்படி கூறினர்.

ஆனால் அப்பாவின் பேச்சை கேட்டு அகமெதோஸ் வீட்டிலேயே தங்கிவிட்டார். மகாராஷ்டிராவில் இக்கலைக்கு பெயர் பெற்ற சங்க்லி மாவட்டத்திலேயே கலைஞராக தொடர்ந்தார். அகமெதோஸின் குடும்பம் இந்த வணிகத்தை 150 வருடங்களுக்கும் மேலாக செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஏழு தலைமுறைகள். 99 வயதில் அவர் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

Left: Bhoplas [gourds] are used to make the base of the sitar. They are hung from the roof to prevent them from catching moisture which will make them unusable.
PHOTO • Prakhar Dobhal
Right:  The gourd is cut into the desired shape and fitted with wooden sticks to maintain the structure
PHOTO • Prakhar Dobhal

இடது: போப்லாக்கள் (பூசணிக்காய்) சிதாரின் அடிபாகத்தை தயாரிக்க உதவுகிறது. அவற்றில் ஈரம் பட்டால் பயன்படாமல் போய்விடும் என்பதால் அதை தடுக்க கூரையிலிருந்து தொங்க விடப்படும். வலது: விரும்பும் வடிவத்தில் பூசணிக்காய் வெட்டப்பட்டு மரக் குச்சிகளை கொண்டு வடிவம் தக்க வைக்கப்படும்

அகமெதோஸின் வீடு மற்றும் பட்டறையை போலவே, பூசணிக்காய்கள் இப்பகுதியின் பெரும்பாலான வீட்டுக் கூரைகளிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கிறது.

சிதார் கருவியின் அடிபாகத்தை தயாரிக்க பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. பூசணிக்காய், மிராஜிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பந்தர்பூர் பகுதியில் விளைவிக்கப்படுகிறது. சுரைக்காயின் கசப்பினால் அதை எவரும் விரும்ப மாட்டார்கள் என்பதால், அதை சிதார் தயாரிப்பாளர்களுக்கு விற்க மட்டுமே விவசாயிகள் விளைவிக்கின்றனர். குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிருக்கு விலை ஏறி விடக் கூடாது என்பதால் அது பயிரிடப்படும் கோடைகாலத்திலேயே கலைஞர்கள் முன்பதிவு செய்து விடுகின்றனர். தரையிலுள்ள ஈரப்பதம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பூசணிக்காய்கள், கூரையிலிருந்து தொங்கவிடப்படும். தரையில் வைத்தால், பாசி படர்ந்து கருவியின் ஆயுட்காலத்தை குறைக்க காரணமாகி விடும்.

”தொடக்கத்தில் நாங்கள் 200-300 ரூபாய் ஒரு காய்க்கு கொடுப்போம். இப்போது 1,000 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. 1,500 ரூபாய்க்கு கூட விற்கப்படுகிறது,” என்கிறார் விரும்பும் வடிவத்துக்கு பூசணிக்காய்க்கு வெட்டி சுத்தப்படுத்தி தரும் இம்தியாஸ். உயரும் போக்குவரத்து செலவும் கூட சுரைக்காயின் விலையைக் கூட்டியிருக்கிறது. கையால் உருவாக்கப்படும் இசைக்கருவிகளுக்கான தேவை குறைந்து வருவதால், விவசாயிகள் குறைவாக பூசணிக்காய்களை விளைவிப்பதும் இன்னொரு பிரச்சினை என்கிறார் இம்தியாஸ். இதனால் அவற்றின் விலை அதிகரிக்கிறது.

பூசணிக்காய் தயாரானதும் ஒரு மர கைப்பிடி செருகப்பட்டு வடிவம் முழுமையாகும். கலைஞர்கள் பிறகு வடிவமைக்கத் தொடங்குவார்கள். வடிவத்தை முடிக்க ஒரு வாரம் பிடிக்கும். கையாள் துளை போடும் கருவிகள் மற்றும் ப்ளாஸ்டிக் ஸ்டென்சில்கள் கொண்டு, இர்ஃபான் போன்ற திறமையான வடிவமைப்பாளர்கள் கட்டையை செதுக்குவார்கள். “நீண்ட நேரத்துக்கு முதுகு வளைந்து அமர்ந்திருப்பது முதுகுக்கு வலியையும் பிற பிரச்சினைகளையும் கொடுக்கும்,” என்கிறார் 48 வயதாகும் அவர். “இந்த வேலையால் உடல் கடும் பிரச்சினையை காலவோட்டத்தில் சந்திக்கிறது,” என்கிறார் அவரின் மனைவி ஷாஹீன்

காணொளி: மிராஜின் சிதார் தயாரிப்பாளர்கள்

“கலை அல்லது பாரம்பரியத்துக்கு எதிரானவன் அல்ல நான்,” என்கிறார் ஷாஹீன். “கடின உழைப்பால் என் கணவர் பெற்றிருக்கும் அடையாளத்தில் எனக்கு பெருமை.” இல்லத்தரசியும் இரண்டு குழந்தைகளின் தாயுமான அவர், இக்கைவினைத்தொழிலுக்கு செலுத்தப்படும் உடலுழைப்புக்கு ஏற்ப வருமானம் வருவதில்லை என நம்புகிறார். “என் கணவரின் தினசரி வருமானத்தில்தான் நாங்கள் சாப்பிடுகிறோம். இந்த வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம்தான். அதே நேரத்தில் எங்களின் தேவைகளை நான் ஒதுக்கி விட முடியாது,” என்கிறார் அவர் சமையலறையில் நின்று கொண்டு.

அவர்களின் இரு மகன்களும் தாத்தாவின் சகோதரரிடமிருந்து சிதார் வாசிக்க கற்றுக் கொள்கின்றனர். “அவர்கள் நன்றாக வாசிக்கின்றனர்,” என்கிறார் ஷாஹீன். “எதிர்காலத்தில் இருவரும் நல்ல பெயர் எடுப்பார்கள்.”

சிதார் தயாரிப்பில் இருக்கும் பலரும் தயாரிப்பு முறையில் ஏதோவொரு கட்டத்தை மட்டும்தான் செய்வார்கள். பூசணிக்காய் அறுப்பார்கள் அலல்து வடிவமைப்பார்கள். அதற்கான தினசரி கூலியை பெற்றுக் கொள்வார்கள். வடிவமைப்பாளர்களும் பெயிண்டர்களும், வேலையின் இயல்புக்கும் அளவுக்கும் ஏற்ப 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவார்கள். ஆனால், சுரைக்காயை கழுவுவது தொடங்கி, இறுதியாக பூச்சு போட்டு சுருதி சேர்ப்பது வரை மொத்த வேலையையும் செய்யும் சிலரும் இருக்கின்றனர். கையால் செய்யப்படும் சிதார் ரூ.30-லிருந்து 35,000 ரூபாய் வரை விலை பெறுகிறது.

குடும்பத்திலுள்ள பெண்கள் பெரும்பாலும் இக்கலையிலிருந்து விலக்கப்படுகிறார்கள். “என் மகள்கள் இப்போது தொடங்கினாலும் சில நாட்களிலேயே கற்றுக் கொள்வார்களென உறுதியாக கூறுகிறேன். அவர்கள் இருவரும் கல்விரீதியாக நல்ல நிலையில் இருப்பது எனக்கு பெருமை,” என்கிறார் இரு மகள்களின் தகப்பனான கவுஸ். 55 வயதாகும் அவர் சிறு வயது தொடங்கி சிதார்களுக்கு பொலிவு கொடுத்து பொருத்தும் வேலையை செய்து வருகிறார். “பெண்கள் ஒரு கட்டத்தில் மணம் முடித்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அவர்கள் சிதார் தயாரிக்காத குடும்பத்தில் மணம் முடிக்க வேண்டி வரும். அங்கு அந்த திறமை பயனின்றி போய்விடும்,” என்கிறார் அவர். அவ்வப்போது பெண்கள் மெருகேற்றுவார்கள் அல்லது சிறு உதவி செய்வார்கள். ஆனால் பெண்கள் வேலை பார்த்தால், அந்த குடும்பத்தின் ஆண்களை அச்சமூகம் மதிப்பதில்லை. மணமகனின் குடும்பத்திலும் ஏற்க மாட்டார்கள் என அவர்களிடம் கவலை இருக்கிறது.

Left:  Irfan Sitarmaker carves patterns and roses on the sitar's handle using a hand drill.
PHOTO • Prakhar Dobhal
Right: Wood is stored and left to dry for months, and in some instances years, to season them
PHOTO • Prakhar Dobhal

இடது: வடிவங்களையும் ரோஜாக்களையும் சிதாரின் கைப்பிடியில் துளையிடும் கருவியால் உருவாக்குகிறார் இர்ஃபான். வலது: மரக்கட்டை சேமித்து வைக்கப்பட்டு மாதக்கணக்கில் காய வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வருடக்கணக்கில் கூட காய வைக்கப்படுகிறது

Left: Fevicol, a hammer and saws are all the tools needed for the initial steps in the process.
PHOTO • Prakhar Dobhal
Right: Imtiaz Sitarmaker poses with the sitar structure he has made. He is responsible for the first steps of sitar- making
PHOTO • Prakhar Dobhal

இடது: ஃபெவிகால், சுத்தியல் மற்றும் ரம்பங்கள்தான் உருவாக்கத்தின் தொடக்கத்துக்கு தேவைப்படும் உபகரணங்கள். வலது: இம்தியாஸ், தான் உருவாக்கிய சிதார் வடிவத்துடன் போஸ் கொடுக்கிறார். சிதார் தயாரிப்பின் முதல் கட்டத்துக்கு அவர்தான் பொறுப்பு

*****

நரம்பு வாத்திய தயாரிப்பு வணிகத்தில் சிதார் தயாரிப்பாளர்கள் தங்களுக்கான பெயரை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீரஜ்ஜின் அரசனாக இருந்த  ஸ்ரீமாந்த் பாலாசாகெப் பட்வர்த்தன் II ஆட்சியில் பெற்றார்கள். இசை ஆதரவாளராக இருத அவர்,  ஆக்ரா மற்றும் பெனாரஸ் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து இசைஞர்களை தம் அவைக்கு வரவழைத்திருக்கிறார். ஆனால் வரும் வழியில் பல கருவிகள் பழுதாகி விடும். பழுதை நீக்கும் ஆட்களை அரசர் கண்டறிய வேண்டியிருந்தது.

“அவரின் தேடல் இறுதியில் ஷிகால்கர் சமூகத்தை சேர்ந்த மொகினுதீன் மற்றும் ஃபரீத்சாகெப் ஆகிய இரு சகோதரர்களை கண்டடைவதில் முடிந்தது,” என்கிறார் ஆறாம் தலைமுறையாக சிதார் தயாரிக்கும் இப்ராகிம். மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஷிகல்கர்கள் உலோகக் கொல்லர்களாக இருந்து ஆயுதங்களையும் கருவிகளையும் தயாரித்தார்கள்.  “அரசரின் வேண்டுகோளால், அவர்கள் இசைக்கருவிகளையும் பழுது பார்க்க முயன்றார்கள். காலப்போக்கில், அதுவே அவர்களின் பிரதான தொழிலாக மாறியது. அவர்களின் பெயர்கள் கூட ஷிகால்கரிலிருந்து சிதார்தயாரிப்பவர் என மாறிவிட்டது. இன்று அவர்களின் வழி தோன்றல்கள், அப்பெயர்களைதான் தங்களின் பெயர்களில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் புதிய தலைமுறை இந்த பாரம்பரியத்தை தொடர வணிகமும் தேவை. ஷாஹீன் மற்றும் இர்ஃபானின் மகன்களை போல பிற குழந்தைகளும் சிதாருடன் விளையாடி, அவற்றை தயாரிக்கக் கற்றுக் கொண்டன.

பல இசைக்கருவிகளின் இசையை மென்பொருளே தயாரிக்கும் சூழல் வந்தபிறகு, கையால் தயாரிக்கப்படும் சிதார்களையும் தம்புராக்களையும் இசைக்கலைஞர்கள் கைவிட்டு விட்டனர். இதனால் வணிகம் பாதிப்பை கண்டிருக்கிறது. இயந்திரங்கள் தயாரிக்கும் சிதார்கள், கையால் தயாரிக்கும் சிதார்களை காட்டிலும் விலை குறைவாக விற்கப்படுவதும் சிதார் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை கொடுத்திருக்கிறது.

Left: Gaus Sitarmaker is setting the metal pegs on the sitar, one of the last steps in the process. The pegs are used to tune the instrument.
PHOTO • Prakhar Dobhal
Right: Japanese steel strings sourced from Mumbai are set on a camel bone clog. These bones are acquired from factories in Uttar Pradesh
PHOTO • Prakhar Dobhal

இடது: சிதார் தயாரிப்பின் கடைசி கட்டமான சிதார் உலோக மெட்டுகளை வைக்கிறார் கவுஸ். கருவியில் சுருதி சேர்க்க இந்த மெட்டுகள் பயன்படுகிறது. வலது: மும்பையிலிருந்து வரவழைக்கப்படும் ஜப்பானிய ஸ்டீல் துண்டுகள் ஒட்டக எலும்பு துண்டுக்கு மேலாக இணைக்கப்பட்டிருக்கும். இந்த துண்டுகள் உத்தரப்பிரதேச ஆலைகளிலிருந்து பெறப்படுகின்றன

Left: Every instrument is hand polished  multiple times using surgical spirit.
PHOTO • Prakhar Dobhal
Right: (from left to right) Irfan Abdul Gani Sitarmaker, Shaheen Irfan Sitarmaker, Hameeda Abdul Gani Sitaramker (Irfan’s mother) and Shaheen and Irfan's son Rehaan
PHOTO • Prakhar Dobhal

இடது: ஒவ்வொரு கருவியும்  பல முறை கையால் தேய்க்கப்பட்டு மெருகேற்றப்படுகிறது. வலது: (இடதிலிருந்து வலது) இர்ஃபான் அப்துல் கனி, ஷாஹீன் இர்ஃபான், ஹமீதா அப்துல் கனி (இர்ஃபானின் தாய்) மற்றும் ஷாஹீன் மற்றும் இர்ஃபானின் மகன் ரெஹான்

பிழைப்பு ஓட்டுவதற்ஆக சிதார் தயாரிப்பாளர்கள் சிறியளவு சிதார்களை செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்கின்றனர். ரூ.3,000 - 5,000 வரை விலை வைத்து விற்கப்படும் அவை, பிரகாசமான நிறங்களுடன் பூசணிக்காய்க்கு பதிலாக செயற்கையான பொருள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

அரசாங்க அங்கீகாரமும் உதவியும் வர தாமதமாக்கிறது. கலைஞர்களுக்கென பல வகை திட்டங்கள் இருந்தாலும் இக்கருவிகளை தயாரிப்பவர்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. “எங்களையும் எங்கள் முயற்சிகளையும் அரசாங்கம் அங்கீகரித்தால், இன்னும் நல்ல கருவிகளை நாங்கள் செய்ய முடியும். அது, கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியளித்து, மதிக்கப்படும் உணர்வையும் அவர்களுக்கு வழங்கும்,” என்கிறார் இப்ராகிம். அகமெதோஸ் போன்ற மூத்த கலைஞர்கள், இக்கலைக்கென தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணிப்பதில் கவலையில்லை என்கின்றனர். “இன்றும் கூட, எனக்கேதும் உதவியோ பணமோ வேண்டுமா என நீங்கள் கேட்டால், நன இல்லை என்பேன். எப்போதும் நான் கேட்க மாட்டேன்,” என்கிறார் அவர்.

இணையமும் விற்பனையை தொடங்கியிருப்பதால், கடை உரிமையாளர்களுக்கும் தரகர்களுக்கும் கமிஷன் வழங்கும் தேவையின்றி, வாங்குபவர்கள் நேரடியாக ஆர்டர் செய்து கொள்கின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நாட்டுக்குள் இருப்பவர்கள்தான். சர்வதேச வாடிக்கையாளர்கள் இணையம் வழியாக தொடர்பு கொள்கின்றனர்.

கையால் சிதார் செய்யப்படுவதையும் சிதார் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றி அவர்கள் பேசுவதையும் காணொளியில் பாருங்கள்

தமிழில் : ராஜசங்கீதன்

Student Reporter : Swara Garge

Swara Garge is a 2023 PARI intern and a final year Masters student from SIMC, Pune. She is a visual storyteller interested in rural issues, culture and economics.

Other stories by Swara Garge
Student Reporter : Prakhar Dobhal

Prakhar Dobhal is a 2023 PARI intern pursuing a Master's degree from SIMC, Pune. Prakhar is an avid photographer and documentary filmmaker interested in covering rural issues, politics and culture.

Other stories by Prakhar Dobhal
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan