
SANGUR, PUNJAB
|THU, MAR 11, 2021
இந்தியாவின் பல இசைக்கருவிகள்
இந்தியாவில் பல வகை கிராமங்கள் இருப்பது போல, அந்த கிராமங்களின் இசைக்கருவிகளும் பல வகை இருக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் நரம்புக்கருவி ருபாப் மற்றும் தம்புரான் போன்ற கஞ்சாரி, மேற்கு வங்கத்தின் பாணம் மற்றும் கப்குபி, மகாராஷ்டிராவின் பெரிய எக்காளம் போன்ற தர்பா, அசைந்தாடும் புல்லாங்குழல், சத்தீஸ்கரின் பான்ஸ் பஜா, தும்சி, தோல், தோலக், தாப் மற்றும் பல மாநிலங்களின் தொல்லு. பெரும்பாலும் இவற்றை போன்ற கருவிகள், பல தலைமுறைகளாக பாரம்பரியமாக கருவிகள் செய்து வரும் கலைஞர்களால் செய்யப்படுபவை. நரசிங்கப்பேட்டையில் நாதஸ்வரம் செய்வார்கள், மைலாப்பூரில் மிருதங்கம் செய்வார்கள், காசர்கோட்டில் மூங்கில் மேளம் செய்வார்கள். பெருவெம்பாவில் மேளவாத்தியங்கள் செய்வார்கள். இத்தகைய இசை பாரம்பரியங்களில் பல சரிந்து வந்தாலும் பலர் நல்லபடியாக வாழ்ந்து வருவதை இந்த பாரி கட்டுரைகள் காட்டுகின்றன
Author
Translator
38. அன்பின் இனிய இசை
வாஹ் யா என்பது நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி சமூகத்தின் இசைக்கருவி ஆகும். காதலுக்கு இசைக்கப்படும் கருவி. வருடாந்திர அவுலோங் வசந்த விழாவில் அந்த இசையைக் கேளுங்கள்
37. தாளங்களை வடிவமைக்கும் தாகிசாரின் கைவினைஞர்கள்
இர்ஃபான் ஷேக்கும் அவரின் சமூகத்தினரும் மும்பையின் தகிசார் பகுதியில் வசிக்கின்றனர். தோலக் மேளம் தயாரிக்கும் தங்களின் பாரம்பரியத்தை நவீன கால சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்
36. தர்பியின் காற்றுப் பாடல்
இந்த இசைக்கலைஞர் தர்பி (தர்பா என்றும் அழைக்கப்படுகிறது) வாசிப்பதை காணுங்கள்
35. மேடையேறும் போடா கலைஞர்கள்
அஸ்ஸாமின் போடோ சமூக சுபுன்ஸ்ரீ மற்றும் பகுரும்பா ஆகியோர் சிஃபுங் (நீள புல்லாங்குழல்), காம் (மேளம்) மற்றும் செர்ஜா (வயலின்) ஆகியவற்றை வாசிக்கும் இசையுடன் நடனமாடுவதைக் காணுங்கள்
34. ‘கர்தால்கள் நிலைக்கும் என்று நம்புகிறேன்’
அனுபாராம் சுதார், ராஜஸ்தானின் பிரசித்தி பெற்ற தாளக்கருவியான கர்தாலை உருவாக்கும் கடைசி கைவினைஞர்களில் ஒருவர். மற்றவர்கள், அதிக வருமானம் கிடைப்பதால், மரப்பொருட்கள் தயாரிப்பதற்காக நகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்
33. மோர்ச்சாங்குகள் செய்யக் கழியும் ஆயுள்
மோகன்லால் லோஹர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோர்ச்சாங்குகளை செய்து வருகிறார். ராஜஸ்தான் பாலைவனம் முழுவதும், இந்த தாள வாத்தியங்களின் இசையைக் கேட்கலாம்
32. மஜூலியின் பத்யோகர்களின் தடுமாறும் தாளம்
ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் அசாமிய திருவிழாக்களில், தாளவாத்தியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தாளவாத்தியங்களான டோல்கள், கோல்கள் மற்றும் பலவற்றைச் செய்யும் மற்றும் பழுதுபார்க்கும் திறமையான கைவினைஞர்கள், புதிய பசு வதைத் தடை சட்டத்தினால், விலைவாசி உயர்வுக்கும், அதன் பயன்பாட்டிற்காக துன்புறுத்தலுக்கும் உள்ளாவதாக கூறுகிறார்கள்
31. ஒலி மங்கும் சிதார் இசை
மகாராஷ்டிராவின் இந்த டவுனை சேர்ந்த குடும்பங்கள், சிதார் மற்றும் தம்புரா போன்ற நரம்பு வாத்தியங்களை தயாரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் இக்கலையை கற்பதில்லை
30. பலாமரத்தின் இன்னிசை
இந்தியாவின் மிக முக்கியமான இசைக்கருவிகள் பலவும் பலாமரப் பலகைகளால் செய்யப்படுபவை. பலாமரம் தமிழ்நாட்டில் பரவலாகப் பயிர் செய்யப்படுகிறது. பண்ருட்டியிலும், தஞ்சாவூரிலும் இருக்கும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள், இந்த மரத்தைச் செதுக்கி அதனுள் ராகத்தையும் தாளத்தையும் கொண்டு வருகிறார்கள்
29. ‘என் தர்பாதான் என் தெய்வம்’
பிக்லியா லட்கியா திண்டா ஒரு வார்லி ஆதிவாசி ஆவார். 80 வயது இசைஞரான அவர், வல்வாண்டேவில் வசிக்கிறார். மூங்கில் மற்றும் காய்ந்த சுரைக்காய் இணைக்கப்பட்ட பாரம்பறிய காற்று வாத்தியமான தர்பா வாசிக்கும் கலைஞர் அவர். இசை மற்றும் நம்பிக்கை பற்றி அவர் பேசுவதை கேளுங்கள்
28. நாராயண் தேசாயின் சிக்கனமான ஷெனாய்
கர்நாடகாவின் மனகாபூர் கிராமத்தில் பாரம்பரிய ஷெனாய்களுக்கான தேவை சரிந்து வருவதால், 65 வயது கைவினைஞர் பல புதுமைகளை செய்து இக்கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்
27. மும்பை ரயில்களில் ஊசலாடுபவர்கள்
ராஜஸ்தானி புலம்பெயர் தொழிலாளரான கிஷன் ஜோகி, மும்பையின் நகர்ப்புற ரயில்களில் சாரங்கி வாசிக்கிறார். தந்தையின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த இதை செய்வதாக சொல்லும் அவர், வாழ்க்கை ஓட்டுவது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்
26. அமைதியாக்கப்படும் மதுரையின் கொம்பு வாத்தியங்கள்
கோவிட் ஊரடங்கினால் எந்த கோவில் திருவிழாவும் பொது நிகழ்வும் நடக்காமல் தமிழ்நாட்டை சேர்ந்த கொம்பு கலைஞர்கள் வருமானமின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் கவலை என்னவோ வீழ்ச்சியுறும் கலையை பற்றிதான் இருக்கிறது
25. மாலையில் இருக்கும் பூக்களைப்போல நடனம் ஆடுகின்றனர்
குளிர்கால மாதங்களின் கொண்டாட்டங்களின் போது சத்தீஸ்கரின் கோண்டு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி ஹல்கி மந்திரி மற்றும் கோலாங் நடனங்களை நிகழ்த்துகின்றனர் மேலும் ரேலா பாடல்களையும் பாடுகின்றனர்.
24. தினகர் ஐவாலேவின் புல்லாங்குழல்களில் நிறைந்திருக்கும் உழைப்பு
மகாராஷ்டிராவின் கோடோலி கிராமத்தைச் சேர்ந்த தேர்ந்த கைவினைஞரும் இசைக்கலைஞருமான தினகர் ஐவாலே 1.5 லட்சம் மணி நேரம் புல்லாங்குழல் தயாரிப்பதில் நிறைவு செய்திருக்கிறார் - ஆனால், ஊரடங்கு மற்றும் பிற சவால்கள் காரணமாக பணியும் இசையும் மங்கிவிட்டன
23. மணிராமின் புல்லாங்குழல் இசையும், ஆர்ச்சாவின் காடுகளும் மறைகின்றன
மணிராம் மண்டாவி, சட்டிஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தின் கோண்ட் ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் தயாரிப்பவர். ஒரு காலத்தில் காடுகளில் விலங்குகள், மரங்கள் மற்றும் அவரது அடையாளமான காற்றில் அசைக்கும் புல்லாங்குழல் செய்வதற்கு தேவையான மூங்கில்கள் அதிகம் இருந்ததை நினைவு கூறுகிறார்
22. நாட்டுப்புற இசையில் அதிர்ந்த மும்பை போராட்டம்
ஜனவரி கடைசியில் மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மகாராஷ்டிராவின் தஹானு தாலுக்காவைச் சேர்ந்த பழங்குடியின சமூக தும்சி, தர்பா கலைஞர்கள் பாடல், நடனம் வழியாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தனர்
21. தாளத்தை தக்கவைக்க போராடுகிறது பெருவெம்பா
கோவிட்-19 ஊரடங்கு, அவர்களின் தாள கருவிக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் விலங்களின் தோலை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள கடினமான நிலை ஆகியவற்றால் கேரளாவின் பெருவெம்பா கிராமத்தில் உள்ள கடாச்சி கொல்லன் கைவினைஞர்கள் தங்களின் நிலையான வருமானத்தை இழக்கிறார்கள்
20. சட்டீஸ்கரின் மேய்ப்பர்கள் இசைக்கும் பான்ஸ் கீத் கருவி
மத்திய சட்டீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்ராம், பாபுலால் மற்றும் சகாதேவ் யாதவ் ஆகியோர் இன்றும் பான்ஸ் பஜா கீத் என்ற பாரம்பரிய இசைக்கருவியை இசைத்து வருகிறார்கள். இவர்கள் இசைக்கும் பாடல்களும் அவ்வளவு பிரபலம் இல்லை. இவர்கள் கால்நடைகள் மேய்க்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்
19. இசையும் நடனமுமாக தில்லிக்குச் செல்வோம்
மஹாராஷ்ட்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பெரும்பாலானோர் ஆதிவாசிகள், வேன், ஜீப், கார் மற்றும் டெம்போக்களில் வந்து டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள முயற்சிக்கின்றனர். அந்த வண்ணமயமான கேரவனில் உள்ளவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் உறுதியுடன் உள்ளனர்
18. பிர்பும்மில் குறைந்து வரும் நீர், காடு, நிலம் என்ற சப்தங்கள்
ஆதிவாசி சமூகங்களில் வேரூன்றியிருந்த, புகழ்பெற்ற இசைக்கருவிகளின் சப்தங்கள் குறைந்து வருகின்றன. மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் மாவட்டம் கலாச்சாரத்தை மீறி செல்வதே அதற்கு காரணமாகும்
17. நலிவடைந்தாலும் துர்கா பூஜைக்கு சென்ற தாக்கி வாத்தியக்காரர்கள்
வங்காள கிராமங்களின் பாரம்பரிய மேளக்காரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமம்
16. அவரோகணத்திலிருந்து ஆரோகணத்திற்குத் திரும்புதல்
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த பரம்பரை ஹார்மோனிய பழுதுநீக்குவோர் பலரும் ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவின் ரேனாபூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிக்கியுள்ளனர். வாழ்க்கையை எப்படிச் சமாளிக்கின்றனர் என அவர்கள் பாரியிடம் பகிர்ந்து கொண்டனர்
15. சிவப்பு காராமணியும் சோளமும் ருபாபும் காஞ்சரியும்
சம்பா மாவட்ட விவசாய இசைக்கலைஞர் பிரேம்லால் ஒரு விழாவில் இசைப்பதை பார்ப்போம்
14. நுவாபடாவின் கவிஞர்கள் மற்றும் தானியத்தின் பெண் தெய்வம்
அவர்களின் கைவினை கலை குறைந்து வருகிறது. எனவே அதை மீட்க மாநிலத்தின் ஆதரவு தேவை. ஒடிஷாவின் டெப்குருக்கள் சிலைகள், நெல்லில் இருந்து பொருட்கள் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். கிராமம் கிராமமாக சென்று லட்சுமி புராண கதைகளை கூறி வருகிறார்கள்
13. மயிலாப்பூரில் மிருதங்கம் தயாரிக்கும் தலித் கிறிஸ்துவ குடும்பம்
சென்னையிலும் சரி, வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, கர்னாடக இசை உலகத்தைச் சேர்ந்த யாரிடம் மிருதங்கம் தொடர்பாக நீங்கள் கேட்டாலும் ஜேசுதாஸையும் அவரது மகன் எட்வினையும் அவர்களுக்குத் தெரியும். இன்னும் அவர்கள் சமூகரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்டாலும் அவர்கள் மிருதங்கங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்
12. காசர்கோட்டின் மூங்கில் பறை இசை கலைஞர்கள்
கேரளாவின் பரப்பா கிராமத்தில், பண்டிகைகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது மாவிலன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் புல்லைக் கொண்டு செய்த பறையை இசைக்கின்றனர், வருடத்தின் மீதி நாட்களில் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர்.
11. பாட்டும் கூட்டுக் குரலும் முழக்கங்களும்!
நாசிக்கில் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் நிறைய விவசாயிகள் தங்களின் மரபான இசைக்கருவிகளைக் கொண்டுவந்து, பாட்டும் இராகமுமாக பேரணிக்கு வலுகூட்டினர்
10. அச்சோட்டியின் இசையும் கூத்தும்
சத்திஸ்கரிலிருந்து வரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நடனக் குழுவில் சேர்வதற்காக ஆண்டுதோறும் மேற்கு ஒடிசாவின் ராய்ப்பூர் சதுக்கத்தில் திரளும் தலித் சமூக இசைக் கலைஞர்கள்
9. மலைகளில் தஞ்சமடையும் புலம்பெயர் இசைக்கலைஞர்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் பல நூற்றாண்டுகள் பழமையான பிரபல நாட்டுப்புற இசைக்கருவியான ராவணஹதாவை வாசிப்பதற்காக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்று சீசன் வருமானத்தை ஈட்டுகின்றனர்
8. ‘மலை, காடு, நீரோடைகளே எங்கள் தெய்வங்கள்‘
சுரங்கத்திற்கு எதிரான வழக்கில் ஒடிசாவின் நியாம்கிரி மலையைச் சேர்ந்த பழங்குடியினர் 2013ஆம் ஆண்டு வெற்றிப் பெற்றாலும், அவர்களது முன்னோர்களின் நிலங்கள் தொடர் அச்சுறுத்தலில் இருக்கின்றன. அண்மையில் நடந்த நியாம்கிரி திருவிழா குறித்து கவிதை எழுதி பாடியுள்ள ராஜ்கிஷோர் சுனானி
7. ஹேசரகட்டாவில் டோலு நடனம்
பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள இளம் பெண்கள் கன்னட மேளம் மற்றும் நடனத்தில், பல காலமாக கனமான ஆண்கள் மட்டுமே சிறந்து விளங்குவர் என்று கருதப்பட்ட திறமையில் சிறந்து விளங்குகின்றனர். இங்குள்ள காணொலியில் இக்குழுவினர் அசாதாரண ஆற்றலுடனும் தாளத்தோடும் ஆடுவதைக் காணுங்கள்
6. ஊறுகாய் மற்றும் அப்பளங்களையும் கடந்தது மேளங்கள் மற்றும் கனவுகள்
கிராமமக்களின் அவதூறுகளை எதிர்த்து போராட வேண்டிய நிலை, கொடுமைக்கார கணவர்கள், நூற்றாண்டுகள் பழமையான ஜாதி பாரபட்சங்கள் என இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும், பிகார் மாநிலத்தின் திப்ரா கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்கள் இசைக்குழுவை துவக்கியுள்ளனர். தற்போது அவர்களின் இசைக்கு ஏற்ப மிடுக்குடன் நடந்து செல்கின்றனர்
5. பாசுதேப் பாவுல்: வங்கத்தின் நாட்டார் பாடகர்
பாவுல் இசை கலாச்சாரம் தனித்துவமானது, வாழ்க்கையின் ஒத்திசைவான தத்துவத்துடன் கூடியது. இங்கு காணப்படும் திரைப்படத்தில் பிர்பும் மாவட்டம் போல்பூரைச் சேர்ந்த ஆசானும், பயிற்சியாளருமான, பாசுதேப் தாஸ் பாவுல் கலை வடிவம் மற்றும் வாழ்க்கை முறை குறித்துப் பேசுகிறார்
4. மீனாட்சியும் மண்பானையும்
தமிழ்நாடு, மானாமதுரையில் ஒரு எட்டு கிலோ களிமண் உருண்டை, ஒரு இசைவாத்தியமாக உருமாறி அற்புதமான இசையை எழுப்புகிறது.
3. பங்க்
இந்த பாரம்பரிய மேளவகை மணிப்பூரின் மெய்டெய் சமூகத்தின் கலாசாரம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் பிரதான பங்கு வகிக்கிறது
2. நரசிங்கபேட்டையின் நாதஸ்வர நாயகர்கள்
இந்த சிக்கலான காற்றுக்கருவியை நரசிங்கபேட்டை கைவினைஞர்கள் இழைத்து உலகுக்கு தந்திருக்கிறார்கள். இளந்தலைமுறை வருமானம் தரும் தொழில்களுக்கு நகர்வதால் இக்கலை இறந்து கொண்டிருக்கிறது
1. குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தின் பாவாரி இசை வாசிப்பு
டாங் மாவட்ட ஆதிவாசி சமூகத்தின் பாரம்பரிய இசைக்கருவியின் இசையை கேளுங்கள்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/tuning-into-indias-many-musical-instruments-ta







































