ஆஷா பணியாளர்கள் மீண்டும் வாக்குறுதி கொடுக்கும் அரசு
மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆஷா பணியாளர்கள் - பெண் பணியாளர்கள் - சிறந்த ஊதியத்திற்காகவும், சரியான நேரத்திற்கு அதை வழங்கிடவும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுக்காகவும் பேரணி நடத்தி வருகின்றனர். நகரின் ஆசாத் மைதானத்தில் அவர்களின் போராட்டம் அண்மையில் 21 நாட்கள் வரை நீடித்தது. முக்கியமான பெண் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு மீண்டும் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் இது மூன்றாவது அதிகாரப்பூர்வ உத்தரவாதமாகும். ஆனால் வாக்குறுதிகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. பெண்கள், அவர்களது ஒற்றுமை மற்றும் அவர்களது உரிமைகளுக்கான போராட்டம் பற்றிய சர்வதேச மகளிர் தினத்திற்கான கட்டுரை























