இளம்பெண்ணோ முதியப்பெண்ணோ பாரம்பரிய உடைகளுடன் இடுப்பில் ஒரு பானையும் ஒன்றோ இரண்டோ பானைகளை தலையில் சுமந்து கொண்டும் செல்லும் தோற்றத்தைதான் இந்திய கிராமப்புற பெண்களின் வாழ்க்கைகளை குறிக்க வழக்கமாக கொடுக்கப்படும் பிம்பங்கள்.  சில நேரம் அழகாகவும் சில நேரங்களில் விவரிக்க முடியாமலும் இருக்கும் இந்திய கிராமப்புறக் கிணறுகள் நீரெடுப்பதற்கான இடமாக மட்டுமே இருந்ததில்லை. சிறந்த நட்பில் தொடங்கி, நீரை சுற்றியிருக்கும் அநீதியான சாதிய உறவுகள் வரை பல, கிணற்றை சுற்றி வெளிப்படும்.

பெண்கள், தங்களது கணவர் வீட்டாரிடமிருந்து தப்பிப்பதற்கான இடமாகவும் வாழ்க்கையை தக்க வைக்க பயன்படும் கிணறுகள் பயன்படுவது நகைமுரண். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் பாடலில், தனது விருப்பமின்றி திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரே துணையான கிணறும் அவளுக்கு எதிராக திரும்புகிறது. எதிரியின் வீட்டைப் போல் இருக்கும் குடும்பத்தில் தன்னை மணம் முடித்துக் கொடுத்த தன் வீட்டு ஆண்களை பற்றி புகார் சொல்ல அவளுக்கு வேறு எவருமில்லை.

அஞ்சாரை சேர்ந்த ஷங்கர் பாரோத் பாடியிருக்கும் இந்த துயரப் பாடலில், குடும்பத்திலுள்ள விரோதத்துக்குரிய ஆண்கள், திருமண நிகழ்வில் பாடப்படும் பல்வேறு பாடல்களில் தங்களுக்கென ஓர் இடம் கொண்டிருப்பதை குறித்து பெண் புகார் செய்கிறாள்.

அஞ்சாரை சேர்ந்த ஷங்கர் பாரோத் பாடும் நாட்டுப்புற பாடல்

Gujarati

જીલણ તારા પાણી મને ખારા ઝેર લાગે મને ઝેર ઝેર લાગે
જીલણ તારા પાણી મને ઝેર ઝેર લાગે મને ખારા ઝેર લાગે
દાદો વેરી થયા’તા મને  વેરીયામાં દીધી, મારી ખબરું ન લીધી
જીલણ તારા પાણી મને ઝેર ઝેર લાગે મને ખારા ઝેર લાગે
કાકો મારો વેરી મને  વેરીયામાં દીધી, મારી ખબરું ન લીધી
જીલણ તારા પાણી મને ઝેર ઝેર લાગે મને ખારા ઝેર લાગે
મામો મારો વેરી મને  વેરીયામાં દીધી, મારી ખબરું ન લીધી
જીલણ તારા પાણી મને ઝેર ઝેર લાગે મને ખારા ઝેર લાગે
જીલણ તારા પાણી મને ઝેર ઝેર લાગે મને ખારા ઝેર લાગે

தமிழ்

உன் கிணற்றின் உப்புத் தண்ணீர் எனக்கு விஷத்தை போல,
நீர் எனக்கு விஷத்தைப் போல.
உப்புத் தண்ணீர் எனக்கு விஷம் (2)
அப்பா எனக்கு எதிரி. தாத்தா என்னை எதிரியிடம் விட்டுவிட்டார்
இல்லை, அவர் எப்போதும் என்னை பொருட்படுத்தியதில்லை. உப்புத் தண்ணீர்…
மாமா எனக்கு எதிரி. என் தந்தை வழி மாமா என்னை எதிரியிடம் விட்டுவிட்டார்
இல்லை, அவர் எப்போதும் என்னை பொருட்படுத்தியதில்லை. உப்புத் தண்ணீர்…
மாமா எனக்கு எதிரி. என் தாய்மாமா என்னை எதிரியிடம் விட்டுவிட்டார்
இல்லை, அவர் எப்போதும் என்னை பொருட்படுத்தியதில்லை. உப்புத் தண்ணீர்…
நீர் எனக்கு விஷத்தை போல. உப்புத் தண்ணீர் எனக்கு விஷம்

PHOTO • Labani Jangi

பாடல் வகை : பாரம்பரிய நாட்டுப்புறப் பாட்டு

தொகுப்பு : திருமணப் பாடல்கள்

பாடல் : 5

பாடலின் தலைப்பு : ஜீலன் தாரா பானி முனே காரா செர் லாகே

இசையமைப்பாளர் : தேவால் மேத்தா

பாடகர் : அஞ்சாரை சேர்ந்த ஷங்கர் பாரோத்

பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் : ஹார்மோனியம், மேளம், பாஞ்சோ

பதிவு செய்யப்பட்ட வருடம் : 2012, KMVS ஸ்டுடியோ

சூர்வானி என்கிற ரேடியோ பதிவு செய்த இந்த 341 பாடல்களும் கச்ச் மகிளா விகாஸ் சங்காத்தன் (KMVS) வழியாக பாரிக்குக் கிடைத்தது.

ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a poet and a translator who works across Gujarati and English. She also writes and translates for PARI.

Other stories by Pratishtha Pandya
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan