ஓதோ ஜாம் மற்றும் ஹோதால் பாதாமணி ஆகியோரின் காதல் கதை கச்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் பிரபலம். கச்சை தாண்டி அக்கதை நாட்டுப்புற வடிவங்களில் சென்றிருக்க வேண்டும். வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படும் வெவ்வேறு வழக்குகள், அவற்றின் மூலத்தை பற்றி வெவ்வேறு கதைகளை கொண்டிருக்கின்றன. ஓதோ, வீரம் செறிந்த பழங்குடி வீரனாக இருக்க வேண்டும் அல்லது கியோரை சேர்ந்த ஷத்திரிய வீரனாக இருக்க வேண்டும். ஹோதால் பழங்குடியினத் தலைவியாக இருக்க வேண்டும். பல வழக்குகளில் அவள், சாபத்தின் காரணமாக பூவுலகில் பிறந்த விண்ணுலக தேவதையாக குறிப்பிடப்படுகிறாள்.

மைத்துனியான மினாவதியின் இச்சைக்கு இணங்காததால் ஓதோ ஜாம் தலைமறைவாக இருக்கிறான். பிரானா பதானில் தாய் வழி உறவினரான விசால்தேவ் வீட்டில் அவன் வசிக்கிறான். உறவினரின் ஒட்டகங்களை சிந்து பகுதியின் நகார் சமோயின் தலைவனான பம்பானியா கடத்தி சென்று விட்டான். அவற்றை மீட்டு வருவதென ஓதோ முடிவெடுக்கிறான்.

மேய்ச்சல் பழங்குடியை சேர்ந்த ஹோதால் பாதாமணிக்கும், பம்பானியாவிடம் தீர்க்க வேண்டிய பிரச்சினை ஒன்று இருந்தது. அவளின் தந்தையின் ராஜ்ஜியத்தை சூறையாடி கால்நடைகளை அபகரித்து சென்றிருக்கிறான். சாகும் தறுவாயில் இருந்த தந்தையிடம், பழி வாங்குவதாக உறுதி கொடுத்திருக்கிறாள் அவள். ஓதோ ஜாமை சந்திக்கும்போது அவள், “ஹோதா” என அழைக்கப்படும் ஆண் வீரனாக தோற்றம் பூண்டிருந்தாள். வேறு வழக்குகளில் அந்தப் பெயர் “எக்கால்மால்” என மாறியிருக்கிறது. ஓதோ ஜாம், அவளை வீரமிகு இளைஞன் என எண்ணினான். நோக்கத்தால் இருவரும் ஒன்றாகி, நட்பு கொள்கின்றனர். ஒன்றாக பம்பானியாவின் ஆட்களுடன் சண்டையிட்டு ஒட்டகங்களை மீட்கிறார்கள்.

நாகர்-சாமோய்க்கு வந்ததும் இருவரும் பிரிகின்றனர். பிரானா பதானுக்கு ஓதோ செல்கிறான். ஹோதா, கனாரா குன்றுக்கு செல்கிறாள். சில நாட்கள் ஆகியும் ஓதோ ஜாமால், ஹோதாவை மறக்க முடியவில்லை. நண்பனை தேடி செல்வதென முடிவெடுக்கிறான். அந்த இளைஞனின் உடையையும் குதிரையையும் ஒரு நதியினருகே கண்டு பிடிக்கிறான். பிறகு ஹோதா குளித்து கொண்டிருப்பதை கண்டு உண்மை புரிந்து கொள்கிறான்.

காதல்வயப்படும் ஓதோ, மணம் முடிக்க விரும்புகிறான். காதலிலிருக்கும் ஹோதாலும் ஒப்புக் கொள்கிறாள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அவளின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தாத வரை மட்டும்தான் ஓதோ ஜாமுடன் இருப்பாளென சொல்கிறாள். இருவரும் மணம் முடிக்கின்றனர். இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர். பல வருடங்களுக்கு பிறகு, நண்பர்களுடன் மது போதையில் திளைத்திருக்கும்போதோ வேறு வழக்குகள் சொல்வது போல், மகன்களின் வீரத்தை பற்றி பொதுவெளியில் விளக்கிக் கொண்டிருக்கும்போதோ, ஹோதாலின் அடையாளத்தை ஓதோ வெளிப்படுத்துகிறான். அவள் அவனை விட்டு செல்கிறாள்.

பத்ரேசாரை சேர்ந்த ஜுமா வகேரின் குரலில் இங்கு பாடப்பட்டிருக்கும் பாடல், ஓதோ பிரிவை சந்திக்கும் காலக்கட்டத்திலிருந்து தொடங்குகிறது. துயரத்துடன் கண்ணீரில் இருக்கிறான் ஓதோ. இத்தகைய துயரமும் கண்ணீரும் ஹஜாசார் நதியை கரைபுரளச் செய்யத்தக்கதாக இருக்கிறது. விருந்தோம்பல் மற்றும் சொகுசு ஆகியவற்றை கொண்டு ஹோதால் பாதாமணி திரும்பி வரும்படி ஈர்க்கப்படுகிறாள்.

பத்ரேசரை சேர்ந்த ஜுமா வகேரின் நாட்டுப்புற பாடலை கேளுங்கள்

કચ્છી

ચકાસર જી પાર મથે ઢોલીડા ધ્રૂસકે (2)
એ ફુલડેં ફોરૂં છડેયોં ઓઢાજામ હાજાસર હૂબકે (2)
ઉતારા ડેસૂ ઓરડા પદમણી (2)
એ ડેસૂ તને મેડીએના મોલ......ઓઢાજામ.
ચકાસર જી પાર મથે ઢોલીડા ધ્રૂસકે
ફુલડેં ફોરૂં છડેયોં ઓઢાજામ હાજાસર હૂબકે
ભોજન ડેસૂ લાડવા પદમણી (2)
એ ડેસૂ તને સીરો,સકર,સેવ.....ઓઢાજામ.
હાજાસર જી પાર મથે ઢોલીડા ધ્રૂસકે
ફુલડેં ફોરૂં છડેયોં ઓઢાજામ હાજાસર હૂબકે
નાવણ ડેસૂ કુંઢીયું પદમણી (2)
એ ડેસૂ તને નદીએના નીર..... ઓઢાજામ
હાજાસર જી પાર મથે ઢોલીડા ધ્રૂસકે
ફુલડેં ફોરૂં છડયોં ઓઢાજામ હાજાસર હૂબકે
ડાતણ ડેસૂ ડાડમી પદમણી (2)
ડેસૂ તને કણીયેલ કામ..... ઓઢાજામ
હાજાસર જી પાર મથે ઢોલીડા ધ્રૂસકે (2)
ફુલડેં ફોરૂં છડ્યોં ઓઢાજામ હાજાસર હૂબકે.

தமிழ்

சகாசர் நதிக்கரையில் மேளவாத்தியக்காரர்கள் இரங்குகிறார்கள்
அவர்கள் அழுகிறார்கள் (2)
பூக்கள் தம் நறுமணத்தை இழந்து விட்டன,
ஒதோ ஜாமின் துயரைப் போல நதி நிரம்புகிறது (2)
இடம் நிரம்பிய அறைகளை உனக்கு தருகிறோம், பாதாமானி (2)
பல மாடிகள் கொண்ட அரண்மனைகளையும் உனக்கு தருகிறோம்
ஹஜாசரின் நதிகள் ஒதோ ஜாமின் துயரைப் போல நிரம்புகிறது
ஹஜாசர் நதிக்கரையில் மேளவாத்தியக்காரர்கள் இரங்குகிறார்கள்
அவர்கள் அழுகிறார்கள்
உணவுக்கு லட்டுகளை கொடுக்கிறோம் பாதாமானி (2)
ஷீரோவும் சாகாரும் சேவும் தருகிறோம்…
ஹஜாசர் நதிக்கரையில் மேளவாத்தியக்காரர்கள் இரங்குகிறார்கள்
அவர்கள் அழுகிறார்கள்
பூக்கள் தம் நறுமணத்தை இழந்து விட்டன,
ஒதோ ஜாமின் துயரைப் போல ஹஜாசர் நதி நிரம்புகிறது
நீ குளிக்க ஒரு சிறு குளத்தை தருகிறோம், பாதாமானி (2)
ஆறுகளின் நீரை உனக்கு தருகிறோம்…
ஹஜாசர் நதிக்கரையில் மேளவாத்தியக்காரர்கள் இரங்குகிறார்கள்
அவர்கள் அழுகிறார்கள்
பூக்கள் தம் நறுமணத்தை இழந்து விட்டன,
ஒதோ ஜாமின் துயரைப் போல ஹஜாசர் நதி நிரம்புகிறது
உன் பற்களை விலக்க மாதுளை தண்டை தருகிறோம் (2)
அரளியை விட மென்மையான தண்டை தருகிறோம்.
ஹஜாசர் நதிக்கரையில் மேளவாத்தியக்காரர்கள் இரங்குகிறார்கள்
அவர்கள் அழுகிறார்கள் (2)
பூக்கள் தம் நறுமணத்தை இழந்து விட்டன,
ஒதோ ஜாமின் துயரைப் போல நதி நிரம்புகிறது

PHOTO • Priyanka Borar

பாடல் வகை: பாரம்பரிய நாட்டுப்புற பாடல்

தொகுப்பு: காதல் மற்றும் ஏக்கப் பாடல்கள்

பாடல்: 10

பாடல் தலைப்பு: சகாசஜி பார் ம்தே தோலிடா த்ருஸ்கே

இசையமைப்பாளர்: தேவால் மேத்தா

பாடகர்: முந்த்ரா தாலுகாவின் பத்ரேசரை சேர்ந்த ஜுமா வகேர்

பயன்படுத்தப்பட்ட கருவிகள்: மேளம், ஹார்மோனியம், பாஞ்சோ

பதிவு செய்யப்பட்ட வருடம்: 2012, KMVS ஸ்டுடியோ

சூர்வானி என்கிற ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், பாரிக்கு கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) மூலமாக கிடைத்தது. இப்பாடல்களை இன்னும் அதிகம் கேட்க, கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம் பக்கத்துக்கு செல்லவும்

ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Text : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

Other stories by Priyanka Borar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan