அது  ஒரு குளிர்காலத்தின்  நன்கு காற்று வீசுகின்ற   காலைப் பொழுது,முலா தான்  தோண்ட  உதவிய, அந்த நீரற்ற குளத்தினுள்  நின்றுகொண்டிருக்கிறார்.  பல மாதங்களாக தனது  கூலியை  பெற முடியாத  நிலையில் ,கடைசியாக  அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அல்லது அவ்வாறு  நினைத்துக்கொண்டார். அதுகுறித்து  முலா   கூறுகையில்,"எனது பணத்தை ஒருவேளை அந்த போன் வைத்திருக்கலாம்" என்று  பெருமூச்சு விட்டபடி  கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , சித்தாப்பூரில்  உள்ள  மகாத்மாகாந்தி  ஊரக வேலைவாய்ப்புத் திட்ட  கூடுதல் திட்ட அலுவலர்  விகாஷ் சிங்கின்  அலுவலகம் முன்பு விவசாயக்கூலிகள்    பல போராட்டங்களை நடத்தினர்.  இந்த போராட்டங்களுக்கு  பின்னர், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கான  ஊதியம்,     ஜனவரி 2017 லிருந்து  தொடங்கப்பட்டுள்ள 9,877 பேரின் ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கிக்  கணக்குகளுக்கு  அனுப்பிவைக்கப்படும்  என்று  திட்ட அலுவலர்  விகாஷ் சிங்  தெரிவித்தார்.  இந்த   வங்கிக் கணக்குகள் குறித்து  விகாஷ் சிங்கின் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், இதற்காக  புதிய  சிம் கார்டு வாங்கப்படும் போது உரியவர்களிடம் "வங்கிக்  கணக்கு குறித்து தெரிவிக்காமலும்,ஒப்புதல் பெறாமலும்" தொடங்கப்பட்ட கணக்குகள் என்று அவர்  குறிப்பிட்டார்.

மேலும், இந்த புதிய  கணக்குகளுக்கு பணம்  பரிமாற்றப்பட   உரியவருக்கு  தெரிவிக்காமல் ஒப்புதலின்றி,இணையவழி வாடிக்கையாளர் கையகப்படுத்தல் படிவத்தின்    'ஆதார் வழியான சிம்  உறுதிப்படுத்துதலின்' போது வெறுமனே திரையில் தெரிந்த பெட்டியில்  இடுகுறியை  உறுதிப்படுத்த(TICK) செய்து   சரிபார்க்கப்பட்டுள்ளது. இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்  குற்றமில்லாத வழிகாட்டுதலின்  நடைமுறையின் வழியாக   மேற்கொள்ளப்பட்டுள்ளது; மேலும், அவ்வாறு  கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உடன் ஒருவர், நேரடி பணப்பரிமாற்றம் வழியாக வழங்கப்பட்ட எந்தவொரு பணத்தையும்  பெற  இயலும்.

இந்நிலையில்,விகாஷ் சிங்கின்  இந்த அறிவிப்பைக் கேட்டு பசி என்கிற தலித் சமூகத்தைச்  சார்ந்த 45 வயதான  முலா  நம்பிக்கை  இழந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டே  முலா தொலைபேசி  உடன்  ஏர்டெல் ஒன்றையும்  வாங்கியுள்ளார். ஒரு காலைப்பொழுதில் அண்டைவீட்டார்  ஏர்டெல் சிம் கார்டுகள் நல்ல  சலுகைகளுடன் கிடைக்கிறது என்று சொல்ல(40 ரூபாய் சிம் கார்டு வாங்கினால்  35 நிமிடம் பேசலாம்), முலாவும் அவரது  மகன் நாகராஜூம் சித்தாப்பூர் மாவட்டத்தின்  தாதியோரா  கிராமத்தில் இருந்து,  4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள,  மச்சரேஹதா பகுதியின் பர்சடா முதன்மை சந்தைப்பகுதிக்கு  சென்றுள்ளனர். அங்குள்ள  கடையில் தொலைபேசி வாங்கியதற்கு  (தற்போது  நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது)  பின்னர், கடை உரிமையாளர்  சிம் கார்டுக்காக,  முலாவிடம்   ஆதார் அட்டையின் நகலைக் கேட்டுள்ளார்,அவரது மகனிடம் அப்போது ஆதார் அட்டை இல்லாததால். முலா தனது ஆதார் அட்டையை வழங்கியுள்ளார்.

Mula at her house
PHOTO • Puja Awasthi

முலாவிடம் தெரிவித்து  அனுமதிபெறாமல் ஆதார் வழியான சிம்  உறுதிப்படுத்துதலின் ' போது வெறுமனே இணைய படிவத்தில் உள்ள  பெட்டியில்  இடுகுறியை  உறுதிப்படுத்த( TICK) சொல்லி சரிபார்க்கப்பட்டுள்ளது.

"ஒரு சிறிய இயந்திரத்தில், இரண்டு தடவை  என்னுடைய பெருவிரல் ரேகையை வைக்க சொன்னார்கள்" என்று  முலா தனது  நினைவில் உள்ளதைக் கூறினார்.  இது எண்ணற்ற அரசு அதிகாரிகளின்  உத்தரவின்  பேரில்  நடந்துள்ளது. முதன்முறையாக கடந்த அக்டோபர் 2014 ல்  தொலைத்தொடர்புத் துறையினரால் நடைபெற்றுள்ளது. அப்போது, தொலைபேசி எண்ணுக்காக விண்ணப்பிக்கையில்  , தகவல்பெறும் படிவத்தில் ஆதார்  எண்ணை  குறிப்பிடுமாறும்  தெரிவித்துள்ளனர்.

முலா தனது ஆதார் அட்டை நகலைக்  கடைக்காரரிடம் கொடுத்ததற்கு   பின்னர், கடை உரிமையாளர்  சில தகவலைக்  கேட்டு  கணினியில் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, தொலைபேசியில் சிம் கார்டை சொருகி  தொலைபேசியை  அவர்களிடம்  கொடுத்துள்ளார்.  அவர்கள் அதற்காக 1300  செலுத்தியுள்ளார்,பின்னர் அவர்கள் நடந்து   வீடும் திருப்பும் வழியில்,அவரது மகன்   நாகராஜ்  முலாவிற்கு  தொலைபேசியை  எப்படி பயன்படுத்த வேண்டுமென  விளக்கியுள்ளார்.

சில வாரங்கள் கழித்து அந்த தொலைபேசி திருமணம் ஒன்றில்  தொலைந்துள்ளது. அந்த தொலைபேசி  எண் வழியாகத் தான் வங்கிக் கணக்கை  அணுக இயலும்,இறுதியாக அதையும் அவர்கள்  மறந்திருக்கின்றனர்.

இந்நிலையில் ,கூலி  கிடைக்காததற்கு   எதிராக பகுதி அலுவலகம்  முன்பு   போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, எண்ணற்றோரை போல, 'காமணிவாலா காயேக, லூடனேவாலா ஜாயேக, நயா சமனா ஆயேக' ('கூலி சம்பாதிப்பவர் சாப்பிடுவார்,பணத்தை திருடியவர் சிறைக்கு செல்வார், புதிய விடியல் வருகிறது)  என்று முலாவும்   முழக்கமிட்டவாறு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.   மேலும்,அவர்  தனது கூலி,  பர்சடாவில் உள்ள   அலகாபாத் உபி கிராமீன் வங்கியிலுள்ள,  அவரது  கணக்குக்கு மாற்றப்படும்  என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.(அவரது பணி விண்ணப்பத்தில்  குறிப்பிட்டுள்ள அவரது வங்கியின்  கிளை)

எனினும்,கடந்தாண்டு ஜனவரி  முடிந்து   பிப்ரவரியும்   ஆன நிலையில் , கூலி குறித்த   எந்த அறிகுறிகுறியும் தென்படவில்லை

காணொளியைக் காண்க: பணத்தை தேடி அலையும்  முலா

முலா ,கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை,  மகாத்மா காந்தி  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்   58 நாட்கள்  உழைத்துள்ளார்.  சாலை போடுதல்,தாழ்வாரத்திற்காக  தோண்டுதல் மற்றும் ஜஹவர் தளப்-2 பணிகளுக்காக பாறையானத்  தரையை அகற்றுதல், குளம் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார்.  அவர்  தொலைபேசியில் உண்மையில் பணம் இருக்கிறதா என்று யோசித்து கொண்டிருக்கும்  போது குளத்தின்  உள்ளே பணியில்  ஈடுபட்டிருந்திருக்கிறார். இதுகுறித்து கூறுகையில்,"அது மிகவும் கஷ்டமான வேலை,எனக்கு அடிக்கடி காலில் கொப்புளங்களும்  ஏற்படும்" என்று கூறினார். இந்நிலையில், கூலி கிடைக்குமா, கிடைக்காதோ என்பது குறித்த  அச்சம் ஏற்பட்ட நிலையில்,"இது அரசு வேலை, கூலிக்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு" என்று  ஐந்து பிள்ளைகளின் தாயான அவர் தனக்கு தானே கூறிக்கொண்டுள்ளார்.

முலா தான் அவரது குடும்பத்தின்  முதன்மையான வருமானம் ஈட்டக்கூடியவர். அவரது கணவர் 51 வயதான  மங்கு லால் நீண்ட நாட்களாக இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்   கோடைகாலத்தின் போது இரண்டு மாதங்கள் மட்டுமே மாங்காய் தோட்டத்திற்கு பாதுகாவலராக பணிபுரிகிறார். அந்த காலகட்டத்தில் 6000 ரூபாய் வருமானம்  ஈட்டுகிறார். அவர்களிடம் ஐந்து(கிட்டத்தட்ட ஒரு ஏக்கர்)  பிகாஸ் நிலம் உள்ளது. ஐந்து வருடத்திற்கு முன்னர், அவரது மூத்த மகள் ஊர்மிளா திருமணத்திற்காக இரண்டு  பிகாஸ் நிலத்தை 10,000 அடமானம் வைத்துள்ளனர்.இதே போன்று மூன்று வருடத்திற்கு  முன்பு, அவரது இரண்டாவது  மகள் கபூரா திருமணத்திற்காக  மேலும் இரண்டு பிகாஸ் நிலத்தை  அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில், மீதமுள்ள 1 பிகாஸ் நிலத்தில் கோதுமை  விளைவித்து   வருகின்றனர், அதுவும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளத்தில்  மூழ்கியுள்ளது.

முலாவும் அவரது மகன் நாகராஜுவும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள்.  இதன்மூலம் நாளொன்றுக்கு 170 ரூபாய் பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சற்றேறக்குறைய  50 நாட்களுக்கு இந்த  திட்டத்தின்  கீழ்  பணி கிடைக்கிறது   அல்லது  பெரும் நில உரிமையாளர்களின் விவசாய   நிலங்களில் பணிபுரிகிறார்கள். இதன்மூலமாக நாளொன்றுக்கு முலா 120 ரூபாயும், நாகராஜ் 150 ரூபாயும் பெறுகிறார்கள்.  இந்த வேலைக்கு  பிறகு கரும்பு அறுவடைக் காலத்தில், அங்கு   14 மணிநேரம் பணிபுரிகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்  உழைப்பதின்  வழியாக வருடத்திற்கு  40,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள். மேலும்,  முலாவின் இளம்  குழந்தைகளான  15 வயதான ராதாவும், 13 வயதான  பிரதாப்பும்  பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Mula (with daughter Kapoora) holding the application she gave to the block office to inquire about her missing wages
PHOTO • Puja Awasthi

முலா(அவரது மகள் கபூரா) அவரது கூலி  குறித்து  பகுதி அலுவலகம்   விசாரிக்க வேண்டுமெனக் கோரும் அவரது  விண்ணப்பத்தை கையில்  வைத்திருக்கிறார்,

இந்நிலையில்,ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த கூலி வராததால் முலா, அவரது உறவினரிடம்  இருந்து  15,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.மேலும், அவர்கள் பகுதியில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு   கிடைக்கும்    உருளைக்கிழங்கையே  முக்கிய உணவாக உண்டு வருகின்றனர் . அவர்கள்  குடும்பத்திற்கு அரை கிலோ  உருளைக்கிழங்கே போதுமானதாக  இருக்கிறது. அரிசி அல்லது கோதுமையை  எப்போதாவது தான் உண்டுள்ளனர். மேலும், ஒரு அறை கொண்ட அவர்களது சிறிய வீட்டின், கூரையில்  ஒற்றைப்   பூசணிக்கொடி படர்ந்துள்ளது, உருளைக்கிழங்கும்  வாங்க காசற்ற  பொழுதுகளில்  பூசணிக்காயை  சாப்பிட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து முலா கூறுகையில்,"சில நாட்கள்  மிகவும் குறைவாக  உணவு உள்ள போது,எனது மகன்  பிரதாப் சத்தம்போட்டு அழுவான், அருகில் உள்ள சுற்றத்தார் அனைவருக்கும் அது தெரிந்துவிடும். நான் எப்போதும் அவ்வாறு அவமானப்பட்டதே இல்லை" என்று தெரிவித்தார்.

இந்த எல்லா போராட்டங்களுக்கு  மத்தியிலும், முலா புதிய வங்கிக் கணக்கொன்றை துவங்கியுள்ளார் அல்லது அவருக்காக  மற்றொரு வங்கிக் கணக்கு  துவக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 2016 ஆம் ஆண்டு, சம்ஹிதா மைக்ரோபைனான்ஸ் என்ற  நிறுவனம் பர்சடா பகுதிக்கு வந்துள்ளனர்.   சித்தாப்பூர் பகுதியில்(மற்றும்  பக்கத்து மாவட்டமான  லாஹிம்பூரிலும் ) செயல்பாடுகளை  முடிந்ததற்கு,  பின்னர் அந்தப் பகுதியை அந்நிறுவனத்தின்  பகுதி மேலாளரான அமித் தீட்சித்  பார்வையிட்டுள்ளார். அவர் கூறுகையில், "நாங்கள்  ஏழ்மையில் இருந்தவர்களிடம் சுய-உதவி குழுக்களை  உருவாக்குவதின்  வழியாக  எவ்வாறு சுய-தொழிலாளர்களாக உருமாறலாம் என்பது  குறித்து  விளக்கினோம். அப்போது அவர்களிடம் தொழில் தொடங்குவதற்கு  பணமில்லை , எனவே அவர்களுக்கு  கடன் வழங்க  வங்கிக் கணக்குகளைத் துவக்கினோம்" என்று  கூறினார். மேலும் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில்,  அது ‘ஏழைகளில் ஏழ்மையானவர்களை  நிதிச் சேர்க்கை  சேவையுடன் முன்னுக்கு கொண்டுவர உதவுகிறது’ என்றும்   குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவெங்கும்  ஐந்து குடும்பத்தினரில் மூன்றுக்கும்  குறைவானக் குடும்பத்தினர்களே வங்கி சேவையைப் பயன்படுத்தி  வருகின்றனர்(என்.எஸ்.எஸ்.ஓ, 59 வது சுற்று), எனவே இந்த  நிதி சேர்க்கை என்பது  திறன்வாய்ந்த அரசாங்கத்திற்கு  முக்கியப் பங்களிக்கிறது.மேலும்,   கடந்த ஆகஸ்ட் 2017 வரை, 31.83 கோடி பேர் புதிய வங்கிக்கணக்குகளைத் துவங்கியுள்ளனர். இந்த கணக்குகள்  தொடங்கப்பட்டதற்கான முக்கிய  நோக்கம்    ஊரகப்பகுதியில் வசிக்கும் முலா போன்றவர்கள் எளிதாக  கடன்  பெறுவதற்காகும்.  எனினும், போதிய  பொருளாதார அறிவு  புகட்டப்படாததால், இந்த நடவடிக்கை  ஏழைகளின் துன்பத்தைக் கூட்டியுள்ளதே  அன்றி,  மிகச்சிறிய அளவிலான  முன்னேற்றத்தையே அடைந்துள்ளது.

முலாவால், அவர் இதுபோன்ற வங்கிக் கணக்குத்  தொடங்கியதை குறித்து  நினைவுகூற முடியவில்லை. அவர்  கடந்த மே 2017 ஆம் ஆண்டு, ஒரு படிவத்தில் கையெழுத்திட்டு   ஐடிபிஐ  வங்கியின்  சித்தாப்பூர் கிளை மேலாளர் பிரசாந்த்  சௌத்திரியின்  இருக்கையில்  ஒப்படைத்துள்ளார்.("நான் சில ரூபாய்கள் பணம்  பெற்றேன் என்று  நினைக்கிறன்"  என்று  முலா கூறுகிறார்.இதே  போன்ற   கையெழுத்திட்ட எண்ணற்ற  படிவங்களைப்  பெற்றதாக   சௌத்திரி கூறினார்.

Mula and her husband Mangu Lal at their house.
PHOTO • Puja Awasthi

முலா தான் அவரது குடும்பத்தின் முதன்மையான வருமானம்  ஈட்டுபவர், அவரது கணவர் மங்கு லால் உடல் பலவீனமாக  உள்ளார்

மேலும்,பிரசாந்த் கூறுகையில்," எங்கள்  நிறுவனத்தின் வழியாகத் தொடங்கப்பட்ட 3000 செயல்பட்டிலுள்ள

கணக்குகள்  எங்களிடம் உள்ளது. அவர்களின் பிரதிநிதிகள் எங்களிடம் ஆவணத்தைச் சமர்ப்பிப்பார்கள், நாங்கள் கணக்குத்தொடங்கும்   மற்ற  நடைமுறைகளைப் பார்த்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு முன் வரை  வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் அட்டை முக்கியமில்லை. தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,     அதுபோன்ற  எல்லா கணக்குகளும் கடன் பெற்றிருக்கவில்லை   ”என்று அவர் கூறினார்.

இது போன்றதொரு,  அத்தகைய வங்கிக் கணக்கிற்கு தான்  முலாவின் கூலி மாற்றப்பட்டிருக்கிறது . இந்நிலையில், பிப்ரவரி மாதம்,  கூலியைக் கேட்டு மக்கள்  ஈடுபட்ட  போராட்டம்,   கவனத்தை ஈர்த்ததற்கு பின்னர்,    மகாத்மாகாந்தி  ஊரக வேலைவாய்ப்புத் திட்ட,  கூடுதல் திட்ட அலுவலர்  விகாஷ் சிங், முலா போன்ற எண்ணற்றோரின்  கூலி  குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களின் கூலி குறித்த தகவல்களைக் கணினிமயமாக்கப்பட்ட தரவுத்தளம் வழியே,ஏன் கண்டறிந்து  தெரிவிக்கவில்லை என்பது குறித்து  பதிலளிக்கவில்லை.

முலா எப்போது பணத்தை  வங்கியிலிருந்து திரும்பப் பெற்றாரோ, அப்போதே வங்கிக் கணக்குகளை மூடிவிட்டு  மிகுந்த நிம்மதியடைந்தார்.ஆனால்,  இவ்வளவு துன்பத்திற்கும் காரணமான இந்த நடைமுறை குறித்து அவர் எந்த கேள்வியையும்  எழுப்பவில்லை.

இறுதியாக  இதுகுறித்து முலா கூறுகையில்,"பணத்திற்காகக் காத்திருத்தல் சாவதைவிட மோசமானதாக உள்ளது,அது முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பெருமூச்சுவிட்டவாறு தெரிவித்தார்.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Puja Awasthi

Puja Awasthi is a freelance print and online journalist, and an aspiring photographer based in Lucknow. She loves yoga, travelling and all things handmade.

Other stories by Puja Awasthi
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan