மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள கரங் என்ற தொலைதூர கிராமத்தில் இருந்துவருகிறார் குஞ்யா பாபா என்ற ஐந்து வயது சிறுமி. அவர் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த துடைப்பம் செய்பவரின் மகள். அவருடைய தந்தை இந்த கிராமத்தின் எல்லையில் ஒரு சிறிய பண்ணை வைத்திருக்கிறார்.
குஞ்யாவுக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருக்கின்றனர் - இவர் தான் மூன்றாவது குழந்தை. இவர் இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கரங்கில் உள்ள அங்கன்வாடி மையத்தில் துவக்கப்பள்ளியில் பயின்று வருகிறார். 15 வருடங்களாக செயல்பட்டுவரும் அங்கன்வாடியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே ஆசிரியராக தெரசா ஷபாங் இருந்து வருகிறார்.
கிழிந்த கௌன் மற்றும் பெரிய கம் பூட்ஸ் அணிந்து குஞ்யா அங்கன்வாடியில் இருக்கிறார்.

குஞ்யா அங்கன்வாடிக்கு ஆரஞ்சு நிற பையை தலையில் மாட்டிக் கொண்டபடி வருகிறார். அந்தப் பையில் எழுதுவதற்கு சிலேட்டும் மதிய உணவு சாப்பிடுவதற்கு ஒரு தட்டும் வைத்திருக்கிறார்

குஞ்யாவின் தோழி அங்கன்வாடி வகுப்புகளை கவனிப்பதற்கு தனது தம்பியையும் உடன் அழைத்து வருகிறார்

ஆசிரியை தெரசா ஷபாங் காசி எண்கள் மற்றும் எழுத்துக்களை கரும்பலகையில் எழுதி இருக்கிறார். அவருடைய சிறந்த மாணவியான குஞ்யா அவற்றை சத்தமாக வாசிப்பதை அவர் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்

ஆசிரியை தரசா அவர்கள் வகுப்பு பணிகளுக்காக குழந்தைகளுக்கு சுண்ணக்கட்டிகளை விநியோகிக்கிறார்


வகுப்பறையில் ஒரு மூலையில் தனியாக அமர்ந்திருக்கும் குஞ்யா தன் வேலையை வேகமாக செய்கிறார்

குஞ்யா தான் முதல் மாணவியாக தனது சிலேட்டில் எழுதி முடித்துவிட்டதாக விரைந்து ஓடுகிறார்

தெரசா குஞ்யாவுக்கு புதிய வார்த்தையை கற்றுக்கொடுக்கிறார்

ஆசிரியை குழந்தைகளை பாட்டு பாடும்படி கூறினார் ; குஞ்யாதான் குழுவை வழிநடத்துகிறார்

அவரது ஆசிரியரின் உதவியுடன் மதிய உணவு பரிமாறுவதற்கு முன்பே குஞ்யா தனது கைகளை கழுவுகிறார்

குஞ்யா மிகுந்த பசியில் இருக்கிறார்: 'அவர்கள் ஏன் விரைவாக கைகளை கழுவாமல் இருக்கின்றனர்?'

தெரசா ஷபாங் உணவு பரிமாறுகிறார்

குஞ்யா தனது தோழியுடன் சாப்பிடுகிறார்


மதிய உணவு திட்டம் அங்கன்வாடிக்குச் செல்ல குழந்தைகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறது. குஞ்யா பாபா (வலது) சாப்பிட்டு முடித்துவிட்டார். அங்கன்வாடியில் அவரது தினம் முடிந்தது
தமிழில் : சோனியா போஸ்