'ஹா! ’ என்றார் அவர். ‘‘புகைப்படம் எடுக்கிறீர்களா?  இந்த புகைப்படங்களை கொண்டுபோய்   மும்பையிலுள்ள பைட்டு சேகலிடம் கொடுக்கப்போகிறீர்களா? "  சேகல், sanctuary  இதழின் ஆசிரியர். அந்த குடிகாரர், நான் விலங்குகளை  கொடுமைப்படுத்தும்  படங்களை  எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இந்த உரையாடல் எப்படி விதர்பா மாவட்ட சந்தரபூரில்  நிகழ்கிறது என்பது புரியாத ஒன்று . ஒரு வேளை அவர் மும்பையில் எப்போதாவது வேலை செய்திருக்கலாம். அல்லது ஒரு வேளை Sanctuary  இதழின்  ஒரு குழுவினர் இந்த காட்டுப்பகுதியில் சமீபத்தில் பணிபுரிந்திருக்கலாம். அந்த மனிதர் விளக்கமுடியாத அளவிற்கு ஒழுக்கமற்று இருந்தார். சிறிது நேரத்தில் எங்கள் இருவரையும்  செயல்படவிடமுடியாமல் தடுத்துக் கொண்டே இருந்தார். . அதன் பிறகு அவரிடம் எந்த  கேள்விகளையும் கேட்கவில்லை.


/static/media/uploads/A day at the races/dsc01100.jpg


திலன்வாடி முழுவதும் சங்கர்பாத் என்கிற  திருவிழாவில் மூழ்கியிருந்தது. மாட்டுவண்டி பந்தயம் தான் அதன் முக்கிய நிகழ்ச்சி. இது பந்தயமா? அல்லது வேகமான வெள்ளோட்டமா? எப்படிச் சொல்வது என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். அனைத்து வண்டிகளும் ஒரே நேரத்தில் பந்தய களத்திற்குள்  அனுமதிக்கப்படுவதில்லை. . அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வண்டிகள் ஒரு கிமீ தூர இலக்கை அடைகின்றன.  பல காலமாக தொடர்ந்து இந்த பாதை பயன்படுத்தப்பட்டு இரண்டு தனித்தனி  பாதைகள் மட்டுமே  உருவாகியிருப்பது  இதற்கு காரணமாக இருக்கலாம். அதிகபட்சம் அதில், ஒரே  நேரத்தில்,  ஒருவண்டி, ஒரு வண்டிக்காரர் , இருகாளைகள் மட்டும் தான்.


/static/media/uploads/A day at the races/dsc01101.jpg


இது மற்ற பந்தயக் காட்சிகளில் இருந்து மாறுபட்டிருந்தது. பார்வையாளர்கள் எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்தனர். பந்தயத்தடத்தின்  மையத்தில் கூட, சீறிப்பாய்கின்ற காளைகளுக்கும் பந்தயத்திற்கும் நடுவில் தங்களுடைய முதுகைக் காட்டியபடி குறுக்கே சென்று  கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த அசம்பாவிதங்களும்  நடந்து  விடவில்லை. பந்தயப்பாதையின் கோட்டை ஒரு தேர்ந்த சாகசக் காரர் போல தாண்டும் குறும்புக்  காரர்களை  பார்வையாளர்கள் தங்கள்  அடிவயிற்றில் இருந்து கத்தி, எச்சரிக்கை செய்கிறார்கள். அதற்காக வண்டியை செலுத்துபவர்கள்  தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. இளைஞர் குழுக்கள் ஆபத்தான அந்த பந்தயப்பாதையில் மிக நெருக்கமாக நின்றுகொண்டு தங்கள் நாயகர்களை  உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முரட்டுத்தனம் குறைந்த பார்வையாளர்கள் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு  வைக்கோலால் நிரப்பப்பட்ட  மாட்டுவண்டிகளின் மீது அமர்ந்து கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்களது  முதல் மாடி அல்லது உப்பரிகை. இன்னும் சிலர் இயல்பாக பந்தயம் நடக்கும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள், எனினும், பந்தயத்தை ரசிக்கும்  மக்களின் ஆராவாரம் தங்களை வந்தடைகையில்  அதில் பங்கெடுக்கிறார்கள்.


/static/media/uploads/A day at the races/dsc01158.jpg


இவை நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண மாட்டுவண்டிகள் அல்ல. ஆனால் பந்தயத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட கச்சிதமான மாட்டுவண்டிகள். மிகச்சிறிய, மெல்லிய, இலகுரகம் போன்ற, ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. அனைத்து பந்தயக்காரர்களும் அனுபவமுள்ள விவசாயிகள், பல்வேறு வயது, உடல்வாகு கொண்டவர்கள். ஒன்றுமட்டும் உறுதி கண்டிப்பாக 60 ஐ நெருங்கியவர்கள். ஆனால் வயது ஒரு தடையல்ல. தடை என்பது பந்தயத்தில் தான் உள்ளது. அதனால் அங்கு அதிகாரப்பூர்வ பரிசுகள் இல்லை. இருந்தாலும் சில வெகுமதிகள் கொடுக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. பந்தயத்தில் கலந்து கொள்வது கௌரவத்திற்காகவே.


/static/media/uploads/A day at the races/dsc01103.jpg


நாங்கள் களத்தில் நுழையும் போது அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வண்டிகளை சோதித்துக்கொண்டும், அவர்களது விலங்குகளை கவனித்துக்கொண்டும் இருந்தார்கள். சில காளைகள் கச்சிதமாக அலங்கரிக்கப்பட்டு நின்றுகொண்டு  இருந்தன. ஆனால் அவை வேறு நிகழ்ச்சிக்கானவை. பந்தய  காளைகள் தேவையற்ற அலங்காரங்கள் இல்லாமல், தூண்டப்பட்டு, சீறிக்கொண்டு நிற்கும்.  மேளத்தை அடித்து போட்டியின் துவக்கத்தை அறிவிக்கிறார்கள். போட்டி முடிந்ததும் மேளக்காரர்கள் ஆரம்பக்  கோட்டை அடைகிறார்கள்.  வண்டியோட்டிகள்  இல்லாமல் வண்டிகள் திரும்பும் போது, அவர்களது கடைசிப்  பிள்ளைகள்  காளைகளை அப்புறப்படுத்திவிட்டு  விட்டு வண்டிகளை இழுத்துக்கொண்டு போனார்கள்.


/static/media/uploads/A day at the races/dsc01129.jpg


ஆரவாரம் கூடிக்கொண்டு போகையில் ஒரு பந்தய வண்டி சீறிக்கொண்டு சென்றது. மாட்டுவண்டிகள் காற்றைக் கிழித்து க்கொண்டு பேரொலி எழுப்பிக் கொண்டு முன்னேறும் என்பதற்கு இது சாட்சியாக இருந்தது. அதன் வேகம் எங்களை பிரமிக்க வைத்தது. வண்டியோட்டி ஒரு கையில் வாலை சுக்கான் போல பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் குச்சியை ஏந்திக் கொண்டு தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு சீறிப் பாய்ந்தான். மாடா, மனிதனா யார் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என சொல்ல முடியவில்லை. பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். கேமிராக்களை தூசிப் படலம் ஒன்று மறைத்தது. அந்த குடிகாரர் போட்டியில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களின் திறனற்ற நிலையை கேலி செய்துகொண்டிருந்தார். பாதுகாப்பு குழுவினர் போட்டியின் பாதை யில் நின்று கொண்டிருந்த மக்களை அகற்றிவிட்டு நடுவழியில் தாங்கள் நின்று கொண்டிருந்தார்கள். . எங்களை நோக்கி அர்த்தம் நிறைந்த பார்வையை வீசிக்கொண்டு இருந்தார்கள். எங்களை படம் பிடிக்க மாட்டீர்களா என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களை படம் பிடித்தோம்.

"எங்களை கண்டுகொள்ள மாட்டீர்களா?" என பாதுகாப்புக் குழுவினர் கேட்டார்கள்.


/static/media/uploads/A day at the races/dsc01125.jpg


இதற்கிடையில், ஒரு பெரிய சத்தம், சில மீட்டர் இடைவெளியில் ஒரு பந்தய வண்டி வருவதை எச்சரிக்கை செய்தது. அது வந்த வேகத்தில் எங்களை கீழே தள்ளியிருக்கும். நாங்கள், பாதுகாப்பு குழுவினர் மற்றும் எல்லோரும், பீதியடைந்து பாதையிலிருந்து வெளியே சிதறிய  அதேநேரத்தில் அந்த வண்டி வேகமாகக் கடந்து சென்றது. பந்தயக்காரர் தனது அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி முழுவேகத்தில் வண்டியை இழுத்துச்சென்றார். கூட்டம் அதை மறைத்தது.  பாதையின்  நடுவே  இருந்தவர்களை மீண்டும் ஊடுருவாமல் அகற்றி, பாதுகாப்பு குழுவினர் எங்களுக்கு ‘போஸ் ’ கொடுத்தனர்.


/static/media/uploads/A day at the races/dsc01096.jpg


அடுத்த பந்தயம் சிக்கலானது,  சிறப்பானது. அந்த போட்டியாளர் கம்பீரமானவர். அவர் ஒரு விவசாயி. 60ஐ நெருங்கியவர். பார்வையாளர்களின்  அச்சமற்ற போக்கை  பார்த்து  ஆர்வம்  கொண்ட  நான்,  வண்டி  பாயும்  பாதையில் வெகு சமீபமாக  நின்றுகொண்டு  அந்த  கம்பீரமான முதியவரை  வெகு  அருகில், தெளிவாக  படம்பிடிக்க  முனைந்தேன். அந்த  குடிகாரர்  தன்னுடைய  திருப்பணியை  இப்பொழுது  செவ்வனே  செய்தார், என்  முட்டிக்கு பின்புறம்  அவர்  குனிந்து  தவழ்கிற  நிலையில்  இருந்திருக்கிறார்,  இது  தெரியாமல்  நான்  பின்னோக்கி  நகர  நிலைகுலைய  நேரிட்டது, நான்  குடிகாரர் மீது விழுந்துவிடாமல்  இருக்க முன்னோக்கி  நகர்ந்தேன்.  இதனால்  நான்  சில  மில்லிமீட்டர்  தூரத்தில்  பந்தய  வண்டிகளை  எதிர்கொள்ள  நேரிட்டது. காளைகளின்  மூச்சுக்காற்றை  என்னால்  உணர  முடிந்தது.  நான்  விரும்பியதைவிட  வெகு  அருகில்  அந்த  வண்டியோட்டியின்  முகத்தை  நான்  காண  முடிந்தது.


/static/media/uploads/A day at the races/dsc01117.jpg


கூட்டத்தினர் எல்லோரையும்  உற்சாகப்படுத்தி  குரல்  கொடுத்தனர். . அந்த குடிகாரர் கபடமற்ற  காயத்துடன்  என்னை  நோக்கினார்.  அப்பொழுது எனக்கு  ஏற்பட்ட  உணர்ச்சிகளை  . ஃப்ரண்ட்லைன் ஆசிரியாரால் வெளியிட முடியாது.  . நான்  சாவின்  விளிம்பில்  இருந்து  தப்பியிருப்பதை  உணர  சில கணங்கள்  பிடித்தன. மாட்டு  வண்டி  ஏறி  இறந்த  மிக  சிலரில்  நானும்  இணைந்திருக்கக்  கூடும்.  வண்டியோடிய  பாதையில்  இருந்து  நான் விலகினாலும்  ஒரு  வண்டியின்  சக்கரம்   என்னுடைய  கேன்வாஸ்  ஷூவின்  முனையை  உரசிச் சென்றது. அடுத்தடுத்த  இரண்டு  காட்சிகள்  அவர்கள்  எதிர்பார்த்ததைவிட    .விபரீதமாக  அமைந்தது.


/static/media/uploads/A day at the races/dsc01091.jpg


பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஒருசோடி பந்தயக்காரர்கள் அங்கு இருந்தனர். வலிமையான காளைகள் சுதந்திரமாக தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டதால்தான் அது நிகழ்ந்தது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. போட்டியாளர்களால்  அந்த  காளைகள்  ஏற்படுத்திய  கலகத்தை அடக்கவும் முடியவில்லை. ஒன்று பந்தயப்பாதையை சிதைத்துக்கொண்டு வைக்கோல் நிரப்பப்பட்ட வண்டிகளுக்கு நேராகச் சென்று முட்டி நின்றது. இது வைக்கோலின் மீது அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கான எச்சரிக்கை.  தான்  சென்று  கொண்டிருந்த  பாதையில்  இருந்து  நகர்ந்து  மக்கள்  இருந்த  பாதைக்கு  ஒரு  காளை  வண்டியை  செலுத்தியது, அதை  நிறுத்த  மக்களின்  உதவி  தேவைப்பட்டது.


/static/media/uploads/A day at the races/dsc01083.jpgஇதற்கிடையில் தள்ளுவண்டிக்காரர்கள்,  அணிகலன்கள், மாய மருந்துகள் விற்பவர்கள்   விறுவிறுப்பாக விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். போட்டியாளர்கள் வண்டிகளில் இருந்து காளைகளை அவிழ்த்து விட்டனர். அந்த குடிகாரர் சூரிய அஸ்தமனத்திற்கு எதிராக தள்ளாடிக்கொண்டிருந்தார். நாங்களும் தான்! கூட்டத்தோடு  நாங்களும்  வெளியேறினோம். திருவிழா  முடிந்தது.


/static/media/uploads/A day at the races/dsc01157.jpg


P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought' and 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom'.

Other stories by P. Sainath