பெரிய அளவில் குடிமக்கள் குடியரசு தினத்தை கொண்டாடிய நிகழ்வு சரியாக ஒரு வருடத்துக்கு முன் நடந்தது செப்டம்பர் 2020-ல் நாடாளுமன்றத்தின் வழியாக திணிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லையில் இரண்டு மாதங்களாக தங்கிப் போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான விவசாயிகள், தங்களின் சார்பில் ஒரு குடியரசு தின அணிவகுப்பை நடத்தினார்கள்.  தில்லியின் எல்லையிலிருக்கும் சிங்கு, திக்ரி, காசிப்பூர் மற்றும் பிற போராட்டக் களங்கள் ஆகியவற்றிலும் நாட்டின் பல பகுதிகளிலும் ஜனவரி 26, 2021 அன்று டிராக்டர் பேரணிகள் நடந்தன.

வலிமையான, காத்திரமான அடையாளமாக விவசாயிகளின் அணிவகுப்பு அமைந்தது. சாமானிய மக்களும் விவசாயிகளும் தொழிலாளர்களும் குடியரசை  மீட்டெடுப்பதாக அந்த நிகழ்வு இருந்தது. மக்களின் கவனத்தை நிகழ்விலிருந்து திசைதிருப்புவதற்காக சிறு அளவிலான சீர்குலைக்கும் குழுவால் சில வருந்தத்தக்க சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும், அவற்றைத் தாண்டி அணிவகுப்பு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.

2021ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அரசாங்கம் சட்டங்களை ரத்து செய்த பிறகு விவசாயிகளின் போராட்டங்கள் உச்சத்தை எட்டின. கடுமையான குளிர்காலம், கொளுத்தும் கோடை வெப்பம் மற்றும் கோவிட் தொற்றின் கொடிய இரண்டாவது அலை ஆகியவற்றை தைரியமாக அவர்கள் எதிர்கொண்டிருந்தனர். 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் நீண்ட போராட்டத்திற்கு இப்படம் ஓர் அஞ்சலி.

வரலாறு கண்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக மாறிய அப்போராட்டத்தின் சிறப்பம்சமாக 2021ம் ஆண்டின் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் அணிவகுப்பு இருந்தது. அரசியல் சாசனம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அமைதி வழியில் விவசாயிகள் நடத்திய ஒழுங்கு நிறைந்த இயக்கம் அது. நினைவில் கொள்ளுங்கள்: ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் உரிமைகள் உள்ளடக்கிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதே குடியரசு நாளின் பிரதான நோக்கம்.

காணொளி: குடியரசு தினத்தில் விவசாயிகள் அணிவகுப்பின் நினைவுப்பகிர்வு

இது ஆதித்யா கபூரின் திரையாக்கம்

தமிழில் : ராஜசங்கீதன்

Aditya Kapoor

Aditya Kapoor is a Delhi-based visual practitioner with a keen interest in editorial and documentary work. His practice includes moving images and stills. In addition to cinematography, he has directed documentaries and ad films.

Other stories by Aditya Kapoor
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan