கவிதையில்தான் நாம் முழுமையாக வாழ்கிறோம். சமூகத்திலும் மனிதர்களிடையேயும் உருவாக்கியுள்ள வலி மிகுந்த பிரிவுகளை வரிகள் பிரதிபலிக்கும். பயம், கண்டனம், கேள்வி, ஒப்பீடு, நினைவுகள், கனவுகள், சாத்தியங்கள் ஆகியவற்றுக்கான வெளி இதுதான். இங்கிருந்துதான் நம் உள்ளும் வெளியும் செல்வதற்கான கதவுகளை கொண்ட பாதை தொடங்குகிறது. எனவேதான் கவிதை கேட்பதை நாம் நிறுத்தி விட்டால், தனிநபராகவும் சமூகமாகவும் பரிவையே இழந்து விடுகிறோம்.

தெவாலி பிலி மொழியில் தேவநாகரி எழுத்துகளை கொண்டு எழுதப்பட்ட ஜிதேந்திரா வாசவாவின் கவிதையை அளிக்கிறோம்.

தெவாலி பிலி மொழியில் ஜிதேந்திர வாசவா கவிதை வாசிப்பதைக் கேளுங்கள்

கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரதிஷ்தா பாண்டியா வாசிக்கிறார்

कविता उनायां बोंद की देदोहो

मां पावुहूं! तुमुहुं सोवता पोंगा
बाठे बांअणे बोंद की लेदेहें
खोबोर नाहा काहा?
तुमां बारे हेरां मोन नाहां का
बारे ने केड़ाल माज आवां नाह द्याआ
मान लागेहे तुमुहूं कविता उनायां बोंद की देदोहो
मांय उनायोहो
दुखू पाहाड़, मयाल्या खाड़्या
इयूज वाटे रीईन निग्त्याहा
पेन मां पावुहूं! तुमुहुं सोवता पोंगा
बाठे बांअणे बोंद की लेदेहें
खोबोर नाहा काहा?
तुमां बारे हेरां मोन नाहां का
बारे ने केड़ाल माज आवां नाह द्याआ मोन
मान लागेहे तुमुहूं कविता उनायां बोंद की देदोहो

पेन मां पावुहू!
तुमुहू सौवता डोआं खुल्ला राखजा मासां होच
बास तुमुहू सोवताल ता ही सेका
जेहकी हेअतेहे वागलें लोटकीन सौवताल
तुमुहू ही सेका तुमां माजर्या दोर्याले
जो पुनवू चादू की उथलपुथल वेएत्लो
तुमुहू ही सेका का
तुमां डोआं तालाय हुकाय रियिही
मां पावुहू! तुमनेह डोगडा बी केहेकी आखूं
आगीफूंगा दोबी रेताहा तिहमे
तुमुहू कोलाहा से कोम नाहाँ
हाचो गोग्यो ना माये
किही ने बी आगीफूंगो सिलगावी सेकेह तुमनेह
पेन मां पावुहूं! तुमुहुं सोवता पोंगा
बाठे बांअणे बोंद की लेदेहें
खोबोर नाहा काहा?
तुमां बारे हेरां मोन नाहां का
बारे ने केड़ाल माज आवां नाह द्याआ मोन
मान लागेहे तुमुहूं कविता उनायां बोंद की देदोहो

तुमुहू जुगु आंदारो हेरा
चोमकुता ताराहान हेरा
चुलाते नाहां आंदारारी
सोवताला बालतेहे
तिया आह्लीपाहली दून्या खातोर
खूब ताकत वालो हाय दिही
तियाआ ताकात जोडिन राखेहे
तियाआ दुन्याल
मां डायी आजलिही जोडती रेहे
तियू डायि नोजरी की
टुटला मोतिई मोनकाहाने
आन मां याहकी खूब सितरें जोडीन
गोदड़ी बोनावेहे, पोंगा बाठा लोकू खातोर
तुमुहू आवाहा हेरां खातोर???
ओह माफ केअजा, माय विहराय गेयलो
तुमुहुं सोवता पोंगा
बाठे बांअणे बोंद की लेदेहें
खोबोर नाहा काहा?
तुमां बारे हेरां मोन नाहां का
बारे ने केड़ाल माज आवां नाह द्याआ मोन
मान लागेहे तुमुहूं कविता उनायां बोंद की देदोहो

கவிதை கேட்பதை நீங்கள் நிறுத்திவிட்டதால்

சகோதரரே! எனக்கு தெரியவில்லை
ஏன் உங்கள் வீட்டுக் கதவை ஏன் மூடினீர்களேன.
வெளியே நீங்கள் பார்க்க விரும்பாததாலா?
அல்லது யாரையும் உள்ளே அனுமதிக்க விரும்பாததாலா?
நீங்கள் கவிதை கேட்பதையும் நிறுத்தி விட்டதாக தோன்றுகிறது.
நம் துயரங்களை போல உயரமான மலைகளும்
அன்பை போல பெருக்கெடுக்கும் ஆறுகளும்
அங்குதான் இருக்கிறது என
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் நீங்கள் வீட்டுக் கதவை மூடிவிட்டீர்கள்
ஏன் என்றுதான் தெரியவில்லை.
வெளியே நீங்கள் பார்க்க விரும்பாததாலா?
அல்லது யாரையும் உள்ளே அனுமதிக்க விரும்பாததாலா?
நீங்கள் கவிதை கேட்பதையும் நிறுத்தி விட்டதாக தோன்றுகிறது.

ஓ சகோதரரே! மீனைப் போல் விழித்திருங்கள்
அப்போதுதான் உங்களை நீங்கள் கவனிக்க முடியும்
ஆந்தைப் போல தலைகீழாக தொங்கிக் கொண்டு
ஒரு காலத்தில் வானில் பவுர்ண்மியைக் கண்டு
கொந்தளித்துக் கொண்டிருந்த பெருங்கடலை
உள்ளே நீங்கள் பார்க்க முடியும்.
உங்களின் கண்களின் ஏரிகள் வற்றி விட்டன.
ஆனால் ஓ சகோதரரே, உங்களை கல் என என்னால் சொல்ல முடியாது
எப்படி சொல்ல முடியும்?
கல்லும் தன்னுள்ளே நெருப்பு கொண்டிருக்கும்.
நீங்கள் நிலக்கரியை போன்றவர்.
சரியாக சொன்னேனா?
ஒரு பழைய தீ எங்கிருந்து வந்தாலும்
நீங்கள் பற்றி விடுவீர்கள்.
ஆனால் சகோதரரே! எனக்கு தெரியவில்லை
ஏன் நீங்கள் உங்களது வீட்டின் கதவை மூடினீர்களேன.
வெளியே நீங்கள் பார்க்க விரும்பாததாலா?
அல்லது யாரையும் உள்ளே அனுமதிக்க விரும்பாததாலா?
நீங்கள் கவிதை கேட்பதையும் நிறுத்தி விட்டதாக தோன்றுகிறது.

வானில் திரளும் இருளைப் பாருங்கள்
அதில் இருக்கும் நட்சத்திரங்களை பாருங்கள்
அவை இருளுக்கு அஞ்சுவதில்லை
அதோடு அவை சண்டையிடுவதும் இல்லை
அவற்றை சுற்றியிருக்கும் உலகுக்காக
தங்களுக்கு தாமே அவை ஒளியூட்டிக் கொள்கின்றன.
சூரியன் வலிமை வாய்ந்தது.
அதன் வலிமை இவ்வுலகை ஒன்றிணைக்கிறது.
உடைந்து போன ஒரு பாசி மாலையை
பலவீனமான கண்களால் பார்த்தபடி எப்போதும்
எப்போதும் என் பாட்டி கோர்த்துக் கொண்டிருக்கிறார்.
என் தாய் கிழிந்து போன பல துணிகளைக் கொண்டு
எங்களுக்கென ஒரு படுக்கையை செய்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் வந்து பார்க்கிறீகளா?
ஓ மறந்து விட்டேன், மன்னியுங்கள்
நீங்கள் உங்களின் வீட்டுக் கதவை மூடி விட்டீர்கள்.
ஏன் எனத் தெரியவில்லை.
வெளியே நீங்கள் பார்க்க விரும்பாததாலா?
அல்லது யாரையும் உள்ளே அனுமதிக்க விரும்பாததாலா?
நீங்கள் கவிதை கேட்பதையும் நிறுத்தி விட்டதாக தோன்றுகிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Jitendra Vasava

گجرات کے نرمدا ضلع کے مہوپاڑہ کے رہنے والے جتیندر وساوا ایک شاعر ہیں، جو دیہوَلی بھیلی میں لکھتے ہیں۔ وہ آدیواسی ساہتیہ اکادمی (۲۰۱۴) کے بانی صدر، اور آدیواسی آوازوں کو جگہ دینے والے شاعری پر مرکوز ایک رسالہ ’لکھارا‘ کے ایڈیٹر ہیں۔ انہوں نے آدیواسی زبانی ادب پر چار کتابیں بھی شائع کی ہیں۔ وہ نرمدا ضلع کے بھیلوں کی زبانی مقامی کہانیوں کے ثقافتی اور تاریخی پہلوؤں پر تحقیق کر رہے ہیں۔ پاری پر شائع نظمیں ان کے آنے والے پہلے شعری مجموعہ کا حصہ ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Jitendra Vasava
Illustration : Manita Kumari Oraon

منیتا اوراؤں، جھارکھنڈ کی فنکار ہیں اور آدیواسی برادریوں سے متعلق سماجی و ثقافتی اہمیت کے موضوع پر مورتیاں اور پینٹنگ بناتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Manita Kumari Oraon
Editor : Pratishtha Pandya

پرتشٹھا پانڈیہ، پاری میں بطور سینئر ایڈیٹر کام کرتی ہیں، اور پاری کے تخلیقی تحریر والے شعبہ کی سربراہ ہیں۔ وہ پاری بھاشا ٹیم کی رکن ہیں اور گجراتی میں اسٹوریز کا ترجمہ اور ایڈیٹنگ کرتی ہیں۔ پرتشٹھا گجراتی اور انگریزی زبان کی شاعرہ بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Pratishtha Pandya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan