மேள வாத்தியத்தின் ஆழமான அதிர்வு காற்றை நிரப்புகிறது. பின்னணியில் இருக்கும் ஒரே வாத்தியம் அதுதான். பக்தி பாடகர் ஒருவரின் மெல்லிய குரல், தர்காவுக்கு வெளியே யாசகம் கேட்பவர் போல, மெல்லெழுந்து நபிகளின் புகழை பாடி, உதவுபவரின் நலனுக்காக பாடுகிறது.

“ஒன்றே கால் தோலா தங்கம் என் கையிலும்

என் சகோதரி கைகளிலும் அளித்தவரே
யாளத்துடன் இருங்கள், எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள்...”

கச்சின் பெருமைமிகு பண்பாட்டு ஒற்றுமையை எடுத்துக் காட்டும் பாடல் இது. ஒருகாலத்தில் கச்சின் வெள்ளை பாலைவனம் முழுக்க பயணித்து தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சிந்து வரை, வருடந்தோறும் கால்நடைகளை மேய்த்து சென்று, பின் திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்த மேய்ச்சல் நாடோடிகள் வசிக்கும் பகுதி இது. பிரிவினைக்கு பிறகு வந்த புது எல்லைகள் அந்த பயணத்தை தடுத்துவிட்டன. ஆனால் கச்ச் மற்றும் சிந்து பகுதிகளில் இருக்கும் இந்து மற்றும் இஸ்லாமிய மேய்ச்சல் சமூகங்களுக்கு இடையேயான வலுவான உறவு அப்படியே நீடிக்கிறது.

சூஃபி, கவிதை, நாட்டுப்புற பாடல், புராணங்கள் போன்ற மதச்சடங்குகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் செறிவான சங்கமமும் இப்பகுதியில் வாழும் சமூகங்களின் கலை, கட்டடக்கலை மற்றும் மத முறைகளுக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இத்தகைய பண்பாட்டுத் தொகுப்பிலுள்ள பல, சூஃபியிசத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் இப்பகுதியின் நாட்டுப்புற இசையில் இந்த பாரம்பரியங்கள் தற்போது சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது

நாகத்ரனா தாலுகாவின் மோர்கர் கிராமத்திலுள்ள 45 வயது கிஷோர் ரவார் பாடும் இப்பாடலில் நபிகள் மீதான பக்தி மிளிர்கிறது.

நாகத்ரனாவின் கிஷோர் ரவார் பாடும் நாட்டுப்புற பாடலை கேளுங்கள்

કરછી

મુનારા મીર મામધ જા,મુનારા મીર સૈયધ જા.
ડિઠો રે પાંજો ડેસ ડૂંગર ડુરે,
ભન્યો રે મૂંજો ભાગ સોભે રે જાની.
મુનારા મીર અલાહ.. અલાહ...
મુનારા મીર મામધ જા મુનારા મીર સૈયધ જા
ડિઠો રે પાજો ડેસ ડૂંગર ડોલે,
ભન્યો રે મૂજો ભાગ સોભે રે જાની.
મુનારા મીર અલાહ.. અલાહ...
સવા તોલો મૂંજે હથમેં, સવા તોલો બાંયા જે હથમેં .
મ કર મોઈ સે જુલમ હેડો,(૨)
મુનારા મીર અલાહ.. અલાહ...
કિતે કોટડી કિતે કોટડો (૨)
મધીને જી ખાં ભરીયા રે સોયરો (૨)
મુનારા મીર અલાહ... અલાહ....
અંધારી રાત મીંય રે વસંધા (૨)
ગજણ ગજધી સજણ મિલધા (૨)
મુનારા મીર અલાહ....અલાહ
હીરોની છાં જે અંઈયા ભેણૂ (૨)
બધીયા રે બોય બાહૂ કરીયા રે ડાહૂ (૨)
મુનારા મીર અલાહ… અલાહ….
મુનારા મીર મામધ જા,મુનારા મીર સૈયધ જા.
ડિઠો રે પાજો ડેસ ડુરે
ભન્યો રે મૂજો ભાગ સોભે રે જાની
મુનારા મીર અલાહ અલાહ

தமிழ்

முகம்மதின் தூபிகள், சையதின் தூபிகள்
ஓ என் பூர்விகத்தின் மலைகளை நான் பார்த்திருக்கிறேன்
அவற்றின் முன் மண்டி போட்டு வணங்கியிருக்கிறேன்
ஓ நான் அதிர்ஷ்டசாலி! என் இதயம் அவற்றின் பெருமையில் மிளிர்கிறது
இளவரசர் முகம்மதின் தூபிகள், அல்லா! அல்லா!
முகம்மதின் தூபிகள், சையதின் தூபிகள்
ஓ என் பூர்விகத்தின் மலைகளை நான் பார்த்திருக்கிறேன்
அவற்றின் முன் மண்டி போட்டு வணங்கியிருக்கிறேன்
ஓ நான் அதிர்ஷ்டசாலி! என் இதயம் அவற்றின் பெருமையில் மிளிர்கிறது
இளவரசர் முகம்மதின் தூபிகள், அல்லா! அல்லா!
ஒன்றேகால் தோலாவை என் கையிலும்
என் சகோதரி கைகளிலும் அளித்தவரே
தயாளத்துடன் இருங்கள், எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள்(2)
ஓ இளவரசர் முகமதின் தூபிகள், அல்லா! அல்லா!
சிறிய பெரிய அறையோ (2)
மதினாவில் நீங்கள் சொயாரோ சுரங்கங்கள் கொண்டிருப்பீர்கள்
மதினாவில் அவரது அபரிமிதமான கருணையை காணுவீர்கள்.
ஓ இளவரசர் முகமதின் தூபிகள், அல்லா! அல்லா!
மழை பெய்யும், இரவின் இருளில் அது பெய்யும்
வானம் இடிக்கும், நேசத்துக்குரியோருடன் இருப்பீர்கள்
இளவரசர் முகமதின் தூபிகள், அல்லா! அல்லா!
அச்சன் கொண்ட மான் போல நான், என் கைகளை உயர்த்தி பிரார்த்திக்கிறேன்
முகம்மதின் தூபிகள், சையதின் தூபிகள்
ஓ என் பூர்விகத்தின் மலைகளை நான் பார்த்திருக்கிறேன்
அவற்றின் முன் மண்டி போட்டு வணங்கியிருக்கிறேன்
ஓ நான் அதிர்ஷ்டசாலி! என் இதயம் அவற்றின் பெருமையில் மிளிர்கிறது
ஓ இளவரசர் முகம்மதின் தூபிகள், அல்லா! அல்லா!

PHOTO • Rahul Ramanathan


பாடல் வகை : பாரம்பரிய நாட்டுப்புற பாடல்
தொகுப்பு : பக்தி பாடல்கள்
பாடல் : 5
பாடல் தலைப்பு : முனாரா மிர் மமத் ஜா, முனாரா மிர் ஷாஹித் ஜா
இசை : அமத் சமேஜா
பாடகர் : கிஷோர் ரவார். நாக்த்ரனா தாலுகாவின் மோர்கார் கிராமத்தை சேர்ந்த 45 வயது மேய்ப்பர் அவர்.
பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் : மேளம்
பதிவு செய்யப்பட்ட வருடம் : 2004, KMVS ஸ்டுடியோ
குஜராத்தி மொழிபெயர்ப்பு : அமத் சமேஜா, பாரதி கோர்


ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில் : ராஜசங்கீதன்

Pratishtha Pandya

پرتشٹھا پانڈیہ، پاری میں بطور سینئر ایڈیٹر کام کرتی ہیں، اور پاری کے تخلیقی تحریر والے شعبہ کی سربراہ ہیں۔ وہ پاری بھاشا ٹیم کی رکن ہیں اور گجراتی میں اسٹوریز کا ترجمہ اور ایڈیٹنگ کرتی ہیں۔ پرتشٹھا گجراتی اور انگریزی زبان کی شاعرہ بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Pratishtha Pandya
Illustration : Rahul Ramanathan

کرناٹک کی راجدھانی بنگلورو میں رہنے والے راہل رام ناتھن ۱۷ سالہ اسکولی طالب عالم ہیں۔ انہیں ڈرائنگ، پینٹنگ کے ساتھ ساتھ شطرنج کھیلنا پسند ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Rahul Ramanathan
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan