பெயர்: வஜேசிங் பர்கி. பிறப்பு: 1963. கிராமம்: இதாவா. மாவட்டம்: தஹோத்,குஜராத். சமூகம்: பஞ்சமஹாலி பில் பழங்குடி. குடும்ப உறுப்பினர்கள்: தந்தை, சிஸ்கா பாய். தாய், சதுரா பென். மற்றும் ஐந்து சகோதரர்கள். வஜேசிங் மூத்த மகன். குடும்பத்தின் வாழ்வாதாரம்: விவசாய தினக்கூலி வேலை

வறிய பழங்குடி குடும்பத்தில் பிறந்ததை குறிக்கும் வஜேசிங்கின் வார்த்தைகள்: ‘தாயின் கருவிலிருந்தே இருள்’. ‘தனிமை நிறைந்த பாலைவனம்’. ‘வியர்வை ஊறும் கிணறு.’ ‘அடர் நீலப் பசி’ மற்றும் ‘மின்மினிகளின் வெளிச்சம்.’ வார்த்தைகள் மீதான காதலும் பிறப்பிலேயே உடன் பிறந்தது.

சண்டைக்கு நடுவே ஒருமுறை சிக்கி, ஒரு தோட்டா ஆதிவாசியின் கழுத்தையும் தாடையையும் பதம் பார்த்தது. அவரின் குரல் பாதிப்படைந்தது. ஏழு வருட சிகிச்சையும் 14 அறுவை சிகிச்சைகளும் பெருமளவு கடனும் கூட அவரது காயத்தை ஆற்றவில்லை. அது வலியை இரட்டிப்பாக்கியது. சமூகத்தில் குரலில்லாத பழங்குடியாக பிறந்தது முதல் அடி.சொந்தமாக இருக்கும் குரலும் சேதமடைந்தது இரண்டாம் அடி. கண்கள் மட்டும் துல்லியம் கொண்டிருக்கிறது. குஜராத்தி இலக்கியத்திலேயே திறன்பெற்ற எழுத்து பரிசோதகராக வஜேசிங் இருக்கிறார். ஆனால் அவரின் சொந்த எழுத்துகளுக்கு உரிய மரியாதை கிட்டவில்லை.

தன் ஊசலாட்டத்தை பிரதிபலித்து வஜேசிங், குஜராத்தி எழுத்துருக்களைக் கொண்டு பஞ்ச்மஹாலி பிலி மொழியில் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

பிரதிஷ்தா பாண்டியா பஞ்ச்மஹாலி பிலியில் கவிதையை வாசிக்கிறார்

பிரதிஷ்தா பாண்டியா கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்கிறார்

મરવું હમુન ગમતું નથ

ખાહડા જેતરું પેટ ભરતાં ભરતાં
ડુંગોર ઘહાઈ ગ્યા
કોતેડાં હુકાઈ ગ્યાં
વગડો થાઈ ગ્યો પાદોર
હૂંકળવાના અન કરહાટવાના દંન
ઊડી ગ્યા ઊંસે વાદળાંમાં
અન વાંહળીમાં ફૂંકવા જેતરી
રઈં નીં ફોહબાંમાં હવા
તેર મેલ્યું હમુઈ ગામ
અન લીદો દેહવટો

પારકા દેહમાં
ગંડિયાં શેરમાં
કોઈ નીં હમારું બેલી
શેરમાં તો ર્‌યાં હમું વહવાયાં

હમું કાંક ગાડી નીં દીઈં શેરમાં
વગડાવ મૂળિયાં
એવી સમકમાં શેરના લોકુએ
હમારી હારું રેવા નીં દીદી
પૉગ મેલવા જેતરી ભૂંય

કસકડાના ઓડામાં
હિયાળે ઠૂંઠવાતા ર્‌યા
ઉનાળે હમહમતા ર્‌યા
સુમાહે લદબદતા ર્‌યા
પણ મળ્યો નીં હમુન
હમારા બાંદેલા બંગલામાં આસરો

નાકાં પર
ઘેટાં-બૉકડાંની જેમ બોલાય
હમારી બોલી
અન વેસાઈં હમું થોડાંક દામમાં

વાંહા પાસળ મરાતો
મામાનો લંગોટિયાનો તાનો
સટકાવે વીંસુની જીમ
અન સડે સૂટલીઈં ઝાળ

રોજના રોજ હડહડ થાવા કરતાં
હમહમીને સમો કાડવા કરતાં
થાય કી
સોડી દીઈં આ નરક
અન મેલી દીઈં પાસા
ગામના ખોળે માથું
પણ હમુન ડહી લેવા
ગામમાં ફૂંફાડા મારે સે
ભૂખમરાનો ભોરિંગ
અન
મરવું હમુન ગમતું નથ.

நான் இறக்க விரும்பவில்லை

மலைகள் நொறுங்கிப் போனதும்
பள்ளங்கள் வறண்டதும்
காடுகள் கிராமங்களானதும்
உறுமுவதும் புலம்புவதும்
நின்றுவிட்டது.

காற்றோடு அவை போய்விட்டன.
புல்லாங்குழல் வாசிக்குமளவு
மூச்சில்லை நுரையீரலில்.
இந்த வயிறும் குழி போல காலியாக இருந்தது
அப்போதுதான் கிராமத்தை விட்டு சென்று
நான் தலைமறைவானேன்

ஏதோவொரு வெளிநாட்டில்
பெயர் தெரியாத நகரத்தில்
யாரும் எங்களை பொருட்படுத்தாத இடத்தில்
கீழ்மக்களாக நாங்கள்.
எங்களின் பூர்வ வேர்களை
அங்கே பரப்ப முடியாது
நகரவாசிகள் எங்களுக்கு நிலம் கொடுக்கவில்லை
எங்களின் கால்களை வைக்க
ஒரு அங்குலம் கூட தரவில்லை.

குளிரில் நடுங்கியபடி
வெயிலில் வாடியபடி
மழையில் நனைந்தபடி
பிளாஸ்டிக் சுவர்களுக்குள் வாழ்ந்தோம்
நாங்கள் கட்டிய பங்களாக்களுக்குள்
எங்களுக்கு தங்குமிடம் இல்லை.

முச்சந்திகளில் எங்களின்
உழைப்புக்காக கால்நடைகள் போல
ஏலம் விடப்பட்டு நாங்கள்
அற்ப தொகைக்காக விற்கப்பட்டோம்

அசிங்கமான மாமா மற்றும்
கோவண பழங்குடிகளின்
நினைவு முட்கள் என் முதுகை
தேளின் கொடுக்குகளாக
கொட்டுகின்றன.
விஷம் தலைக்கு ஏறுகிறது.

இந்த நகரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறேன்
இது தரும் அன்றாட அவமானத்தை
மூச்சுத் திணறும் வாழ்க்கையை விட்டு
என் கிராமத்துக்கு திரும்ப விரும்புகிறேன்.
அதன் மடியில் தலை வைத்து படுக்க நினைக்கிறேன்.
ஆனால் அங்கொரு பாம்பு இருக்கிறது
பசியென்ற பாம்பு படமெடுத்து
எங்களை விழுங்கிவிட காத்திருக்கிறது.
ஆனால் நான்
இறந்து போக விரும்பவில்லை…


இக்கவிஞர் தற்போது நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயுடன் தஹோதின் கைசர் மெடிக்கல் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்

தமிழில்: ராஜசங்கீதன்

Vajesinh Pargi

ଗୁଜରାଟର ଦାହୋଡ଼ଠାରେ ଅବସ୍ଥାନ କରୁଥିବା ବାଜେସିଂ ପାର୍ଗୀ ପଞ୍ଚମାହାଲି ଭିଲି ଉପଭାଷା ଓ ଗୁଜରାଟୀ ଭାଷାରେ ଲେଖାଲେଖି କରୁଥିବା ଜଣେ ଆଦିବାସୀ କବି। ‘ଜାକାଲନାମୁଟି’ ଓ ‘ଆଗିୟାନୁନାଯାୱାଲୁନ’ ନାମରେ ତାଙ୍କର ଦୁଇଟି କବିତା ସଂକଳନ ପ୍ରକାଶିତ। ନବଜୀବନ ପ୍ରେସ୍‌ରେ ଜଣେ ପ୍ରୁଫ୍ରିଡର ଭାବେ ସେ ପ୍ରାୟ ଗୋଟିଏ ଦଶନ୍ଧିରୁ ଊର୍ଦ୍ଧ୍ଵ ସମୟ ଧରି କାମ କରୁଥିଲେ।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Vajesinh Pargi
Illustration : Labani Jangi

ଲାବଣୀ ଜାଙ୍ଗୀ ୨୦୨୦ର ଜଣେ ପରୀ ଫେଲୋ ଏବଂ ପଶ୍ଚିମବଙ୍ଗ ନଦିଆରେ ରହୁଥିବା ଜଣେ ସ୍ୱ-ପ୍ରଶିକ୍ଷିତ ଚିତ୍ରକର। ସେ କୋଲକାତାସ୍ଥିତ ସେଣ୍ଟର ଫର ଷ୍ଟଡିଜ୍‌ ଇନ୍‌ ସୋସିଆଲ ସାଇନ୍ସେସ୍‌ରେ ଶ୍ରମିକ ପ୍ରବାସ ଉପରେ ପିଏଚଡି କରୁଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Labani Jangi
Translator : Rajasangeethan

ରାଜସଙ୍ଗୀତନ୍‌ ଚେନ୍ନାଇରେ ରହୁଥିବା ଜଣେ ଲେଖକ। ସେ ଏକ ଅଗ୍ରଣୀ ତାମିଲ ସମାଚାର ଚାନେଲରେ ସାମ୍ବାଦିକ ଭାବେ କାର୍ଯ୍ୟରତ ଅଛନ୍ତି।

ଏହାଙ୍କ ଲିଖିତ ଅନ୍ୟ ବିଷୟଗୁଡିକ Rajasangeethan