பண்பாட்டறிவு மற்றும் சமூகப் போக்குகளின் வாகனமாக எப்போதும் நாட்டுப்புற பாடல்கள் இருந்து வருகின்றன. அவ்வப்போது பண்பாட்டு மாற்றம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கும் அவை பயன்படுகின்றன. நாட்டுப்புற பாடலின் வாய்மொழித் தன்மையும் ஒவ்வொரு முறை பாடப்படும்போது மாறக் கூடிய விதமும், சமூகப் பண்பாட்டில் கொண்டிருக்கும் அடித்தளமும் நாட்டுப்புற பாடல்வகைக்கு இத்தகைய நெகிழ்தன்மையை தருகின்றன
இங்கு வழங்கப்பட்டிருக்கும் பாடல், நாட்டுப்புற இசையின் மீட்டுருவாக்க சக்தியை உள்ளடக்கி, கிராமப்புற பெண்களின் வாழ்க்கை யதார்த்தம் குறித்த விழ்ப்புணர்வை அளிக்கிறது. கச்ச் மற்றும் அகமதாபாத் பகுதிகளின் பல பெண் கலைஞர்களால் பாடப்பட்டிருக்கும் இப்பாடல், உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சமூக விமர்சனத்தை முன் வைக்கிறது.
இப்பாடலின் சிறப்பம்சமாக பின்னணியில் இசைக்கப்படும் ஓர் இசைக்கருவி இருக்கிறது. ஜோதியா பவா அல்லது அல்கோசா என அழைக்கப்படும் இந்த இரு குழல் காற்றிசைக் கருவி, வடமேற்கு பகுதிகளான பாகிஸ்தானின் சிந்துப் பகுதியிலும் இந்தியாவின் கச்ச், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளிலும் பாரம்பரியமாக இசைக்கப்படுகிறது.
કચ્છી
પિતળ તાળા ખોલ્યાસી ભેણ ત્રામેં તાળા ખોલ્યાસી,
બાઈએ જો મન કોય ખોલેં નાંય.(૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી, ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય. (૨)
પિતળ તાળા ખોલ્યાસી ભેણ ત્રામે તાળા ખોલ્યાસી,
બાઈએ જો મન કોય ખોલે નાંય. (૨)
ઘરજો કમ કરયાસી,ખેતીજો કમ કરયાસી,
બાઈએ જે કમ કે કોય લેખે નાંય.
ઘરજો કમ કરયાસી, ખેતીજો કમ કરયાસી
બાઈએ જે કમ કે કોય નેરે નાંય
ગોઠ જા ગોઠ ફિરયાસી, ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય.
ચુલુ બારયાસી ભેણ,માની પણ ગડયાસી ભેણ,
બાઈએ કે જસ કોય મિલ્યો નાંય. (૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય. (૨)
સરકાર કાયધા ભનાય ભેણ,કેકે ફાયધો થ્યો ભેણ,
બાઈએ કે જાણ કોઈ થિઈ નાંય (૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય (૨)
தமிழ்
பித்தளைப் பூட்டுகளையும் தாமிரப் பூட்டுகளையும் திறப்பீர்கள்
பெண்ணின் உணர்வையும் அவளின் மனதையும்
எவராலும் திறக்க முடியாது. (2)
கிராமந்தோறும் பயணிப்பீர்கள்
ஆனால் ஒருமுறை கூட
திரைக்கு பின்னிருக்கும்
அவள் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள் (2)
பித்தளைப் பூட்டுகளையும் தாமிரப் பூட்டுகளையும் திறப்பீர்கள்
பெண்ணின் உணர்வையும் அவளின் மனதையும்
எவராலும் திறக்க முடியாது. (2)
வீட்டில் உழைக்கிறோம். நிலத்தில் உழைக்கிறோம்
ஆனால் யார் அவற்றை கவனிக்கிறார்?
கிராமந்தோறும் பயணிப்பீர்கள்
ஆனால் ஒருமுறை கூட
திரைக்கு பின்னிருக்கும்
அவள் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள்
உங்கள் சமையற்கட்டின் அடுப்புகளை பற்ற வைக்கிறோம். ரொட்டிகளையும் செய்கிறோம்.
ஒருபோதும் எவரும் பெண்ணுக்கு நன்றி சொன்னதில்லை
பாராட்டி புகழ்ந்ததும் இல்லை.(2)
கிராமந்தோறும் பயணிப்பீர்கள்
ஆனால் ஒருமுறை கூட
திரைக்கு பின்னிருக்கும்
அவள் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள் (2)
ஆட்சி புது சட்டங்களை செய்கிறது.
ஆனால் பலன் யாருக்கு, ஓ அக்கா, சொல்லு?
யாரும் பெண்களுக்கு சொல்வதுமில்லை.(2)
கிராமந்தோறும் பயணிப்பீர்கள்
ஆனால் ஒருமுறை கூட
திரைக்கு பின்னிருக்கும்
அவள் முகத்தைப் பார்க்க மாட்டீர்கள் (2)
பாடல் வகை : முற்போக்கு
தொகுப்பு : விடுதலை மற்றும் விழிப்புணர்வு பாடல்கள்
பாடல் : 8
பாடல் தலைப்பு : பித்தள் தல கொலாசி, ட்ராமென் தல கொல்யாசி
இசையமைப்பாளர் : தேவால் மேத்தா
பாடகர் : கச்ச் மற்றும் அகமதாபாத் கலைஞர்கள்
இசைக்கருவிகள் : மேளம், ஹார்மோனியம், தமுரினி, ஜோதியா பவா (அல்கோசா)
பதிவு செய்யப்பட்ட வருடம் : 1998, KMVS ஸ்டுடியோ
சமூகக்குழு நடத்தும் சூர்வானி ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், கச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) வழியாக பாரிக்கு வந்தது
ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தோலாகியா, KMVS திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோரின் ஆதரவுக்கும் பார்திபென் கோரின் அளப்பரிய உதவிக்கும் நன்றி
தமிழில்: ராஜசங்கீதன்