வருடத்தில் பெரும்பாலும் உச்ச வெப்பம் சுட்டெரிக்கும் ரேன் பகுதியில் மழை பெய்வது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கலாம். வெயிலிலிருந்து தப்பிக்கும் ஆசுவாசமாக அதற்கு மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். பெண்ணின் அன்றாட வாழ்க்கையில் ஆசுவாசத்தை கொண்டு வரும் காதலுக்கு இந்த மழை உருவகமாவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் கட்ச்சி இசைக்கு காதலும் அற்புதமான பருவமழையும் புதிதில்லை. ஆடும் மயில், கார்மேகம், மழை, காதலனுக்காக ஏங்கும் இளம்பெண் போன்ற காட்சிகளை, பிரபலமான நாட்டுப்புற இசை பாரம்பரியங்கள் மட்டுமின்றி, இலக்கியம் மற்றும் ஓவியங்களிலும் இயல்பாக காண முடியும்.

ஆனால் அவை எல்லாவற்றையும் ஒன்றாக, அஞ்சாரின் கெல்ஜி பாயின் குரலில் குஜராத்தி மொழியில் பாடப்படும் இப்பாடலில் கேட்கும்போது, அதே காட்சிகள் அப்பருவத்தின் முதல் மழை தரும் அற்புதத்தை நமக்கு அளிக்கிறது.

அஞ்சாரின் கெல்ஜி பாய் பாடும் பாடலை கேளுங்கள்

Gujarati

કાળી કાળી વાદળીમાં વીજળી ઝબૂકે
કાળી કાળી વાદળીમાં વીજળી ઝબૂકે
મેહૂલો કરે ઘનઘોર,
જૂઓ હાલો કળાયેલ બોલે છે મોર (૨)
કાળી કાળી વાદળીમાં વીજળી ઝબૂકે
નથડીનો વોરનાર ના આયો સાહેલડી (૨)
વારી વારી વારી વારી, વારી વારી કરે છે કિલોલ.
જૂઓ હાલો કળાયેલ બોલે છે મોર (૨)
હારલાનો વોરનાર ના આયો સાહેલડી (૨)
વારી વારી વારી વારી, વારી વારી કરે છે કિલોલ.
જૂઓ હાલો કળાયેલ બોલે છે મોર (૨)
કાળી કાળી વાદળીમાં વીજળી ઝબૂકે
મેહૂલો કરે ઘનઘોર
જૂઓ હાલો કળાયેલ બોલે છે મોર (૨)

தமிழ்
கார்மேகத்தில் ஒரு மின்னல்
கார்மேகத்தில் ஒரு மின்னல்
மழையால் நிரம்பிய மேகங்களை பாருங்கள்
மயில் பாடி ஆடி தோகை விரிப்பதை காணுங்கள்! (2)
கார்மேகத்தில் ஒரு மின்னல்
மூக்குத்தி தரவிருந்த நபர்
இன்னும் வந்து சேரவில்லை தோழி (2)
மயில் மீண்டும் மீண்டும் பாடுகிறது
தோகை விரிக்கும் விதத்தை பாருங்கள் (2)
கழுத்தணி கொடுக்கவிருந்த நபர்
இன்னும் வந்து சேரவில்லை தோழி (2)
அந்த மயில் மீண்டும் மீண்டும் பாடுகிறது.
தோகை விரிக்கும் விதத்தை பாருங்கள் (2)
கார்மேகத்தில் ஒரு மின்னல்,
மழையால் நிரம்பிய மேகங்களை பாருங்கள்
மயில் பாடி ஆடி தோகை விரிப்பதை காணுங்கள்! (2)

PHOTO • Labani Jangi

பாடல் வகை: பாரம்பரிய நாட்டுப்புற பாடல்

தொகுப்பு: காதல் மற்றும் ஏக்கப் பாடல்கள்

பாடல்: 7

பாடலின் தலைப்பு: கலி கலி வாடலிமா விஜாலி சபூகே

இசையமைப்பாளர்: தேவால் மேத்தா

பாடகர்: கெல்ஜி பாய், அஞார்

பயன்படுத்தப்பட்ட கருவிகள்: மேளம், ஆர்மோனியம், பாஞ்சோ, தம்புரா

பதிவு செய்யப்பட்ட வருடம்: 2012, KMVS ஸ்டுடியோ


சூர்வானி என்கிற ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், பாரிக்கு கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) மூலமாக கிடைத்தது.

ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில் : ராஜசங்கீதன்

Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Illustration : Labani Jangi

मूळची पश्चिम बंगालच्या नादिया जिल्ह्यातल्या छोट्या खेड्यातली लाबोनी जांगी कोलकात्याच्या सेंटर फॉर स्टडीज इन सोशल सायन्सेसमध्ये बंगाली श्रमिकांचे स्थलांतर या विषयात पीएचडीचे शिक्षण घेत आहे. ती स्वयंभू चित्रकार असून तिला प्रवासाची आवड आहे.

यांचे इतर लिखाण Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan