மாரடைப்பு வரக்கூடிய வயது அல்ல அது. கே.வீரமணி இறக்கும்போது அவருக்கு 35 வயது கூட ஆகவில்லை.
"நாங்கள் வயலில்தான் இருந்தோம். அவர் நல்லாதான் இருந்தார். திடீரென்று விழுந்து இறந்துவிட்டார் ..." கடமங்குடி கிராமத்தில் கணவரை இழந்த கவிதா கூறுகிறார். இவ்வளவு சின்ன வயதில் மாரடைப்பால் ஒருவர் எப்படி இறக்க முடியும் என்று அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் கேட்கிறார் அவர். அவரது கணவர் திடகாத்திரமான உடல் நலத்தோடுதான் இருந்தார். ஆனால், நிறைய மன அழுத்தமும் பதற்றமும் அவருக்கு இருந்தது.
டிசம்பர் 30, 2016 அன்று, அவர்கள் இருவரும் தங்களின் விவசாய நிலத்துக்குப் போனார்கள். நிலமில்லாத தலித் குடும்பம் அவர்களுடையது. கிராமத்தில் இருந்த இன்னொருவரிடமிருந்து முதன்முறையாக குத்தகைக்கு 1.25 ஏக்கர் நிலத்தை அவர்கள் எடுத்திருந்தார்கள். நெல் பயிர் வைக்கலாம். அதில் வேறு எந்த பயிர் வருகிறதோ அதையும் வைக்கலாம்.
மாலை 4 மணியளவில், அவரது கணவர் விழுந்ததை கவிதா பார்த்தார். " என்ன ஆச்சு என்று நான் ஓடிப்போய் பார்த்தேன். அவர் மயக்கத்திலேயே இருந்தார்" என்கிறார் . கவிதா உதவிக்கு ஆட்களை வைத்துக்கொண்டு ஆம்புலன்ஸை வரவழைத்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குப் போனார். மாரடைப்பு காரணமாக அவர் உடனடியாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவளிடம் கூறினர். அதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட மரணம் என்று அவர்கள் கூறினர்.
ஐந்து வயது திவ்யதர்ஷினியையும், இரண்டரை வயதான நித்யஸ்ரீயையும் இனி கவிதாதான் தனியாக கவனித்துக்கொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இன்னமும் முயற்சிக்கிறார் அவர். “ 2016 இல் மழை பெய்யவில்லை; அது எங்கள் துரதிர்ஷ்டம் "என்கிறார் அவர். "எங்கள் வாழ்வாதாரத்துக்காக, நிலத்தை குத்தகைக்கு எடுக்க நாங்கள் முடிவு செய்த முதல் ஆண்டு இது, விவசாயத்திற்கு மிக மோசமான ஆண்டாக மாறியது."
அழகேசன் ஒரு நிலமற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி. 2016-17 ஆம் ஆண்டில் இரண்டு ஏக்கர் நிலத்தை அவர் குத்தகைக்கு எடுக்க முடிவு செய்தார். அவர் முடிவு செய்த நேரம் பார்த்து, இந்தப் பகுதியே கடந்த நூறு வருடத்தில் இல்லாத அளவுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்டதாக மாறியது. அவர் முடிவு செய்த நேரம், இந்த பிராந்தியத்தில் மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்ட காலமாக மாறியுள்ளது.
அவரது மறைவால், அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கிவிட்டது. பணப் பிரச்சனைகளிலும் மூழ்கிவிட்டது. 70 வயதான அழகேசனின் தாய் அம்ருதவல்லி குடும்பத்தில் வருமானத்தில் ஈட்டுபவர். அவர் அருகிலுள்ள பள்ளியில் தூய்மைப்பணியாளராக, மாதம் 3,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார். அவரது பேரக்குழந்தைகளுக்கு அவர் ஆதரவாக இருக்கிறார். அழகேசன் மற்றும் ஆரோக்கிய மேரி தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருமே பதின்ம வயதினர். பள்ளியில் படிக்கின்றனர்.
ஆரோக்கியமேரியை வயல்களில் வேலை செய்ய அழகேசன் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. ஆனால், அவர் யாராவது அவளுக்கு உதவினால் அவள் அங்கன்வாடி உதவியாளராக வேலை செய்ய தயாராக இருக்கிறார். விவசாயத் தொழிலாளியான அவரது தந்தை தங்கய்யாவும் நீண்ட காலத்திற்கு முன்பே வேலை செய்வதை நிறுத்திவிட்டார்.
குடும்பத்திற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை, மேலும், அவர்கள் தலா 40,000 ரூபாய் மதிப்புகொண்ட, இரண்டு கடன்களை இரண்டு தனியார் கடன் நிறுவனங்களிலிருந்து அழகேசனின் மனைவி மற்றும் தாயின் பெயர்களில் அவை எடுக்கப்பட்டுள்ளன. "நாங்கள் எனது ஆபரணங்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளோம். மேலும் உறவினர்களிடமிருந்து சின்னச் சின்ன கடன்களையும் வாங்கியிருக்கிறோம்" என்கிறார் ஆரோக்கிய மேரி.

இந்தப் பகுதியில் விவசாயிகளின் துயரங்களும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருவதால், ஜனவரி 2017இல், பண்ணை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் சிவில் உரிமைகள் சங்கத்தின் குழுவினர், டெல்டா பகுதியில் நடக்கிற, இந்த இறப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரித்தது.
"டெல்டாவின் மூன்று மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற, 50 திடீர் மரணங்கள் மற்றும் தற்கொலைகளைப் பற்றி நாங்கள், ஆய்வு செய்தோம்" என்கிறார் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி நகரில் உள்ள இருதய நோய் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் பாரதிச்செல்வன்.
டெல்டாவில் இதுபோன்ற சம்பவங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று டாக்டர் செல்வன் கூறுகிறார். "இறந்தவர்களில் பெரும்பாலோருக்கு முன்பே இதயநோய் பிரச்சினைகள் இருந்ததாக தகவல்கள் இல்லை; பலர் இளம் வயதினர். விவசாயப் பிரச்சனைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளோடு நம்மால் இவற்றை தொடர்புபடுத்தி ஆராய முடியும். அரசாங்கம் அதை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், திடீர் உணர்ச்சிவசப்படலும், பிரச்சனைகளின் காரணமான மன அழுத்தமும், பொருளாதாரப் பிரச்சனைகளும் இந்த மரணங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்புவதற்கு நமக்கு காரணங்கள் உள்ளன ” என்று அவர் கூறுகிறார். " இங்கே விவசாய நெருக்கடி மோசமடைந்து வருகிறது. அரசாங்கமோ இதைப் பற்றிய கவலை இல்லாமல் அக்கறையற்று இருக்கிறது” என்கிறார் அவர்.
நிலவுகிற வறட்சியோடும் விவசாயப் பிரச்சனைகளோடும் துயரங்களுடன் இந்தச் சம்பவங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. இது உள்ளூர் பிரச்சினைகள் என்றும் உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் தற்செயலான மரணங்கள் என்றும் தமிழக அரசு இதனை விளக்குகிறது. உள்ளூர் விவசாயிகளிடையே உள்ள அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, 2017 ஜனவரி முதல் ஜூன் வரை மாரடைப்பு காரணமாக 200 க்கும் மேற்பட்ட திடீர் மரணங்கள் இருந்தபோதிலும், அரசு அதன் விளக்கத்தில் உறுதியாக இருக்கிறது.
ஆனால், விவசாயிகளைப் பொறுத்தவரை, இவை தற்கொலைகளுக்கு மேலானவை. ஜனவரி 5, 2017 அன்று மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய அறிவிப்பின்படி, 2016 ஆம் வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மட்டும், 106 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகளில் பெரும்பான்மையானவை காவிரி டெல்டாப் பகுதி அமைந்துள்ள, எட்டு மாவட்டங்களில் நடந்துள்ளன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
மாநில அரசு இந்த தற்கொலைகளை விவசாய நெருக்கடி தொடர்பானவை என்பதை ஏற்க மறுத்தாலும், இப்பகுதியில் இவ்வளவு குறுகிய காலத்தில் அதிர்ச்சியால் நடந்த வரிசையான மரணங்களுக்கு வறட்சி ஒரு மிகப்பெரிய காரணம் என்று தெரிகிறது. மார்ச் 2017 இல் அரசாங்கமே தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் வழக்கமாக மழையைத் தரும் வடகிழக்கு பருவ காலம் 2016 இல் தோல்வியடைந்தது. அந்த பருவ காலத்தில் பெய்யும் மழை, பொதுவாக, எட்டு மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நெல் வளர உதவுகிறது. குளிர்காலத்தில் பயிர்கள் வளர்வதற்கு, வேறு எந்த இந்திய மாநிலத்தையும் விட, ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ளது.
இந்த பிராந்தியத்தில் சில மாவட்டங்களில் இப்போது ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழைக்கு முந்தைய மழை பெய்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையில் 60 சதவீத பற்றாக்குறையை அரசு பதிவு செய்தது. இரு பருவ காலங்களிலும் போதுமான மழை இல்லாமல் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு. 2016 குளிர்காலத்தில் நெல் விதைப்பு 30 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்தது. நெல் உற்பத்தி 60 சதவீதத்துக்கு அதிகமாக குறைந்தது என்று மாநில அரசின் விவசாயத் துறையின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2016 முதல் மார்ச் 2017 வரையிலான விவசாயப் பருவத்தில் - 35 லட்சம் ஹெக்டேர் அளவுள்ள பரப்பளவில் தீவிரமான அளவிலிருந்து மிதமான அளவு வரையான வறட்சி நிலைமைகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதாக, ஒருங்கிணைந்த வறட்சி தீவிரக் குறியீடு (ஐடிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் வரை உள்ளது.
ஒரு காலத்தில் மிகவும் வளமாக இருந்த காவிரி டெல்டா பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்தில் மூன்று போகம் பயிர்கள் விளைந்தன. 20 ஆண்டுகாலமாக, நீர் கிடைப்பதில் ஏற்பட்ட வீழ்ச்சி அதை இரண்டு போகம் மட்டும் விளையும் பூமியாகக் குறைத்தது. 2016-17 விவசாய ஆண்டில், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக, ஒரு காலத்தில் நீர்வளம் நிறைந்த, இந்தப் பகுதியின் விவசாயிகளால் ஒரு போகம் நெல் பயிரைக் கூட பயிரிட்டு அறுவடை செய்ய முடியவில்லை. தோல்வியுற்ற பருவமழைக்கு மேலதிகமாக, காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கை கர்நாடகா அரசு வெளியேற்றவில்லை. அதன் பக்கத்திலுள்ள ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் வறட்சியின் காரணமாகவே அது நீரை வெளியேற்ற வில்லை.
இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பயிர் இழப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
கடமங்குடி கிராமத்தில் ஒரு சிறிய நனைந்த குடிசையில், வீரமணியின் புகைப்படம் இப்போது நுழைவாயிலின் இடதுபுறத்தில் ஒரு மூலையில் சுவரில் தொங்குகிறது. வீரமணிக்கும் நில உரிமையாளருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் நகலை, கவிதா நமக்குக் காட்டினார். உண்மையில் அது ஒரு துணை குத்தகை. அதாவது ஒரு குத்தகைதார்ரிடமிருந்து பெறப்பட்டுள்ள துணை குத்தகை. இந்த நிலம் ஒரு மத நிறுவனத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமானது; வீரமணி நிலத்தை குத்தகைக்காக எடுத்துக் கொண்ட நபர் வெறும் முகவர் மட்டுமே. குத்தகை காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 25,000 ரூபாய் என்று ஒப்பந்தம் கூறுகிறது. அத்தகைய ஒப்பந்தம்தான் அழகேசனிடம் இருந்தது.
இதன் பொருள் என்னவென்றால், விவசாய நிலங்கள் தங்கள் பெயர்களில் இல்லாததால் வீரமணியோ அழகேசனோ வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முடியாது - பயிர் கடன்களுக்கான முக்கியமான தேவை அது.
"நாங்கள் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை," என்று கவிதா கூறுகிறார். "எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே, நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அவர்களை படிக்க வைக்க, ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட முடிவு செய்தோம்," என்று அவர் கூறுகிறார். அதுவே தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
விவசாயிகளின் துயரமடைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகிற, 3 லட்சம் இழப்பீடு, மாநில அரசால் கவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு அரசியல்ரீதியான அழுத்தத்தால்தான் கிடைத்துள்ளது. அதிலிருந்து அவர் கடன் வாங்கிய நிறுவனத்துக்கும் சொந்தக்காரர்களின் கடன்களுக்கும் 50,000 ரூபாயை செலுத்திவிட்டார்.
"இந்தப் பணம் முன்பே கிடைத்திருந்தால், என் கணவர் இறந்திருக்க மாட்டார்" என்று அவர் புலம்புகிறார்.
100 நாள் வேலையும் வறட்சியோடு போராடும் முதியவர்களும்
ஒரு காலத்தில் செழிப்புடன் விளங்கிய தமிழ்நாட்டின் காவேரி டெல்டா, இன்று நீண்ட நெடிய வறட்சியால் காய்ந்துபோயிருக்கிறது. விவசாய சூழல் மொத்தமாக நொறுங்கிவிட்டது. பல கிராமங்களில் இளைஞர்கள் வேறு வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சியிருக்கும் முதியவர்கள் அடுத்த வேளை உணவுக்காக முதுகெலும்பு உடைய வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்
வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஒரு பஞ்சம்
ஒரு காலத்தில் செழிப்புடன் விளங்கிய தமிழ்நாட்டின் காவேரி டெல்டா, இன்று நீண்ட நெடிய வறட்சியால் காய்ந்துபோயிருக்கிறது. விவசாய சூழல் மொத்தமாக நொறுங்கிவிட்டது. பல கிராமங்களில் இளைஞர்கள் வேறு வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சியிருக்கும் முதியவர்கள் அடுத்த வேளை உணவுக்காக முதுகெலும்பு உடைய வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்
தமிழில்: த நீதிராஜன்