“கான்க்ரீட் காடு போலாகிவிட்டது,” என்கிறார் கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் உச்காவோன் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சஞ்சய் சவான். கடந்த பத்தாண்டுகளில் உச்காவோனில் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை கூடி விட்டது. நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.

“எங்களின் கிணறுகளில் இப்போது தண்ணீர் இல்லை,” என்கிறார் 48 வயது விவசாயி.

மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர், சங்கலி, சதாரா போன்ற பகுதிகளில் இருக்கும் 14 சதவிகித கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வருவதாக மகாராஷ்டிராவின் நிலத்தடி நீர் புத்தகம் (2019) குறிப்பிடுகிறது. கிணற்றின் சராசரி ஆழம் 30 அடியிலிருந்து 60 அடியாக கடந்த இருபது வருடங்களில் ஆகி விட்டதாக சொல்கிறார் ஆழ்துளை கிணறு ஒப்பந்ததாரர், ரத்தன் ராதோட்.

உச்காவோனில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பெருமளவில் நிலத்தடி நீரை உறியும் ஓர் ஆழ்துளைக் கிணறு இருப்பதாக சொல்கிறார் சஞ்சய். “இருபது வருடங்களுக்கு முன், 15-20 ஆழ்துளைக் கிணறுகள் உச்காவோனில் இருந்தன. இன்று 700-800 இருக்கின்றன,” என்கிறார் ஊரின் முன்னாள் துணைத் தலைவர் மதுகர் சவான்.

உச்காவோனின் தினசரி நீர்த் தேவை 25லிருந்து 30 லட்சம் லிட்டராக இருக்கிறது, ஆனால் கிராமத்தில் 10-12 லட்சம் லிட்டர் நீர்தான் ஒரு நாள் விட்டு ஒருநாள் கிடைக்கிறது,” என்கிறார் மதுகர். இச்சூழல், கிராமத்தில் ஒரு பெரும் நீர் நெருக்கடியை உருவாக்கும் என்கிறார் அவர்.

இக்குறும்படம், கொல்ஹாப்பூரில் குறையும் நிலத்தடி நீரால் பாதிக்கப்படும் விவசாயிகளை காட்சிப்படுத்தி இருக்கிறது.

காணொளி: தண்ணீரைத் தேடி

தமிழில்: ராஜசங்கீதன்

Jaysing Chavan

जयसिंह चव्हाण, कोल्हापुर के स्वतंत्र फ़ोटोग्राफ़र और फ़िल्ममेकर हैं.

की अन्य स्टोरी Jaysing Chavan
Text Editor : Siddhita Sonavane

सिद्धिता सोनावने एक पत्रकार हैं और पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया में बतौर कंटेंट एडिटर कार्यरत हैं. उन्होंने अपनी मास्टर्स डिग्री साल 2022 में मुम्बई के एसएनडीटी विश्वविद्यालय से पूरी की थी, और अब वहां अंग्रेज़ी विभाग की विज़िटिंग फैकल्टी हैं.

की अन्य स्टोरी Siddhita Sonavane
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan