பெருநகரங்களில் இருந்து புறப்படும் புலம்பெயர்ந்தோரின் படங்கள் ஊடகங்கள் முழுவதிலும் பரவிக் கிடந்தாலும், திரும்பிவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் சிரமங்களை முன்னிலைப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர், சிறு நகரங்களிலும், கிராமப்புறத்திலும் இருக்கும் நிரூபர்கள். பிலாஸ்பூரைச் சேர்ந்த மூத்த புகைப்பட பத்திரிகையாளரான சத்யபிரகாஷ் பாண்டேயும், புலம்பெயர் தொழிலாளர்களை தொடர்புகொண்டு அவர்களின் சிரமங்களில் ஒன்றான நீண்ட தூரத்தை கடந்து வருவதை பற்றி மிகவும் சிரத்தை எடுத்து எழுதியுள்ளார். இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களில் உள்ளவர்கள், சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு திரும்பி கொண்டிருக்கும் சுமார் 50 புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

ராய்ப்பூருக்கும் கார்வாவுக்கும் இடையிலான தூரம் 538 கிலோமீட்டர்.

"அவர்கள் கால்நடையாகவே நடந்து வந்தனர்", என்று அவர் கூறினார். "அவர்கள் ஏற்கனவே கடந்த 2 - 3 நாட்களில் (ராய்ப்பூருக்கும் பிலாஸ்பூருக்கும் இடையிலான) 130 கிலோமீட்டரை நடந்தே கடந்துவிட்டனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம் என்று அவர்கள் நம்புகின்றனர். (முகநூல் பக்கத்தில் இதைக்குறித்து சத்யபிரகாஷ் எழுதிய துணுக்கு இவர்களது சிரமத்தின் மீதான கவனத்தைப் பெற்றது மேலும் பல்வேறு தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இவர்களுக்கான போக்குவரத்தினை அம்பிகாபூரிலிருந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்கள் கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டி இருந்தாலும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று உறுதியுடன் இருந்தனர்).

தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் ஒருவரான ரபீக் மியான் அவரிடம்:  "வறுமை இந்த நாட்டின் சாபக்கேடு, சார்" என்று கூறியிருக்கிறார்.

அட்டைப்படம்: சத்யபிரகாஷ் பாண்டே பிலாஸ்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மற்றும் வனவிலங்கு புகைப்பட கலைஞரும் ஆவார்.

PHOTO • Satyaprakash Pandey

'அவர்கள் ஏற்கனவே கடந்த 2 - 3 நாட்களில் (ராய்ப்பூருக்கும் பிலாஸ்பூருக்கும் இடையிலான) 130 கிலோமீட்டரை நடந்தே கடந்துவிட்டனர்.'

தமிழில்: சோனியா போஸ்

Purusottam Thakur

Purusottam Thakur is a 2015 PARI Fellow. He is a journalist and documentary filmmaker and is working with the Azim Premji Foundation, writing stories for social change.

Other stories by Purusottam Thakur
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose