நாம் காண்பதை, நம்மால் நம்ப முடியவில்லை. நெருங்கிச் சென்று அவரை பார்த்தோம். அது உண்மைதான். இப்போதும் எங்களால் நம்ப முடியவில்லை. தலா 40-45 அடி நீளத்திற்கு ஐந்து மூங்கில்கள் சமநிலையாக ரத்தன் பிஸ்வாஸ் மிதிவண்டியின் மீது கட்டப்பட்டுள்ளன. இவற்றை அவர் தனது கிராமத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிபுரா தலைநகர் அகர்தலா சந்தைக்கு சாலை வழியாக தள்ளிக் கொண்டு வருகிறார். இந்த நீண்ட முங்கில் கழிகளின் நுனிப்பகுதி ஏதேனும் கல், மேடு அல்லது வேறு பொருட்களின் மீது இடித்துவிட்டால் மிதிவண்டியுடன் மூங்கிலும், உரிமையாளரும் சேர்ந்து கீழே விழ வேண்டியது தான். மிகவும் வேதனைக்குரியது. மூங்கில்கள் பார்ப்பதற்கு லேசாக தெரிந்தாலும், உண்மை அப்படியில்லை. ஐந்து மூங்கில் கழிகளில் இரண்டு சேர்த்து கட்டப்பட்டுள்ளதால் நான்கு போன்று காணப்படுகிறது. ஐந்தும் ஒன்றாக சுமார் 200 கிலோகிராம் இருக்கும். பிஸ்வாசும் இதை அறிவார். இதுபற்றி நம்மிடம் அவர் மகிழ்ச்சியாக பேசினார். அவரது விசித்திர சரக்கு வண்டியை புகைப்படம் எடுக்கவும் அவர் அனுமதித்தார். அவற்றை நம்மால் நகர்த்த கூட முடியவில்லை. இது அவருக்கும் தெரியும்.

சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட நீங்கள் இத்தகைய நீண்ட மூங்கில் கழிகளை மிதிவண்டியில் எப்படி சமநிலைப்படுத்துகிறீர்? அவர் புன்னகைத்தபடி கட்டப்பட்டுள்ள மூங்கில் மரத்துண்டுகளை நம்மிடம் காட்டுகிறார். மிதிவண்டியின் முன்புறம் செங்குத்தாக இரண்டு மரத்துண்டுகளும், இருபக்கமும் பக்கவாட்டில் சாய்வாக தலா ஒரு மர துண்டும் கட்டப்பட்டுள்ளன. மிதிவண்டியின் பின்புறம் சுமப்பதற்காக கிடைமட்டமாக ஒரு துண்டும் கட்டப்பட்டுள்ளன.

Ratan Biswas carries five bamboos, each 40-45 feet in length, balanced on and tied to his bicycle.
PHOTO • P. Sainath
Less than a fourth of the total length sticks out at the front of the cycle. The huge, main body protrudes from the back of the cycle. We still couldn’t figure out how and why the rear end did not touch the ground. Biswas smiled patiently at our wonder
PHOTO • P. Sainath

இடது: தலா 40-45 அடி நீளத்திற்கு ஐந்து மூங்கில்களை மிதிவண்டியில் சமநிலையாக கட்டி இழுத்துச் செல்கிறார் ரத்தன் பிஸ்வாஸ். வலது : நான்கில் ஒரு பங்கு கழிகள் மிதிவண்டியின் முன்புறம் உள்ளன. மூங்கிலின் நெடிய உடல் பகுதி பின்பக்கமாக உள்ளன. மூங்கிலின் பின்பக்கம் தரையை தொடாமல் எப்படி தொங்குகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் வியப்பதை கண்டு பிஸ்வாஸ் புன்னகையுடன் கடக்கிறார்

அவர் இரண்டு செங்குத்து கட்டைகளிலும் முன்பக்க மூங்கில் கட்டையில் இரண்டு மூங்கில்களை சாய்த்துள்ளார்.  மற்ற மூங்கில் கழிகளை மிதிவண்டியின் முன்புற கைப்பிடியிலும், பின்பக்கத்தை இருக்கையிலும் சேர்த்து கட்டியுள்ளார். இவை மூங்கில்களை சரியாக வைக்க உதவுகின்றன. இவற்றை இழுத்தபடி சாலையில் எளிதாக கடந்துவிட முடியாது. இவை எளிதில் செய்யும் வேலை கிடையாது. ஆனால் நான்கு பேர் கொண்ட தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இதுபோன்ற பல கடினமான பணிகளை பிஸ்வாஸ் செய்கிறார். “எனக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்,” என்கிறார் அவர். “எங்கள் கிராமம் ஜிரானியா [மேற்கு திரிபுரா மாவட்டம்] வட்டாரத்தில் உள்ளது. நான் ஒரு தினக்கூலி. கட்டுமானப் பணி என எந்த வேலை கிடைத்தாலும் செய்கிறேன்.” சிலசமயம் சுமை தூக்கியாகவும், பருவகாலத்தில் விவசாயத் தொழிலாளியாகவும் வேலை செய்கிறார்.

“இல்லை,” அவர் சொல்கிறார். “ நான் மூங்கில்களை வெட்டுவதில்லை. அது மிகவும் கடினமானது. என் கிராமத்திற்கு எடுத்து வருவோரிடம் அவற்றை வாங்குவேன்.” அகர்தலா சந்தையில் அனைத்து மூங்கில்களையும் விற்றால் அவருக்கு ரூ.200 மொத்த லாபமாக கிடைக்கும். என்னுடன் பயணித்த திரிபுரா மத்திய பல்கலைக்கழகத்தின் ஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேஷன் துறை விரிவுரையாளர் சுனில் கலாய், பிஸ்வாஸ் செல்வதற்கான குறுக்கு பாதையை என்னிடம் கூறினார். ஆனால் அவரது நீண்ட கழிகளை எடுத்துச் செல்வதற்கு அப்பாதையின் சாலைகளில் இடமில்லை. நாங்கள் எங்கள் காரில் ஏறி அடுத்த மாவட்டமான அம்பஸ்ஸாவிற்கு புறப்பட்டோம். பிஸ்வாஸ் தனது மிதிவண்டியில் 40 அடி நீள கழிகளை இழுத்தபடி எதிர்திசையில் சென்றார்.

Biswas pushes off in the opposite direction, his bicycle's 40-feet tail wagging gently behind him
PHOTO • P. Sainath

பிஸ்வாஸ் எதிர்திசையில் செல்கிறார், அவரது சைக்கிளின் 40 அடி நீள வால் அவருக்கு பின்னால் மெதுவாக ஆடிக் கொண்டே இருக்கிறது

தமிழில்: சவிதா

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha