“முக்கியமாக மழைக்காலத்தில் நாங்கள் இங்கு வேலை செய்கிறோம். அந்தக் காலத்தில்தான் கலப்பைகளையும் உபகரணங்களையும் தயாரிக்கவும் பழுது நீக்கவும் விவசாயிகளிடம் தேவை எழும்,” என்கிறார் சுரேகா. கணவர் சபுராவ் சாலுங்கேவுடன் ஒரு பெரிய ஆலமர நிழலில் அவர் அமர்ந்திருக்கிறார்.
புனே மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தாபோதி கிராமம் தொடங்கும் இடத்தில் மரம் இருக்கிறது. “நாங்கள் பக்கத்து கிராமமான நங்காவோனில் வாழ்கிறோம்,” என்கிறார் சுரேகா. “இங்கிருந்து ஒரு மணி நேர நடையில் ஊர் இருக்கிறது.”
அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? “நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கும். சில நாட்களில் 400-500 ரூபாய் கிடைக்கும். சில நேரங்களில் எந்த வேலையும் எங்களுக்குக் கிடைக்காது.”
தமிழில் : ராஜசங்கீதன்