கிராமப்புற இந்தியர்கள் காலனிய ஆட்சிக்கு எதிரான மகத்தான எழுச்சிகளின் கள போராளிகளாக, தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். இந்தியாவை விட்டு ஆங்கிலேயரை வெளியேற்ற பல்லாயிரம் கிராமத்து மக்கள் இன்னுயிர் ஈந்தார்கள். நாடு அடிமைத்தளையில் இருந்து விடுபடச் சொல்லொண்ண துயரங்களை அனுபவித்த தியாகச் சிகரங்களை விடுதலை கிடைத்த பின் மறந்தே போனோம். 1990களில் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகளைப் பதிவு செய்தேன். அவற்றில் ஐந்து கதைகள் இங்கே வாசிக்கக் கிடைக்கும்:
ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்
பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1
பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2
9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்
Times of India-ல் வெளிவந்த இந்தக் கதைகள் கூடுதலான புகைப்படங்களோடு தரப்பட்டுள்ளன. மாபெரும் புரட்சிகளின் தொட்டிலாகத் திகழ்ந்த கிராமங்களைச் சுற்றி இந்த மறக்கப்பட்ட மாபெரும் விடுதலை வீரர்களின் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இந்திய விடுதலை ஒரு சில நகர அறிவுஜீவிகளின் சாதனை அல்ல. கிராமப்புற இந்தியர்கள் பெருமளவில் போரிட்டு பெற்றுத் தந்த விடுதலை அது. அரசியல் விடுதலை மட்டுமல்லாமல் வெவ்வேறு விடுதலைக்காக அவர்கள் போராடினார்கள். மும்பையிலும், கொல்கத்தாவிலும் ஆங்கிலேய ஆட்சி நீடிக்க வேண்டும் 1857- புரட்சிக் காலத்தில் பல கிராமங்கள் பல்வேறு போர்களை ஆங்கிலேய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகத் தொடுத்தன. விடுதலை பொன்விழா ஆண்டான 1997-ல் இப்படிப்பட்ட சில கிராமங்களுக்குச் சென்றேன். அவர்களின் கதைகளை இங்கே படிக்கலாம்:
மகத்தான தியாகம், மறக்கப்பட்ட மகத்தான கனவுகள்
கொதித்து எழப்போகும் கோயா மக்கள்!
இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்
கல்லியசேரியில் சுமுகனை தேடி ஒரு சரித்திர பயணம்
காலமெல்லாம் கலங்காமல் போராடும் கல்லியசேரி
69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நினைவுகூர வேண்டிய மறக்கப்பட்ட வீரக்கதைகள், தியாக வரலாறுகள்
பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்
(PARI விடுதலைப் போரில் அயராது போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களில் எஞ்சியிருக்கும் நாயகர்களை அவர்களின் அந்திம காலத்தில் தேடி அவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது.)