Surekha and Chaburao heat the metal in a makeshift furnace
PHOTO • Binaifer Bharucha

சுரேகாவும் சபுராவும் ஓர் உலையில் உலோகத்தை சூடுபடுத்துகின்றனர்

“முக்கியமாக மழைக்காலத்தில் நாங்கள் இங்கு வேலை செய்கிறோம். அந்தக் காலத்தில்தான் கலப்பைகளையும் உபகரணங்களையும் தயாரிக்கவும் பழுது நீக்கவும் விவசாயிகளிடம் தேவை எழும்,” என்கிறார் சுரேகா. கணவர் சபுராவ் சாலுங்கேவுடன் ஒரு பெரிய ஆலமர நிழலில் அவர் அமர்ந்திருக்கிறார்.

புனே மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து தாபோதி கிராமம் தொடங்கும் இடத்தில் மரம் இருக்கிறது. “நாங்கள் பக்கத்து கிராமமான நங்காவோனில் வாழ்கிறோம்,” என்கிறார் சுரேகா. “இங்கிருந்து ஒரு மணி நேர நடையில் ஊர் இருக்கிறது.”

அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? “நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கும். சில நாட்களில் 400-500 ரூபாய் கிடைக்கும். சில நேரங்களில் எந்த வேலையும் எங்களுக்குக் கிடைக்காது.”

காணொளி: சாலுங்கேக்கள் இரும்புக் கருவிகளை செய்கின்றனர்

சாலுங்கேக்களுக்கு இத்தகைய வேலைகள் தொடர்ந்து மழைக்கால மாதங்களில்தான் கிடைக்கும். வருடத்தின் பிற மாதங்களில் சிறு களைவெட்டிகளையும் விவசாயிகளுக்கான கத்திகளையும் செய்து சந்தையில் விற்பார்கள். அவர்களின் ஆறு குழந்தைள். நான்கு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகன் 12ம் வகுப்பு முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

எங்களின் குறுகிய கால உரையாடலில் சுரேகாதான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார். “என் கணவர் பள்ளிக்குச் சென்றதில்லை,” என்கிறார் அவர். “நான் ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.”

நான் அவரிடம் மராத்தி மொழி PARI கையேட்டைக் கொடுத்தேன். வாசிப்பதாகவும் மகனுக்கு காண்பிப்பதாகவும் உறுதி கூறினார்.

தமிழில் : ராஜசங்கீதன்

नमिता वाईकर लेखक, अनुवादक आणि पारीच्या व्यवस्थापकीय संपादक आहेत. त्यांची ‘द लाँग मार्च’ ही कादंबरी २०१८ मध्ये प्रकाशित झाली आहे.

यांचे इतर लिखाण नमिता वाईकर
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan