கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரம் செய்யத் தொடங்கியபோது அவருக்கு வயது 17. அவரிடம் இருந்ததெல்லாம் ரூ. 1,800 மட்டும்தான். அவரது தாயார் தொழில் தொடங்க அவருக்குக் கொடுத்தத் தொகை அது. இன்று, 62 வயது வேணி, துறைமுகத்தில் வெற்றிகரமான ஏலதாரராகவும் விற்பனையாளராகவும் உள்ளார். மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டைப் போலவே, தனது தொழிலையும் "படிப்படியாக" கட்டியெழுப்பியுள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் விட்டு பிரிந்த பிறகு, நான்கு குழந்தைகளை வேணி தனியாக வளர்த்தார். அவரது தினசரி வருமானம் குறைவாக இருந்தது. வாழ்க்கை ஓட்ட போதுமானதாக இல்லை. சுழல் வலை மீன்பிடித்தல் அறிமுகமானதும், அவர் படகுகளில் முதலீடு செய்தார். பல லட்சங்களில் கடன் வாங்கினார். முதலீட்டில் கிடைத்த வருமானம் அவரது குழந்தைகள் கல்வி பயிலவும், வீடு கட்டவும் உதவியது.

1990களின் பிற்பகுதியில் இருந்து கடலூர் கடற்கரையில் சுழல் வலை மீன்பிடிப்பு பிரபலமடைந்தது. 2004 சுனாமிக்குப் பிறகு அதன் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. மத்தி, கானாங்கெளுத்தி மற்றும் நெத்திலி போன்ற மீன் கூட்டங்களை வளைத்துப் பிடிக்கும் நுட்பத்தை சுழல் வலைகள் பயன்படுத்துகிறது.

காணொளி: ‘நான் இந்நிலையில் இருப்பதற்குக் கடின உழைப்புதான் காரணம்’

பெரிய முதலீடுகளின் அவசியமும் உழைப்புக்கான தேவையும் சிறிய அளவிலான மீனவர்களை பங்குதாரர் குழுக்களாக்கி, செலவுகள் மற்றும் வருமானம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள வைக்கின்றன. வேணியும் இந்த வகையில்தான் முதலீட்டாளராகி தன் தொழிலை வளர்த்துக்கொண்டார். பெண்கள் ஏலதாரர்களாகவும் விற்பனையாளர்களாகவும் மீன் உலர்த்துபவர்களாகவும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை சுழல் வலைப் படகுகள் உருவாக்கிக் கொடுத்தன. "சுழல் வலையால்தான் சமூகத்தில் என் அந்தஸ்து வளர்ந்தது" என்கிறார் வேணி. "நான் ஒரு தைரியமான பெண்ணானேன். அதனால் நான் மேலே வந்தேன்."

படகுகள் ஆண்களுக்கான பிரத்யேக இடங்களாக இருந்தாலும், அவை துறைமுகத்தை அடைந்தவுடன், மீன்களை ஏலம் விடுவது முதல் மீன்களை விற்பனை செய்வது வரை, மீன்களை வெட்டி உலர்த்துவது முதல் கழிவுகளை அகற்றுவது, ஐஸ் விற்பது, தேநீர் மற்றும் உணவுகள் வரை பெண்களே பொறுப்பெடுத்துச் செய்கிறார்கள் . மீனவப் பெண்கள் பொதுவாக மீன் விற்பனையாளர்களாக வகைப்படுத்தப்பட்டாலும், சம எண்ணிக்கையிலான பெண்கள் மீன் கையாளும் பணியை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் விற்பனையாளர்களுடன் கூட்டாக வேலை செய்கிறார்கள். ஆனால் மீன்பிடித் துறையில் பெண்களின் பங்களிப்புக்கான மதிப்பும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் பன்முகத்தன்மையும் சிறு அங்கீகாரமே பெறுகின்றன.

காணொளி: கடலூரில் மீன் தொழில்

வேணி போன்ற பெண்களுக்கும், இளம்பெண் பானுவுக்கும் கூட, அவர்களின் வருமானம்தான் அவர்தம் குடும்பங்களின் நிதி ஆதாரமாக அமைகிறது. ஆனால் அவர்கள் தங்கள் வேலைகளை, மரியாதை மற்றும் சமூக மதிப்பு இல்லாததாக பார்க்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு, நேரடியாகவும் மறைமுகமாகவும், கண்ணுக்குத் தெரியாதவை.

2018-ம் ஆண்டில், தமிழக அரசு சுழல் வலையைத் தடை செய்தது. காரணம், சுழல் வலையால் அதிகளவு மீன் பிடிபடுகிறது. மீன் குஞ்சுகளும் சிக்கி விடுகின்றன. கடலின் வாழ்சூழலையும் சுழல் வலைஅழிக்கிறது. வேணியின் வாழ்வாதாரத்தையும், அவரைப் போன்ற பல பெண்களின் வாழ்வாதாரத்தையும் சுழல் வலைக்கான தடை அழித்துவிட்டது. நாளொன்றுக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்த வருமானம், 800-1,200 ரூபாயாக குறைந்துள்ளது. "சுழல் வலை மீதான தடையால் எனக்குக் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் நஷ்டம்" என்கிறார் வேணி.  “நான் மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

பெண்கள் இன்னும் வேலை செய்கிறார்கள். கடினமான காலங்களில் ஒருவருக்கொருTவர் ஆதரவளிக்கிறார்கள். ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சோர்ந்து விடுவதில்லை.

வேணி இடம்பெற்றுள்ள இப்படம் தாரா லாரன்ஸ் மற்றும் நிக்கோலஸ் பாட்ஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் எழுதப்பட்டது.

உடன் படிக்க: தலைகள், வால்கள் முதலியவற்றால் புலி வாழ்க்கை ஓட்டுகிறார்

தமிழில் : ராஜசங்கீதன்

Nitya Rao

नित्या राव नॉरविक, इंग्लंड येथील युनिवर्सिटी ऑफ ईस्ट आंग्लिया येथे लिंगभाव व विकास विषयाच्या प्राध्यापक आहेत. स्त्रियांचे हक्क, रोजगार आणि शिक्षण क्षेत्रात गेली तीस वर्षे त्या संशोधन, शिक्षण आणि समर्थनाचे कार्य करत आहेत.

यांचे इतर लिखाण Nitya Rao
Alessandra Silver

अलेसांड्रा सिल्वर ऑरोविलस्थित चित्रपटकर्ती आहेत. इटलीत जन्मलेल्या अलेसांड्रा यांचे आफ्रिकेतील चित्रपट आणि छायाचित्रण यासाठी त्यांना अनेक पुरस्कार मिळाले आहेत.

यांचे इतर लिखाण Alessandra Silver
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan