தாயின் பாடலை சாயா உபாலே நினைவுகூருகிறார். குடும்ப உறவுகள் சார்ந்த கஷ்டங்கள் மற்றும் சந்தோஷங்களை உள்ளடக்கிய நாட்டுப்புற பாடல்கள் அவை

“என் தாய் பல பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் அவற்றை சேகரிப்பது கஷ்டம்,” என்கிறார் சாயா உபலே, புனேவின் ஷிரூர் தாலுகாவில் நாம் அவரை சந்தித்த போது. க்ரைண்ட் மில் சாங்ஸ் பணியில் (GSP) இடம்பெற்ற பாடல்களை பாடிய பாடகர்களை கண்டறியும் எங்களின் தேடலில், அக்டோபர் 2017-ல் சவிந்தனே கிராமத்தின் பவார் வீட்டுக் கதவை நாங்கள் தட்டினோம். அங்கு மகன்களும், மகள்களும், மருமகள்களும் குழந்தைகளும் நிறைந்திருந்தனர்.

எங்களால் கீதா பவாரை சந்திக்க முடியவில்லை. ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன் அவர் இறந்து விட்டார். அவரின் மகள் சாயா உபாலேதான் அவரது தாயின் பாடல்களை நமக்காக நினைவுகூர்ந்தார். 43 வயதாகும் அவர், தாயின் ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படத்துக்கு பின்னால் அன்போது பாதுகாத்து வரும் தாயின் வெள்ளி ஜொதாவே க்களை (மெட்டிகள்) காட்டுகிறார்.

தாயிடமிருந்து கேட்ட பாடலை நினைவுகூர முயன்று, நான்கு க்ரைண்ட்மில் பாடல்களை சாயா பாடினார். சோகமானதும் சந்தோஷமானதுமான இரண்டு சிறு நாட்டுப்புற பாடல்களுக்கு இடையே அவர் அவற்றைப் பாடினார். பத்ராவின் அஷ்வபதி அரசரின் மகளான சாவித்ரியின் பண்புகளை விவரிக்கும் இரு வரிக் கதையிலிருந்து அவர் தொடங்குகிறார். இந்த வரிகள் கலா வாக (மெல்லிசை) பாடப்படும். பிறகு ஒரு மெட்டெடுத்து பாட்டாக மாறும். இதுவே பாடும் முறை.

PHOTO • Samyukta Shastri
PHOTO • Samyukta Shastri

இடது: சாயா உபாலே, 2013ம் ஆண்டில் மறைந்த தாய் கீதாபாய் கரிபாவ் பவாரின் புகைப்படத்தைக் காட்டுகிறார். வலது: கீதாபாயின் புகைப்படத்தையும் அவரின் வெள்ளி மெட்டிகளையும் காட்டுகிறார்

PHOTO • Samyukta Shastri

கீதாபாய் பவாரின் குடும்பம்: (இடதிலிருந்து வலது) மருமகள் நம்ரதா, மகன் ஷாகாஜி, பேரன் யோகேஷ் உபாலே, மகள் சாயா உபாலா, சகோதரன் மகன் அபிஷேக் மலாவே மற்றும் இளைய மகன் நாராயண் பவார்

முதல் நாட்டுப்புறப் பாடலில், பெரிய வீட்டில் அன்றாட வேலைகளை தனி ஆளாக செய்யும் தன் நிலையை, மகாபாரத காப்பியத்தில் நூறு கெளரவர்களுடன் மோதிய ஐந்து பாண்டவ சகோதரர்களுடன் ஒப்பிடுகிறார் அவர். பந்தர்பூரின் கோவிலுள்ள வித்தால்-ருக்மிணி மீது பக்தி கொண்டிருக்கும் அவர், அந்த தெய்வங்களை தன் பெற்றோர் போல பாவிக்கிறார். தாய், தந்தை பற்றி பேசும்போது சாயாவின் குரல் உடைகிறது. கண்களில் வழியும் நீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காத்திருந்ததை போல, திடுமென மேகவிரிசல் கொண்டு, வீட்டின் தகரப்பாய் மீது மழை விழும் சத்தம் கனமாக கேட்டது.

அடுத்ததாக, நான்கு மைத்துனர்கள் மற்றும் அவர்தம் மனைவிகளின் சொல்லும் வேலைகளை செய்வதில் உள்ள கஷ்டத்தை குறித்து சகோதரரிடம் அவர் பாடுகிறார்.

நாட்டுப்புற பாடல்களுக்கு பிறகு வரும் நான்கு பாடல்களில், மாமாக்கள் மற்றும் அத்தைகளிடமிருந்து குழந்தைகள் பெறும் அன்பு மற்றும் பரிசுகளை பற்றி சாயா பாடுகிறார். சிவப்பு சட்டையும் தொப்பியும் குழந்தையின் தாய்மாமன் கொடுக்கும் அன்பளிப்பு. பசியில் குழந்தை அழத் தொடங்கியதும், தயிர் சாதம் கொடுக்கும்படி பாடகர் கூறுகிறார்.

கண்ணீரை துடைத்து, சோகத்திலிருந்து உடனடியாக மீளும் சாயா, நகைச்சுவையான ஒரு நாட்டுப்புற பாடலை பாடி முடித்தார்: சுரைக்காய் போல் இருக்கும் தொந்தரவு மிக்க மாமியாரை சமாளிப்பது ஒரு மருமகளுக்கு எத்தனை கஷ்டம் என்பது பாட்டு. எவ்வளவு வேக வைத்தாலும், சுரைக்காயின் சுவை கசப்பாகதான் இருக்கும். அதை இனிப்பாக்க முடியாது. சாயாவுடன் சேர்ந்த நாங்களும் சிரித்தோம்.

காணொளி: சுரைக்காய் இனிப்பு தயாரித்தல்

பாடலை கேளுங்கள்: கிரிஜா கண்ணீர் சிந்துகிறார்

நாட்டுப்புற பாட்டு:

गिरीजा आसू गाळिते

भद्र देशाचा अश्वपती राजा पुण्यवान किती
पोटी सावित्री कन्या सती केली जगामध्ये किर्ती

एकशेएक कौरव आणि पाची पांडव
साळीका डाळीका गिरीजा कांडण कांडती
गिरीजा कांडण कांडती, गिरीजा हलक्यानं पुसती
तुमी कोण्या देशीचं? तुमी कोण्या घरचं?
आमी पंढरपूर देशाचं, काय विठ्ठलं घरचं
विठ्ठल माझा पिता, रुक्मिनी माझी माता
एवढा निरोप काय, सांगावा त्या दोघा
पंचमी सणाला काय ये बंधवा न्यायाला

ए बंधवा, ए बंधवा, तुझं पाऊल धुईते
गिरीजा पाऊल धुईते, गिरीजा आसू जी गाळिते
तुला कुणी बाई नि भुलीलं, तुला कुणी बाई गांजिलं
मला कुणी नाही भुलीलं, मला कुणी नाही गांजिलं
मला चौघे जण दीर, चौघे जण जावा
एवढा तरास मी कसा काढू रे बंधवा

கிரிஜா கண்ணீர் சிந்துகிறார்

பத்ராவின் அரசன் அஷ்வபதிதான் எத்தனை அதிர்ஷ்டசாலி
அவரின் மகள், உலகப் புகழ் பெற்ற சாவித்ரி

நூற்றியொரு கெளரவர்கள், ஐந்து பாண்டவர்கள்
அரிசியோ பருப்போ கிரிஜா குத்திக் கொண்டிருந்தாள்
குத்தியபடி கிரிஜா கேட்கிறாள்
எந்த ஊரை சேர்ந்தவள் நீ? எந்த வீட்டை சேர்ந்தவள் நீ?
நாங்கள் பந்தர்பூரின் வித்தால் வீட்டை சேர்ந்தவர்கள்
வித்தால் என் தந்தை, ருக்மிணி என் தாய்
அவர்கள் இருவருக்கு எனது இந்த செய்தியை கொடு.
பஞ்சமி விழாவுக்கு என்னை கூப்பிட சகோதரனை அனுப்பு

ஓ சகோதரா, ஓ சகோதரா, உன் கால்களை கழுவுகிறேன்
கிரிஜா (உன்) கால்களை கழுவுகிறேன், கிரிஜா கண்ணீர் சிந்துகிறேன்
உன்னை மறந்துவிட்டேன், உன்னை தொந்தரவு செய்தவள் நான்
யாரும் என்னை மறக்கவில்லை, காயப்படுத்தவும் இல்லை
ஆனால் எனக்கு நான்கு மைத்துனர்கள், நான்கு மைத்துனிகள்
இந்த துயரங்களை எப்படி சரி செய்வது, ஓ சகோதரா

ஓவிகள் (க்ரைண்ட்மில் பாடல்கள்):

अंगण-टोपडं सीता घालिती बाळाला
कोणाची लागी दृष्ट, काळं लाविती गालाला

अंगण-टोपडं  हे बाळ कुणी नटविलं
माझ्या गं बाळाच्या मामानं पाठविलं
माझ्या गं योगेशच्या मामानं पाठविलं

अंगण-टोपडं गं बाळ दिसं लालं-लालं
माझ्या गं बाळाची मावशी आली कालं

रडतया बाळ त्याला रडू नको देऊ
वाटीत दहीभात त्याला खायला देऊ

சிவப்பு சட்டை, தொப்பியை குழந்தைக்கு அணிவிக்கிறாள் சீதா
கெட்டது அண்டாதிருக்க கன்னத்தில் ஒரு மை பொட்டு.

சட்டை தொப்பியி அணிந்திருக்கிறது குழந்தை
தாய்மாமன் அனுப்பிய துணிகள் அவை
என் யோகேஷின் தாய்மாம அதை அனுப்பினார்

சிவப்பு சட்டை, தொப்பி அணிந்திருக்கிறது குழந்தை
என் குழந்தையின் அத்தை நேற்று வந்தாள்

குழந்தையை அழ விடாதீர்கள்
கிண்ணத்தில் கொஞ்சம் தயிர் சாதத்தை ஊட்டி விடுவோம்

நாட்டுப்புற பாட்டு:

सासू खट्याळ लई माझी

सासू खट्याळ लई माझी सदा तिची नाराजी
गोड करू कशी बाई कडू कारल्याची भाजी (२)

शेजारच्या गंगीनं लावली सासूला चुगली
गंगीच्या सांगण्यानं सासूही फुगली
पोरं करी आजी-आजी, नाही बोलायला ती राजी

गोड करू कशी बाई कडू कारल्याची भाजी
सासू खट्याळ लई माझी  सदा तिची नाराजी

தொந்தரவான என் மாமியார்

தொந்தரவான என் மாமியாருக்கு எப்போதும் குறைதான்
சுரைக்காயை எப்படி இனிப்பாக்குவது (2)

பக்கத்து வீட்டு காங்கி என்னை பற்றி அவரிடம் குறை கூறினாள்
அதைக் கேட்டு என் மாமியார் கோபமானார்
குழந்தைகள் ‘பாட்டி, பாட்டி’ என கொஞ்சியும் அவர் பேசவில்லை

சுரைக்காயை நான் எப்படி இனிப்பாக்க முடியும்
என் தொந்தரவான மாமியாருக்கு எல்லாமே குறைதான்.

பாடகர் : சாயா உபாலே

கிராமம் : சவிந்தானே

தாலுகா : ஷிரூர்

மாவட்டம் : புனே

தேதி : இப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, அக்டோபர் 2017ல் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன

முகப்புப் படம்: சிஞ்சிதா பர்பத்

ஹேமா ரைர்கார் மற்றும் கய் பொய்தெவின் ஆகியோர் உருவாக்கிய க்ரைண்ட்மில் சாங்ஸ் பணி பற்றி வாசிக்க .

தமிழில் : ராஜசங்கீதன்

نمیتا وائکر ایک مصنفہ، مترجم اور پاری کی منیجنگ ایڈیٹر ہیں۔ ان کا ناول، دی لانگ مارچ، ۲۰۱۸ میں شائع ہو چکا ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز نمیتا وائکر
PARI GSP Team

پاری ’چکی کے گانے کا پروجیکٹ‘ کی ٹیم: آشا اوگالے (ترجمہ)؛ برنارڈ بیل (ڈجیٹائزیشن، ڈیٹا بیس ڈیزائن، ڈیولپمنٹ اور مینٹیننس)؛ جتیندر میڈ (ٹرانس کرپشن، ترجمہ میں تعاون)؛ نمیتا وائکر (پروجیکٹ لیڈ اور کیوریشن)؛ رجنی کھلدکر (ڈیٹا انٹری)

کے ذریعہ دیگر اسٹوریز PARI GSP Team
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan