அவரை எனக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியபோது, அவரது பெயர் குறித்த என் முதல் எண்ணம் அனைத்தும் தவறாகிப் போனது. அவர்கள் அவரை லடைதி தேவி என்று அழைக்கிறார்கள் (மேலோட்டமாக மொழிபெயர்த்தால்,  சண்டைக்காரி என்று பொருள்), ஆனால் என்னைப் பொறுத்தவரை, அந்த முதல் பார்வையில் அவர் ஒரு தன்னம்பிக்கை கொண்ட வீராங்கனை - அவரது பலங்களால் தேறியவர் - மிக முக்கியமாக, அவர் தனது பலவீனங்களை அறிந்தவர் என்பதாக தெரிந்தது.

என்னை ஒரு நாற்காலியில் அவர் அமரச் சொல்கிறார். நாம் சமமாக அமர்ந்து உரையாட வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் தயக்கத்துடன் தனக்காக இன்னொருவரை அழைக்கிறார். இரண்டு அறைகள் கொண்ட அவள் வீட்டின் வராண்டாவில் நாங்கள் இருக்கிறோம்.

நான் உத்தராகண்டின் உத்தம் சிங் நகரின் சித்தார்கஞ்ச் வட்டத்தில் உள்ள சல்மாதா கிராமத்தில் இருக்கிறேன். இது சுமார் 112 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமமாகும், மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியினரான தாருஸ் பெரும்பாலும் இங்கு வசிக்கின்றனர் - புராணப்படி, ராஜபுத்திர ராஜ வம்சத்துடன் தொடர்புபடுத்துகிறது. உள்ளூர்ப் பெண்கள் விரும்பும் ஒருவராக லடைதி என்ற தாரு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது கதையை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

2002-ம் ஆண்டிற்கு முந்தைய தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் கூறுகிறார். "நான் யார் - சாதாரணப் பெண் தானா? என நினைத்தபோது சிலர் வந்து குழு அமைக்க அழைத்தனர் - அது பலத்தை கொடுக்கும் என்று கூறினர். நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்" என்றனர்.

PHOTO • Puja Awasthi

இப்பகுதிகளில் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான  முயற்சிக்கப்பட்ட, பரிசோதிக்கப்பட்ட வழி என்பதை காலப்போக்கில் அறிந்து கொண்டேன். அவர்கள் எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பதில்லை என்பதையும் நான் அறிந்துக்கொண்டேன். லடைதி விஷயத்தில், தொடக்கங்கள் நன்றாக இருந்தன. 'ஏக்தா' (ஒற்றுமை) என்ற பெயரை அவர் பரிந்துரைத்தார். ஆனால் சிறு பொறாமைகள், தவறான புரிதல்கள் குழுவை சிதைத்தன.

"உண்மையான காரணம் ஆண்கள்தான் என்று எனக்குத் தெரியும். பெண்களாகிய நாங்கள் ஒன்று சேர்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் பல நூற்றாண்டுகளாக எங்கள் நிலை. ஆண்கள் குடித்துவிட்டு சீட்டு விளையாடுகிறார்கள். நாங்கள் சுமைகளை சுமக்கிறோம்...' அவரது குரல் மங்கியது.

இதனால் லடைதியின் கணவர் ராம் நரேஷ் ஆத்திரம் அடைந்தார். 'நீ தலைவராக முயற்சிக்கிறாயா?' என்று கேட்டார். நான் குடும்பத்தின் பெயரைக் கெடுத்து விட்டேன் என்று என் மாமனார் சொன்னார். நான் குடும்பத்தில் மற்றப் பெண்களைப் போல இல்லை" என்று அவர் கூறினார்.

அதற்குள், இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளுக்கு தாயான லடைதி, தனக்காக எழுந்து நிற்காவிட்டால், குடும்பத்தின் சிறு நிலத்திலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானம் தங்கள் குடும்பத்திற்கு போதாது என்பதை உணரத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்தார். ஒருமுறை ஆடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிக்கு அவர் சென்றார். ஆனால் எதுவும் உதவவில்லை. "நான் இரவுகளில் தூக்கமின்றி தவிப்பேன். என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயத்தால் நொந்து போனேன், "என்று அவர் நினைவுகூருகிறார்.

கிராமத்தில் மற்றொரு பெண்ணுடன் உரையாடிய போது இதற்கு தீர்வு கிடைத்தது, அவர் நெசவு துணிகளை (பருத்தி விரிப்புகள்) நெசவு செய்ய முயற்சிக்கலாம் என்று லடைதியிடம் பரிந்துரைத்தார். தாருக்களில், துருக்கள் மதிப்புமிக்க உடைமைகளாக உள்ளன - அன்றாட பயன்பாட்டு பொருட்களாகவும், திருமணங்களில் முக்கிய பங்கு வகிக்கும் பரிசுகளாகவும். பயன்படுத்தப்படும் துணி கிழிந்த சேலைகள், தூக்கி எறியப்பட்ட உடைகள், பயன்படுத்த முடியாத துணிகளின் கீற்றுகளிலிருந்து அது வருகிறது.

கணவர் குடும்பத்தினரை சமாதானப்படுத்துவது சவாலாக இருந்தது. ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டார் என்று அறிந்து அவர்கள் ஆறுதல் அடைந்தனர். ஒரு தறியை வாங்க வேண்டியிருந்தது, 2008 ஆம் ஆண்டில் ஒரு கடனை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் புரிந்துகொள்ள அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் உதவின. அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு இவருக்கு நெசவுத் தொழிலில் பயிற்சி அளித்தது.

PHOTO • Puja Awasthi

முதலில் வேலை கேட்டு கிராமத்தை சுற்றி வந்தார். வீட்டு வேலைகள் போக எஞ்சும் நேரத்தில், லடைதி தறியில் உட்காருவதற்கு முன்பு துணிகளை பிரித்து, வரிசைப்படுத்தி பொருத்தினார். "தறிக்கு ஒரு இசை இருக்கிறது. அது என்னை பாட வைக்கிறது" என்று சிரிக்கிறார். லடைதியின் விரல்கள் மாயாஜாலத்தை நிகழ்த்தியபோது, அவருடைய திறமைகள் பற்றிய செய்தி பரவியது. அவரது துர்ரிகள் மற்றவர்களுடையதைப் போல இல்லை என்று அவர்கள் கூறினர். அவற்றில் உள்ள வண்ணங்கள் பேசும் சக்தியைக் கொண்டிருந்தன. வடிவமைப்புகள் மகிழ்வை வரவழைக்கக் கூடியவை. வேலை அதிகரித்தது. பக்கத்து நகரமான கதிமாவிலிருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கின. ராம் நரேஷின் எரிச்சல் தணிந்தது.

இன்று, அவர் இரண்டு நாட்களில் ஒரு துர்ரி நெசவு செய்கிறார், உண்மையிலேயே நுட்பமான வேலைப்பாடு கொண்ட ஒரு துர்ரிக்கு ரூ.800 கிடைக்கிறது. எளிமையான வடிவமைப்பு கொண்ட துர்ரிகள் ரூ.400-க்கு விற்கப்படுகிறது, இதன் மூலம் அவர் மாதந்தோறும் சுமார் ரூ.8,000 சம்பாதிக்கிறார். விவசாயத்தில் ஆண்டுக்கு ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இயற்கை தொழில் நுட்பங்களை கற்றும், முயற்சி செய்தும் அவர் செம்மைப்படுத்தி இருக்கிறார். அவரது அன்றாடம் நீளமானவை - காலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு மேல் செல்லும்.

PHOTO • Puja Awasthi

பல ஆண்டுகளாக, வெற்றித் தோல்விகள் கொண்ட பல போர்களை அவர் சந்தித்து வருகிறார். தற்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் சேமித்து வைத்திருக்கும் சுய உதவிக் குழுவை புதுப்பித்து, தனது குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் விவசாயத்திற்காகவும் கடன் வாங்கினார். பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் அவரிடம் ஆலோசனைப் பெற்றனர். ஆண்களை சீரழித்து வரும் மதுபான தொழிலை நிறுத்தும்படி, உள்ளூர் மதுபான தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்,  பெண்கள் போராட முயன்றனர். இதற்கு லடைதியின் கணவரே எதிர்ப்பு தெரிவித்தார். "நான் மிகவும் வெட்கப்பட்டேன். இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் என் மதிப்பை உணரவில்லை" என்கிறார் அவர்.

40 வயதாகும் லடைதி வாழ்க்கையில் சமாதானம் அடைந்துள்ளார். "முயற்சியின்றி எதுவும் செய்ய முடியாது" என்றார்.

PHOTO • Puja Awasthi

இருப்பினும் ஒரு தோல்வி அவரை கலங்க வைத்தது - தனது மூத்த மகள் அறிவியல் கல்வியைத் தொடர முடியவில்லை. "பி.ஏ.வுக்கு யார் கவலைப்படுகிறார்கள், நீங்களே சொல்லுங்கள்?" என்று அவர் கேட்கிறார். ஆனால் ஒரு முறை மகள் அவரை கேலி செய்தபோது - அவருடைய குறைவான கல்வியை (லடைதி 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்) நினைத்து பின்வாங்கி மௌனம் ஆனார்.

லடைதியின் சாகசங்கள் சாதாரணமானவை அல்ல என்று நான் கூறினேன். அவரது துணிவு உத்வேகம் அளிப்பவை. நான் மீண்டும் வரும்போது, எனது சொந்த போராட்டங்களைப் பற்றி பேசுவேன் என்றும் நான் அவரிடம் கூறினேன்.

நான் புறப்பட தயாரான போது, என்னால் கேட்காமல் இருக்க முடியாவில்லை - ஏன் இந்த பெயர் என்று. அவர் பரந்த புன்னகையுடன் கேட்டார். "உங்களுக்குத் தெரியாதா... பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் சொந்த மதிப்பைக் கண்டுபிடிக்கத் தொடங்கியபோது, யாரோ எனக்கு சுனைனா (அழகான கண்கள்) என்று பெயரிட்டனர். அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்த பெயர் என்று நம்புகிறேன். அந்த பெயரைத்தான் இப்போது வைத்திருக்கிறேன்."

தழுவிவிட்டு நான் கிளம்பினேன்.

தமிழில்: சவிதா

Puja Awasthi

پوجا اوستھی ایک فری لانس پرنٹ اور آن لائن جرنلسٹ ہیں، اور ایک ابھرتی ہوئی فوٹو گرافر جو لکھنؤ میں مقیم ہیں۔ انھیں یوگا کرنا، سفر کرنا اور ہاتھ سے بنی ہوئی تمام چیزیں پسند ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Puja Awasthi
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha