இன்னும் உருவாகிக்கொண்டிருந்த தேசத்தின் உணர்நிலையில் ஜாலியன்வாலாபாக் ஒரு திருப்புமுனை. என்னைப் போல பலர் பகத் சிங் என்னும் மகத்துவம் அங்குதான் தொடங்கியது என்று கேட்டு கேட்டு வளர்ந்தோம். பத்து வயதில் அங்கு சென்ற பகத் சிங் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஒரு குப்பியில் ரத்தம் தோய்ந்த மண்ணை நிரப்பி கிராமத்திற்கு திரும்பினார். அங்கு தனது சகோதரியுடன் சேர்ந்து தாத்தாவின் வீட்டிலிருந்த ஒரு தோட்டத்தில் அதை கொட்டினார். இருவரும் அந்த இடத்தில் ஒவ்வொரு வருடமும் பூக்களை நட்டு வளர்த்தார்கள்.

ஏப்ரல் 13, 1919ல் பஞ்சாபிலுள்ள அம்ரித்ஸரில் ஆயுதங்கள் இல்லாத ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட (379 என்கிறது பிரிட்டிஷ் அரசு) சம்பவம் இன்னமும் அந்த படுகொலைகளை நிகழ்த்தியவர்களையோ அதன் தொடர்ச்சியான அரசுகளையோ தொடவில்லை. இந்த வாரம் அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார். அவ்வளவு மோசமான படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரவில்லை.

Jallianwala Bagh
PHOTO • The Tribune, Amritsar
Jallianwala Bagh
PHOTO • Vishal Kumar, The Tribune, Amritsar

ஜாலியன்வாலா பாகிற்குச் போய் நெகிழ்ச்சியடையாமல் இருக்க நீங்கள் வியப்பூட்டும் வகையில் உணர்ச்சியற்றவராக இருக்க வேண்டும். நூறாண்டுகள் கழித்தும், வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓலங்கள் அந்த தோட்டத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு நான் அங்கு சென்ற போது அருகிலிருந்த சுவரில் இதை கிறுக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களிடம் ஆயுதங்கள் இல்லை, ஆனாலும் தாக்கினார்கள்

கூட்டங்கள் உடைந்தன

லத்திகளையும் பிரம்புகளையும் பயன்படுத்தினார்கள்

எங்கள் எலும்புகள் உடைந்தன

துப்பாக்கி சூடு நடத்தினார்கள்

பல உயிர்கள் உடைந்தன

ஆனாலும்

எங்கள் ஆன்மாக்கள் உடையவில்லை

அவர்களது பேரரசு உடைந்தது

தமிழில்: கவிதா முரளிதரன்

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Kavitha Muralidharan

کویتا مرلی دھرن چنئی میں مقیم ایک آزادی صحافی اور ترجمہ نگار ہیں۔ وہ پہلے ’انڈیا ٹوڈے‘ (تمل) کی ایڈیٹر تھیں اور اس سے پہلے ’دی ہندو‘ (تمل) کے رپورٹنگ سیکشن کی قیادت کرتی تھیں۔ وہ پاری کے لیے بطور رضاکار (والنٹیئر) کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز کویتا مرلی دھرن