“என் தாத்தாவிடம் 300 ஒட்டகங்கள் இருந்தன. என்னிடம் 40-தான் இருக்கிறது. மற்றவை இறந்துவிட்டன. அவை கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை,” என்கிறார் ஜெதாபாய் ரபாரி. கடல் ஒட்டகங்களை கம்பாலியா தாலுகாவின் பெ கிராமத்தில் மேய்க்கிறார். குஜராத்தின் கடலோர பகுதிக்கு பழக்கமாகி விட்ட அருகும் இனத்தை சேர்ந்த விலங்குகள் அவை. கச் வளைகுடாவின் சதுப்புநிலங்களில் உணவு தேடி பல மணி நேரங்களுக்கு நீந்தக் கூடியவை.

தற்போது கடல் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் அமைந்திருக்கும் வளைகுடாவின் தெற்கு கடலோரத்தில் 17ம் நூற்றாண்டிலிருந்து போபா ரபாரி மற்றும் ஃபகிரானி ஜாட் சமூகங்கள் கராய் ஒட்டகங்களை மேய்த்து வருகின்றனர். 1995ம் ஆண்டு கடல் பூங்காவுக்குள் மேய்ச்சலுக்கு விதிக்கப்பட்ட தடை, ஒட்டகங்கள் மற்றும் மேய்ப்பர்களின் பிழைப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த ஒட்டகங்களுக்கு சதுப்பு நிலம் தேவை என்கிறார் ஜெதாபாய். அவற்றின் உணவில் சதுப்பு நில மர இலைகள் அத்தியாவசியமான அங்கம். “இலைகள் உண்ண அவை அனுமதிக்கப்படவில்லை எனில், அவை இறந்திடாதா?. எனக் கேட்கிறார் ஜெதாபாய். ஆனால் விலங்குகள் கடலுக்குப் போனால், “கடல் பூங்கா அதிகாரிகள் எங்களுக்கு அபராதம் விதித்து, ஒட்டகங்களை சிறைப்பிடிக்கின்றனர்,” என்கிறார் அவர்.

இக்காணொளியில் சதுப்பு நிலம் தேடி நீந்தும் ஒட்டகங்களைக் காணலாம். அவற்றை காப்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றி மேய்ப்பர்கள் விளக்குகின்றனர்.

காணொளி: கடலின் ஒட்டகங்கள்

பட இயக்கம் உர்ஜா

முகப்புப் படம்: ரிதாயன் முகெர்ஜி

உடன் படிக்க: ஜாம்நகரின் ‘நீந்தும் ஒட்டகங்கள்’ ஆழத்தில் சிக்கியுள்ளன

தமிழில் : ராஜசங்கீதன்

Urja

ऊर्जा (जी आपलं पहिलं नाव वापरणंच पसंत करते) बनस्थळी विद्यापीठ, टोंक, राजस्थान येथे पत्रकारिता व जनसंवाद विषयात बी.ए. पदवीचं शिक्षण घेत आहे. पारी मधील प्रशिक्षणाचा भाग म्हणून तिने हा लेख लिहिला आहे.

यांचे इतर लिखाण Urja
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan