ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் ஆக இரண்டு பக்கங்களுடன் பீப்பாய் வடிவம் கொண்ட இசைக்கருவி தென்னிந்திய கர்நாடக இசையில் உபயோகப்படுத்தப்படும் மிருதங்கம் ஆகும்.
பெரும்பாலும் பெண்கள் இந்த மிருதங்கம் வசிப்பதைக் காண்பது அரிது.ஆனால் தமிழ்நாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டைக்கூத்து குருகுலத்தில் 14 வயது பெண்கள் இருவர் இந்த மிருதங்கத்தை எளிதாகவும் திறமையாகவும் வாசிக்கிறார்கள். A சங்கீதா இந்த வாசிப்பை முன்னின்று நடத்த A ஸ்ரீமதி அதே லாவகத்துடன் வாசிப்பைப் பின் தொடர்கிறார்.
இந்த குடியிருப்பு வகை சேர்ந்த குருகுலப் பள்ளி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஞ்சரசாந்தங்கல் எனும் கிராமத்தில் உள்ளது. இங்கு 12 ம் வகுப்பு வரை வழக்கமாகப் பயிலும் கல்வியுடன் மாணவர்கள் மாநில அளவில் கட்டைக்கூத்து எனும் கிராமியக் கலையில் பயிற்சி பெறுகிறார்கள்.. கட்டைக்கூத்தில் பாட்டைத் தவிர , நடிப்பு, ஒப்பனைக் கலை , நாட்டியம் மற்றும் ஏதாவதொரு இசைக்க கருவி ஆகியவைகள் பயில்விக்கப்படுகின்றன .