மார்ச் 25, 2020 அன்று அறிவிக்கப்பட்ட முதல் கோவிட் ஊரடங்கு கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
“கையில் இருந்த கொஞ்சமும் காணாமல் போனது.” ஜம்முவின் கட்டுமானத் தொழிலாளர்களான மோகன் லால் மற்றும் அவரது மனைவி நர்மதபாய் ஆகியோரின் சேமிப்பு, ஊரடங்கின் தொடக்கத்தில் 2,000 ரூபாய்க்கு சரிந்தது . உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியங்களை வாங்க அவர்கள் ஒப்பந்ததாரரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது.
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 23 சதவிகிதம் வரை 2020ம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர்ந்தது. பிப்ரவரி 2020ம் ஆண்டில் இருந்த 7.3 சதவிகிதத்தைவிட அது மும்மடங்கு அதிகம் எனக் குறிப்பிடுகிறது கிராமப்புற மற்றும் விவசாய இந்தியாவின் நிலை குறித்த அறிக்கை 2020. தொற்றுக்கு முன் (2018-19), அந்த விகிதம் 8.8 சதவிகிதத்தை ஒட்டி இருந்தது.








