
SANGUR, PUNJAB
|TUE, SEP 09, 2025
கிராமத்தில் மாற்றுத்திறனாளியாக வாழுதல்
கிராமத்தில் உள்ள பலர் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். பிறப்பிலிருந்து மாற்றுத்திறனாளியாக இருப்பதை போல, சமூகரீதியாகவும் அரசின் அலட்சியத்தாலும் கூட மாற்றுத்திறனாளிகள் உருவாகும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக ஜார்க்கண்டின் உரேனிய சுரங்கங்கள் அல்லது சரிசெய்யப்படாத மராத்வடாவின் பஞ்சங்களால் ஃபுளோரைட் இருக்கும் நிலத்தடி நீரை மக்கள் குடிக்க வேண்டிய கட்டாயம் போண்றவற்றை சொல்லலாம். சில நேரங்களில், நோய் மற்றும் மருத்துவ அலட்சியத்தாலும் மாற்றுத்திறனாளிகள் உருவாகின்றனர். லக்நவை சேர்ந்த தூய்மைப் பணியாளரான பார்வதி தேவியின் விரல்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மிசோரமை சேர்ந்த தேபாஹலா சக்மா, அம்மை வந்து பார்வை இழந்தார். பல்கரின் பிரதிபா ஹிலிம் கேங்க்ரீன் வந்து கை கால்களை இழந்தார். சிலர் அறிவு ரீதியாக மாற்றுத்திறனாளியாக இருக்கின்றனர். ஸ்ரீநகரை சேர்ந்த மொஹ்சினுக்கு பெருமூளைவாதம் இருக்கிறது. மகாராஷ்டிராவின் பிரதீக், மனநலிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழல்களில், இந்த சவால்களை வறுமையும் அசமத்துவமும் மருத்துவமின்மையும் பாகுபாடும் தீவிரமாக்குகின்றன. பல மாநிலங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாரி கட்டுரைகள் இவை
Author
Translator
18. ப்ரெய்லும் வாக்கும்
மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க அரசு வாய்ப்புகளை அளித்தும், பப்லு கைப்ரடா போன்றவர்கள் தேர்தல்களில் பங்களிக்க முடியுமா என்கிற சந்தேகத்தில் இருக்கின்றனர்
17. 'அன்பு உங்களை நல்ல ஆசிரியராக்கும்'
ஆசிரியர்கள் தினத்தன்று, மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கல்வி புகட்டும் சிறப்பு ஆசிரியர்களை பாரி கொண்டாடுகிறது. மாணவர்கள் மீதான அளவற்ற அன்புடன் கூடிய பொறுமையும் தொடர்முயற்சியும் நல்ல கற்பிக்கும் முறைக்கு ஆதாரமாக இருப்பதை அவர்கள் காட்டுகிறார்கள்
16. மறு கற்றலுக்கான நீண்ட பாதை
இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிக்கு திரும்புவதில் ஏற்பட்ட கற்றல் இழப்பால் , அறிதிறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் பழைய முறைகளுக்கு தகவமைத்துக் கொள்ள சிரமப்படுகின்றனர்
15. நம்பிக்கைக்கான சரண்யாவின் தேடல்
பார்வையற்ற மூன்று குழந்தைகளின் தாயான சரண்யா மூவரையும் பள்ளிக்கு தினமும் சென்று விடுகிறார். கும்மிடிப்பூண்டிக்கும்சென்னைக்கும் தினமும் 100 கிலோமீட்டர் சென்று வருகிறார் அவர்
14. சித்ரா மற்றும் முத்துராஜா : சொல்லப்படாத காதல் கதை
முத்துராஜாவின் கை சித்ராவின் தோள் மீது இருக்கிறது. சித்ரா அவரை வழி நடத்தி செல்கிறார். மதுரையை சேர்ந்த கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். வறுமையும் ஆரோக்கிய குறைபாடும் பார்வையின்மையும் அவர்களின் அன்றாட இருத்தலை கடினமாக்கியிருக்கிறது
13. மோசினால் நடக்கவோ, விளையாடவோ, பள்ளி செல்லவோ முடியாது
ஸ்ரீநகரில் உள்ள தொலைதூர மறுகுடியமர்த்தப்பட்ட ராகீர்த்துக்கு மாறியவுடன் அக்கூனின் குடும்பத்தினர் பல்வேறு சவால்களை சந்தித்தனர். மூளை முடக்குவதாத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மகனுக்கு போதிய மருத்துவ உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதிலும் சிரமம் இருந்தது.
12. மாற்றுத்திறன் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்கு தொற்றால் கற்றலில் தடை
மஹாராஷ்ட்ராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களில், ஆன்லைன் வகுப்புக்கும் செல்ல வசதியில்லாமல், சிறப்பு குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் துன்பப்படுகிறார்கள். இதனால் கவலை அதிகரிக்கிறது
11. விவசாயிகளுக்கு ஆதரவு : யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.
தனது ஒரு கால் மோசமான நிலையில் இருந்தபோதும், மீனவர் பிரகாஷ் பாகத், அவரது பார்கான் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்காக, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக நாசிக்கிலிருந்து டெல்லி செல்லும் வாகன பேரணியில் உணவு சமைக்கிறார்
10. துண்டிக்கப்படாத சக்தியிடம் இருந்து கல்வி கற்பது
கடந்தாண்டு தசை அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பிரதிபா ஹிலிம் தனது இரு கைகள் மற்றும் இரு கால்களையும் இழந்தார். அதனால் ஓய்ந்துவிடாத, மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள இந்த ஆதிவாசி மாணவர்களின் ஆசிரியை ஆன்லைன் கல்வி வாய்ப்பு குறைவாக கிடைக்கும் மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே வகுப்பெடுத்து வருகிறார்
9. பெருந்தொற்று காலத்தில் உலகை தொட்டு உணரும் நிலை
விமல் மற்றும் நரேஷ் தாக்ரே இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மும்பையின் உள்ளூர் ரயில்களில் கைக்குட்டை விற்பவர்கள், இந்த ஊரடங்கு அவர்களை கைவிட்டுவிட்டது. வருமானமின்றி, அரசின் குறைந்தளவு உதவியுடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர்
8. ‘என் எலும்புகள் ஓட்டையாகி விட்டதாக மருத்துவர் சொல்கிறார்‘
நீண்டகால உடல் தொந்தரவு, அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றம் ஆகியவற்றிற்குப் பிறகு, புனே மாவட்டம் ஹதாஷி கிராமத்தைச் சேர்ந்த பிபாபாய் லோயாரியின் உடல் வளைந்து, கூன் விழுந்துவிட்டது. இருந்தும் அவர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவருக்காக விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்
7. மருத்துவர்கள் கருப்பையை நீக்கச் சொன்னார்கள்‘
கட்டாயப்படுத்தி கர்ப்பப்பையை அகற்றுவது என்பது மனவளர்ச்சி குன்றிய பெண்களின் பாலியல், இனப்பெருக்க உரிமைகளை மீறும் செயலாகும். ஆனால் மகாராஷ்டிராவின் வாடி கிராமத்தில், மலன் மோருக்கு அதிர்ஷ்டவசமாக அவரது தாயின் ஆதரவு கிடைத்தது.
6. பன்வெல் முதல் மத்தியபிரதேசம் வரை: இரவு பகலாக ஸ்கூட்டரில் நான்கு நாள் பயணம்
சில வருடங்களுக்கு முன் விபத்தில் ஒரு காலை இழந்த பிம்லேஷ் ஜெய்ஸ்வால், தன் மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் கியர் இல்லாத ஸ்கூட்டரில் மகராஷ்ட்ராவின் பன்வெலிருந்து மத்தியபிரதேசத்தின் ரேவாவிற்கு ஊரடங்கு சமயத்தில் 1200கிமீ பயணம் செய்துள்ளார்
5. வித்தியாசமான பார்வையுடன் தயாரிக்கப்படும் கூடைகள்
மிசோரமின் ராஜீவ் நகரைச் சேர்ந்த தபாலா சக்மா, பார்வையில்லாத மாற்றுத்திறனாளி மற்றும் கைவினைஞர் கலைஞர் ஆவார். மூங்கில் கூடைகளை தொட்டுப் பார்த்தே அதன் வடிவங்களை உருவாக்குகிறார். 50 ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்யும் அவர், தன்னால் ஒரு மூங்கில் வீடே கட்ட முடியும் என்கிறார்
4. எந்த அட்டையை வாங்கினாலும் பயனில்லை
ஆதார் அட்டை வைத்திருப்பது அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற உதவுமா? உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவு, அரசின் எந்த அட்டையை பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல், வறியோருக்கு மேலதிக பாதிப்பையே ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது
3. ஓட்டுக்கு நல்ல விரல்களாம், ஆதாருக்கு மோசமான விரல்களாம்
பார்வதி தேவியின் விரல்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. லக்னோவைச் சேர்ந்த குப்பைக சேகரிப்பவரானஅவரும் அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஆதார் அடையாள அட்டைகள் எடுக்க முடியவில்லை. அதனால், அவர்களின் மாற்றுத்திறனாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் ஆகியவற்றைப் பெற முடியவில்லை
2. மனித உடல்களை சிதைத்த யுரேனியம் தாதுக்கள்
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் ஜடுகுடா சுரங்கம் உள்ளிட்ட யுரேனியம் சுரங்கங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில், அரை நூற்றாண்டுக்கு மேலாக கதிரியக்க கழிவுகள் நிரம்பும் நச்சு குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அதிக விலை கொடுக்கிறார்கள்
1. மராத்வாடாவில் எலும்புகளை பாதிக்கும் மாசடைந்த நீர்
மராத்வாடாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சவர்கேத் கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகள் மூலம் ஃபுளோரைடால் மாசடைந்த நிலத்தடி நீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலரையும் ஃபுளோரோசிஸ் பலவீனப்படுத்தி வருகிறது
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/living-with-disability-in-rural-india-ta


















