தற்போது மஹாராஷ்ட்ராவில் மாட்டு வண்டி பந்தயங்கள் சட்டபூர்வமாகிவிட்டது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநில சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட, விலங்கு வதை திருத்தச்சட்டம் (மஹாராஷ்ட்ரா சட்ட திருத்தம்) இதுபோன்ற பந்தயங்களுக்கு வகை செய்கிறது. இது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தை போன்றது.
தற்போது, மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவிற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்று மாநில அரசு ஊடங்களுக்கு தெரிவித்துள்ளது.
இது பத்தாண்டுகளுக்கு முந்தை நினைவுகளை கொண்டு வருகிறது. நான், சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள தீலன்வாடி கிராமத்தில் நடைபெற்ற இந்த பந்தயங்களில் ஒரு நாள் இருந்துள்ளேன் . அவை அப்போது சட்டபூர்வமாவை கிடையாது (ஆனால், புகழ் பெற்றது). இதுபோன்ற ஒரு பந்தயத்தில் மாட்டு வண்டிகளுக்கு இடையில் அகப்பட்டு இறந்துவிடாமல் தப்பிய சிலருள் நானும் ஒருவன். அவை 2007ம் ஆண்டு துவக்கத்தில் நடந்தது.
தமிழில்: பிரியதர்சினி. R.