இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள் கடந்த மாதம் விவசாயிகள் விடுதலை நடைபயணத்திற்காக டெல்லி வந்திருந்தனர். அதில் பஞ்சாபை சேர்ந்த ஒரு குழுவினர், நவம்பர் 29ம் தேதி, நகரின் வடக்கில் உள்ள மஜ்னு கா தில்லாவிலிருந்து துவங்கி, மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம் வரை நடந்தனர். அடுத்த நாள் அவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடந்தனர். அதில் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகத் சிங் என்ற விவசாயியும் இருந்தார். (முகப்பு படத்தில் இடப்புறத்தில் இருந்து இரண்டாவதாக இருப்பவர்). அவர்கள் (மோடி அரசு) எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர் கூறுகிறார். எங்கள் விவசாய நண்பர்கள் அனைவரும் உதவியின்றி தவிக்கின்றனர். அதுவே எங்களை சாலைக்கு இழுத்துவந்து போராட வைத்துள்ளது. இந்த நடைபயணத்திற்கு பின்னரும், எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையெனில், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று மேலும் கூறுகிறார்.

பின்னர் இந்தப்பாடலை பாடினார்:

0:00-0:03
BA karke ho gaya hun vela main

பிஏ படித்து முடித்திருந்தும், நான் ஒரு வேலையும் செய்யாமல் நேரத்தை கடத்திக்கொண்டிருக்கின்றேன்


0:03-0:05
Kardae jee kise sadh da

நான் இப்போது துணையிருப்பவன்போல் உணர்கிறேன்


0:05-0:07
Ban ja hun chela main

ஒரு புனிதருக்கு


0:07-0:11
Mainthon nhi hunda kam kaar, haaye!

ஐயகோ ! என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லையே!


0:11-0:15
Fayda ki hoya aithe degreeyan laen da?

பட்டம் படித்தது ஏதேனும் நன்மை செய்யத்தானே?


0:15-0:18
Rehna je berozgaar

நீ இப்போதும் வேலையின்றி இருந்தால்?


0:19-0:20
Bapu karjai hoya

என் அப்பா இப்போது பெருங்கடனில் இருக்கிறார்


0:20-0:21
Bhar bhar feesan

எனது கல்வி கட்டணத்தை செலுத்தி, செலுத்தியே


0:22-0:25
Kam naiyo aaiyan, buddhi ma diyan assesan

எனது வயதான தாயின் ஆசிர்வாதங்கள் பயனற்றுப்போயின


0:25-0:26
Main taan hun soch leya ae

நான் இப்போது நம்புகிறேன்


0:27-0:28
Kismat hi khoti ae!

துரதிஷ்டமே நமது விதி


0:29-0:33
Saadi tan hath ne ohi, rukhi jehi roti ae

நமது கைகளில் பழைய காய்ந்த ரொட்டி


0:34-0:37
Khasmanu khaave sarkar oye

இந்த அரசுடன் ஒரே ரோதனை!


0:38-0:41
Fayda ki hoya aithe degreeyan laen da ?

பட்டம் படித்தது ஏதேனும் நன்மை செய்யத்தானே?


0:41-0:44
Rehna je berozgaar

நீ இப்போதும் வேலையின்றி இருந்தால்?


0:44-0:48
Chad de hun Juggika nu, Chad de hun Jeetka nu

ஜக்கியை விட்டுவிடுங்கள், அது ஜீத்தாகவே இருக்கட்டும்


0:48-0:50
Karda tu choraan oye

ஏன் நம்பிக்கை உள்ளது (மாற்றத்திற்கு)?


0:50-0:52
Jindri ae chaar dinaa di

வாழ்நாள் குறைவே


0:52-0:54
Has le tu bhora oye

கொஞ்சம் சிரியுங்கள்


0:54-0:58
Fikraan vich devin na gujaar, hayee!

கவலைகொள்வதில் அதை வீணாக்காதீர்கள்!


0:59-1:02
Fayda ki hoya aithe degreeyan laen da ?

பட்டம் படித்தது ஏதேனும் நன்மை செய்யத்தானே?


1:02-1:06
Rehna je berozgaar

நீ இப்போதும் வேலையின்றி இருந்தால்?


குனித் கவுர் பீடி, மன்சா சத்வாலின் உதவியுடன் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழில்: பிரியதர்சினி R.

Binaifer Bharucha

बिनाइफ़र भरूचा, मुंबई की फ़्रीलांस फ़ोटोग्राफ़र हैं, और पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया में बतौर फ़ोटो एडिटर काम करती हैं.

की अन्य स्टोरी बिनायफ़र भरूचा
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

की अन्य स्टोरी Priyadarshini R.