

SANGUR, PUNJAB
|WED, JUL 23, 2025
2019 தேர்தல்கள்: கிராம வாக்குகள்
இந்திய கிராமங்களின் வாக்குகளை எது தீர்மானிக்கிறது? விவசாய நெருக்கடி, கடன் தள்ளுபடி, மருத்துவம், சாலை, பள்ளிகள், வேலைகள், நல்ல ஊதியம், மதிப்புமிக்க வாழ்க்கைகள் போன்றவை கிராம வாக்காளர்கள் கவனம் செலுத்தும் அம்சங்கள். ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் கிராமங்களில் பாரி கண்டறிந்தது இதைத்தான். சில இடங்களில் கோஷ்டிகள் ஆளுகின்றன. சிலவற்றில், தொழில்துறை அல்லது மக்களின் நிலம் மற்றும் நீரை சூறையாடும் திட்டங்கள் அல்லது நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் முதலியவற்றாலான மக்களின் கோபம் நிலவுகிறது. முழு கட்டுரைகளை இங்கு வாசிக்கவும்.
Author
Translator
பூஜ் வாக்குகளில் பழைய நம்பிக்கைகளும் இளம் பெண்களும்
குஜராத்தின்கட்ஜ் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரிலும்அதைச் சுற்றியிருக்கிற கிராமங்களிலும் உள்ள இளம்பெண்களும் மற்றவர்களும்தேர்தல்கள் பற்றிய அவர்களின் நம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் 2019 ஏப்ரல் 23 மக்களவைத் தேர்தல்களில் ஏன் வாக்களிக்க மாட்டார்கள்என்பதையும் பேசுகிறார்கள்.
ஏப்ரல் 23, 2019 | நமிதா வாய்க்கர்
நீலகிரியில் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களிக்கும் ஆதிவாசிகள்
கூடலூர்வட்டத்திலுள்ள பெண்கள் மதுபானக்கடைகளே அவர்களது குடும்பத்தை சீரழிப்பதாய் கூறுகின்றனர். எந்வொரு வேட்பாளரும் இதைப்பற்றி கண்டு கொண்டதாய் தெரியவில்லை , ஆனால் இன்றைய வாக்களிப்பிற்கு பிறகு இந்நிலை மாறும் என்று நம்புகின்றனர்
ஏப்ரல் 18, 2019 | விஷாகா ஜார்ஜ்
தூத்துக்குடி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டெர்லைட் விவகாரம்
தமிழ்நாட்டின்குமாரரெட்டியாபுரம் கிராமத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவுநடைபெறுகிறது. வாக்காளர்களின் மனங்களில் ஆதிக்கம் செலுத்துவது மே 22 2018 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் 14பேர் உயிரைகாவு வாங்கிய போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் நினைவுகளே
ஏப்ரல் 17, 2019 | கவிதா முரளிதரன்
தும்கூர் தேர்தல்களுக்குப் பிறகு தூய்மையான பணிக்கான எதிர்பார்த்தல்
கர்நாடகமாநிலத்திலேயே அதிகமான கையால் மனிதக் கழிவு அகற்றுவோரைக் கொண்ட மாவட்டம் தும்கூர் மாவட்டம். அவர்களில் பலர் அரசியல் தலைவர்களின்மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என்கிறார்கள். ஆனாலும் தங்களுக்கு இப்போது இருப்பதைவிட ஏதேனும் ஒரு நல்ல முடிவுவரும் என்ற நம்பிக்கையோடுதான் ஏப்ரல் 18 தேர்தல்களில்வாக்களிப்பார்கள்
ஏப்ரல் 15, 2019 | விஷாகா ஜார்ஜ்
அனந்தப்பூர் தேர்தல்களில் பயமும் அரசியல் கட்சிகளின் பிரிவுகளும்
ஆந்திரப்பிரதேசத்தின் ராயலசீமா மண்டலத்தில் நடைபெறுகிற தேர்தல் பணிகளில் மக்களின் பிரச்சனைகள் பேசப்படுவதைவிட அரசியல் கட்சிகளின் பிரிவுகள் பற்றிதான் அதிகம் பேசப்படுகிறது.
ஏப்ரல் 11, 2019 | ராகுல் எம்.
இமாலயத்தின் தேர்தல் பிரச்சனை: கனவு நெடுஞ்சாலைகள்
உத்தராகண்ட்மாநில மலைவாழ் மக்கள் பல கிலோ மீட்டர்தூரம் குறுகிய, செங்குத்தான பாதைகளில் பயணிக்கும் தங்களது துயர பயணங்களுக்கு எந்தஅரசாங்கம் சாலை அமைத்து தீர்வுதரும் என்னும் எதிர்பார்ப்பில் வாழ்ந்து வருகின்றனர்
ஏப்ரல் 9, 2019 | அர்பிதா சக்ரபர்த்தி
தேர்தல் களத்தில் யாவத்மால் விவசாயி கணவரை இழந்த பெண் !
வைசாலியேதே ஒரு விவசாயக்கூலி. அங்கன்வாடிஊழியர். அவரது கணவர் 2011இல் தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்ட்ரத்தின் கிழக்குப் பகுதியில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். செல்வாக்குள்ள அரசியல் பெரும் புள்ளிகளை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்
ஏப்ரல் 5, 2019 | ஜெய்தீப் ஹர்திகர்
டெம்ப்பரே கிராமம் வாக்களிப்பதைப் பற்றி பேசுகிறது
காதைக்கிழிக்கிற தொலைக்காட்சி விவாதங்களுக்கும், கட்சிகள் வாங்குகிற வாக்குகள் பற்றிய எண் பட்டியல்களுக்கும் அப்பால் மகாராஷ்ட்டிரத்தின்தானே மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள்தங்களின் நல்வாழ்வு, சாலைகள், பள்ளிகள், கடன்களை தள்ளுபடி செய்வது, வேலைகள் பற்றி எந்த வேட்பாளர்தான் பேசுவார்என்று கண்களை அகல விரித்துக்கொண்டு, எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்
ஏப்ரல் 3, 2019 | ஜோதி ஷினோலி
சந்திரப்பூரின் தேர்தல் முடிவைச் சொல்லும் பேசும் மரம்
பரஞ்சிமோகசா கிராமத்திலும் அதைச் சுற்றியிருக்கிற மற்ற கிராமங்களிலும் உள்ளமக்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஒரு நிலக்கரி சுரங்கம்பாழ்படுத்திவிட்டிருக்கிறது. கிழக்கு மகாராஷ்ட்டிரப் பகுதியான இதன் நாடாளுமன்ற உறுப்பினராகஇருப்பவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். அவர் நியாயமான இழப்பீட்டுக்கு வழி செய்யவில்லை என்பதால்மக்கள் அவருக்கு எதிராக ஏப்ரல் 11 அன்று வாக்களிக்க இருக்கிறார்கள்.
ஏப்ரல் 1, 2019 | ஜெய்தீப் ஹர்திகர்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/elections-2019-village-votes-ta










