ஆசிரியரின் குறிப்பு:

முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ், டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்பை அனுமதிப்பது மட்டுமல்லாமல், அதற்கு துணை நின்று ஊக்குவிக்கவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இந்த காணொளி செய்தியில், சமீபத்திய சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார். "மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களை ரத்து செய்ய அரசு ஒப்புதல் கொடுத்தால்" மட்டுமே விவசாயிகள் கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை விழிப்படைய செய்ததற்காக, போராட்டக்காரர்களை  வாழ்த்திய அதே சமயத்தில், மிகவும் மதிக்கதக்க புகழ்பெற்ற இந்த ஆயுதப்படை வீரர் கூறுகிறார்: “நீங்கள் பல வாரக்காலமாக உறைபனி குளிரிலும்  கடுமையான சூழ்நிலைகளிலும் முன்மாதிரியான ஒழுக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டியிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த அமைதியையும்,  அகிம்சையின் பாதையையும் பின்பற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்”.

காணொளியைப் பார்க்கவும்: கடற்படைத் தலைவர் ராம்தாஸ் - ‘’நீங்கள் முழு நாட்டையும் விழிப்படைய செய்திருக்கிறீர்கள்’

தமிழில்: ஷோபனா ரூபகுமார்

Admiral Laxminarayan Ramdas

एडमिरल लक्ष्मीनारायण रामदास भारतीय नौसेना के पूर्व प्रमुख और वीर चक्र विजेता हैं।

की अन्य स्टोरी Admiral Laxminarayan Ramdas