“என்னுடைய இந்த இசையை பக்தி பாடல்களுக்கு இசைத்திருக்கிறேன். இந்த இரண்டு வாத்தியங்களை என் சிறுவயதிலிருந்தே வாசித்து வந்திருக்கிறேன்,” என்கிறார் 60 வயதாகும் பிரேம்லால். 2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் நடந்த தேசியப் பழங்குடி நடன விழாவில் அவரை எதிர்கொண்டோம்.

ருபாபும் கஞ்சரியும்தான் அந்த இரு வாத்தியங்கள். அவரின் வலது தோளிலிருந்து தொங்கும் தந்தி வாத்தியத்தின் பெயர்தான் ருபாப் (மத்திய ஆப்கானிஸ்தானில் உருவான வாத்தியம் என பல குறிப்புகள் சொல்கின்றன). கஞ்சரி என்பது (டாம்பரின் வாத்திய வகையை சேர்ந்தது என சொல்லப்படுகிறது) அவரின் இடது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் சிறு மேளவாத்தியம் ஆகும்.

பிரேம்லால் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தின் ஜகத் கிராமத்தை சேர்ந்தவர். பிரேம்லால் என்பது மட்டும்தான் தன் முழுப்பெயர் என்றும் வேறு பெயர் எதுவும் தனக்கு இல்லை என்றும் கூறுகிறார். பிரமனூர் ஒன்றியத்தில் இருக்கும் ஜகத் கிராமத்தில் 900 (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) பேர் வசிக்கின்றனர். கிராமத்தின் 60 சதவிகிதம் பேர் பழங்குடிகள். மிச்ச 40 சதவிகிதம் பட்டியல் சாதியினர்.

இரு வாத்தியங்களையும் ஒரே நேரத்தில் வாசிக்கும் முறையை நமக்கு (காணொளியில்) செய்து காட்டுகிறார். அவர் ஒரு விவசாயி என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறார். “இசைப்பதை தவிர்த்து, சோளத்தையும் சிவப்பு காராமணியையும் விதைக்கிறேன்,” என்கிறார் பிரேம்லால்.

தமிழில்: ராஜசங்கீதன்

காணொளி: பிரேம்லால் ருபாப் மற்றும் கஞ்சரி வாத்தியங்களை வாசிக்கிறார்

Purusottam Thakur

पुरुषोत्तम ठाकुर, साल 2015 के पारी फ़ेलो रह चुके हैं. वह एक पत्रकार व डॉक्यूमेंट्री फ़िल्ममेकर हैं और फ़िलहाल अज़ीम प्रेमजी फ़ाउंडेशन के लिए काम करते हैं और सामाजिक बदलावों से जुड़ी स्टोरी लिखते हैं.

की अन्य स्टोरी पुरुषोत्तम ठाकुर
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan