சீன மீன்பிடி வலைகள் என்று அறியப்படும், கடற்கரையில் இருந்து தூக்கி இயக்கும் வகையிலான வலைகள், கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் உள்ள மீனவர்களுக்கு நீண்ட நாள் வாழ்வாதாரத்திற்கான ஒரு வழியாக இருந்தது.
பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களால் இந்தத் துறை தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அதிகப்படியான மீன்பிடிப்பு, கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் மாசு ஆகியவற்றால் மீன் குறைந்து வருகிறது. மீன்பிடியில் இருந்து கிடைக்கும் வருமானம் இடைத்தரகர்களுக்கே பெருமளவில் செல்கிறது. மீனவர்களுக்கு சிறிதளவே கிடைக்கிறது.
முறையாக வகுக்கப்படாத அரசுத் திட்டங்களினால் மீனவர்களின் பிரச்சனைகள் மோசமடைந்துவிட்டது. அவை மீனவர்களின் குறிப்பிட்ட பிரச்சனைகளை பேசுவதாக இல்லை. கூடுதலாக வலைகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகரித்து வருவதும் பொருளாதார ரீதியாக அதன் சொந்தக்காரர்களுக்கு உபயோகமானதாக இல்லை.
இளைஞர்களும் இந்தத் தொழிலிருந்து வெளியேறுகின்றனர். இறுதியில் கொச்சி கடற்கரை பகுதிகளில் இருந்து இந்த சீன மீன்பிடி வலைகளே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
தமிழில்: பிரியதர்சினி. R.