இந்த முற்றத்தை இழக்கிறேன்; உன் வழிகளை இழப்பேன்.
வெளியாள், விருந்தாளி. ஓ அம்மா, நான் இந்த இடத்தை இழந்து துயருருவேன்.

திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வசிக்கும் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஒரு பெண் துயரமான பாடலை பாடுகிறார். பாடல் வரிகளும் மெட்டுகளும் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரியும் பெண்ணின் வலியை கொண்டிருப்பது நாட்டின் பல பண்பாடுகளில் இருப்பதுதான். செறிவான வாய்மொழி இலக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாக திருமணம் இருக்கும் சமயத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டன.

எளிய வடிவமும் உள்ளடக்கமும் கொண்டு, காலங்காலமாக கடத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பல்வேறு தலைமுறைகளால் கையாளப்படும் இத்தகைய பாடல்கள், பாலினம் போன்ற அடையாளத்துக்கான சமூகக் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. ஆணாதிக்க சமூகத்தில் திருமணமென்பது, பெண்ணின் வாழ்க்கை ஒரு சம்பவம் மட்டுமல்ல, அவளின் அடையாளத்தை உருவாக்குவதில் ஒரு முக்கியமான கட்டமும் ஆகும். சுதந்திரம், நட்புகள், குடும்பங்கள், நினைவுகள் எல்லாவற்றையும் தாங்கியிருந்த அவளின் வீட்டுமுற்றங்கள், பரிச்சயமற்றவையாகவும் தூரமாகவும் இனி ஆகவிருக்கின்றன. பரிச்சயமான விஷயங்கள் இழக்கப்படுவதை விருப்பமாக கட்டாயப்படுத்தும் பண்பாடு, அவளின் பலவகை உணர்வுகளின் தொகுப்பின் வழியாக விழிக்கிறது.

முந்த்ரா தாலுகாவின் பத்ரேசர் கிராமத்தின் ஜுமா வகெர் இஸ்லாமிய சமூக மீனவர்கள் பாடியிருக்கும் இப்பாடல், 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட சூர்வானி என்கிற வானொலி நிலையத்தால் பதிவு செய்யப்பட்ட 341 பாடல்களில் ஒன்றாகும். KMVS-ன் மூலமாக பாரிக்கு வந்த தொகுப்பிலுள்ள இப்பாடல்கள், அப்பகுதியின் ஆழமான பண்பாடு, மொழி மற்றும் இசை ரீதியிலான பன்மைத்துவத்தை பிரதிபலிக்கிறது. இத்தொகுப்பு, பாலைவன மணலில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் கட்ச்சின் இசை மரபை காக்க உதவுகிறது.

துயரங்களையும் அச்சங்களையும் பாடல்களின் வழியாக பாடுவது அவளுக்கு பாதுகாப்பு. அந்த உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வேறு வழி அவளுக்கு இல்லை.

பத்ரேசரின் ஜுமா வகெர் பாடிய நாட்டுபுற பாடலை கேளுங்கள்

કરછી

અંઙણ જાધ પોંધા મૂકે વલણ જાધ પોંધા (૨)
આંઊ ત પરડેસણ ઐયા મેમાણ. જીજલ મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા,મિઠડા ડાડા જાધ પોંધા (૨)
આઊ ત પરડેસણ ઐયા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા
આઊ ત વિલાતી ઐયા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા મિઠડા બાવા જાધ પોંધા (૨)
આઊ તા રે પરડેસણ બાવા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા
આઊ તા વિલાતી ઐયા મેમાણ, જીજલ મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા મિઠડા કાકા જાધ પોંધા (૨)
આઊ તા પરડેસણ કાકા મેમાણ,માડી મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા મિઠડા મામા જાધ પોંધા (૨)
આઊ તા રે ઘડી જી મામા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા (૨)
આઊ તા વિલાતી ઐયા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા મિઠડા વીરા જાધ પોંધા (૨)
આઊ તા રે પરડેસી મેમાણ, વીરા મૂકે અંઙણ જાધ પોંધા
અંઙણ જાધ પોંધા મૂકે વલણ જાધ પોંધા (૨)
આઊ તા રે પરડેસણ ઐયા મેમાણ, માડી મૂકે અંઙણ જાધ પોંધા
આઊ તા વિલાતી ઐયા મેમાણ, જીજલ મૂકે અંઙણ જાધ પોંધા
આઊ તા રે ઘડી જી ઐયા મેમાણ,માડી મૂકે અંઙણ જાધ પોંધા (૨)
અંગણ યાદ પોધા મુકે વલણ યાદ પોધ

தமிழ்

இந்த முற்றமில்லாது தவிப்பேன். உன் வழிகள் இன்றி தவிப்பேன்
நான் வெளியாள், ஒரு விருந்தாளி. ஓ அம்மா, இந்த இடமே இல்லாது நான் தவிப்பேன்
முற்றமில்லாமல் தவிப்பேன்; அன்பு அப்பாவும் தாத்தாவும் இல்லாமல் தவிப்பேன்(2)
ஓ நான் வெளியாள், தாத்தா, வெளியாள். ஓ அம்மா, முற்றமில்லாமல் நான் தவிப்பேன்.
வெளியாள், ஒரு விருந்தாளி. ஓ அம்மா, இந்த முற்றமில்லாமல் நான் தவிப்பேன்.
இந்த முற்றமும் என் பாவாவும். என் தந்தையும் இல்லாது தவிப்பேன்.(2)
நான் வேறு இடத்துக்குரியவள் தந்தையே. ஓ அம்மா, முற்றமில்லாமல் நான் தவிப்பேன்.
ஒரு வெளியாள், ஒரு விருந்தாளி. ஓ ஜீஜல் என் அம்மா, இந்த இடமில்லாது தவிப்பேன்.
இந்த முற்றம் மற்றும் அன்பு ககா. என் தந்தைவழி மாமா இல்லாமல் தவிப்பேன்(2)
ஒரு வெளியாள், மாமா, ஒரு விருந்தாளி. ஓ அம்மா, இந்த இடமில்லாது நான் தவிப்பேன்.
இந்த முற்றம் மற்றும் என் அன்பு மாமா. என் தாய்வழி மாமா இல்லாது தவிப்பேன்(2)
ஓ நானொரு வெளியாள், மாமா, ஒரு விருந்தாளி. ஓ அம்மா, முற்றமில்லாது தவிப்பேன்.
ஒரு வெளியாள்,ஒரு விருந்தாளி. ஓ அம்மா, இந்த இடமில்லாது நான் தவிப்பேன்.
இந்த முற்றமும் என் அன்பு வீராவும். என் சகோதரன் இல்லாமல் தவிப்பேன்(2)
ஓ நானொரு வெளியாள், சகோதரா, ஒரு விருந்தாளி. இந்த இடமில்லாது தவிப்பேன்.
இந்த முற்றமும் உன் வழிகளும் எல்லாமும் இல்லாமல் தவிப்பேன்(2)
ஒரு வெளியாள், ஒரு விருந்தாளி. ஓ அம்மா, இந்த இடமில்லாது நான் தவிப்பேன்.
நானொரு வெளியாள், ஜீஜல், ஒரு விருந்தாளி. ஓ அம்மா, முற்றமின்றி நான் தவிப்பேன்.
சற்று நேரம்தான் இங்கிருந்தேன் அம்மா, இந்த இடம் இல்லாமல் தவிப்பேன்(2)
இந்த முற்றமும் உன் வழிகளும் இந்த இடமும் இல்லாமல் நான் தவிப்பேன்.

PHOTO • Priyanka Borar

பாடல் வகை: பாரம்பரிய நாட்டுப்புறப் பாட்டு

தொகுப்பு: திருமணப் பாடல்கள்

பாடல்: 4

பாடல் தலைப்பு: ஆங்கான் யாத் பொதா மூக்கே, வலன் யாத் பொதா

இசை: தேவால் மேத்தா

பாடகர்: முந்த்ராவின் பத்ரேசரை சேர்ந்த ஜுமா வகெர். அவர் 40 வயது மீனவர்.

பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள்: ஹார்மோனியம், மேளம், பாஞ்சோ

பதிவு செய்யப்பட்ட வருடம்: 2012, KMVS ஸ்டுடியோ

குஜராத்தி மொழிபெயர்ப்பு: அமத் சமேஜா, பாரதி கோர்


ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

কবি এবং অনুবাদক প্রতিষ্ঠা পান্ডিয়া গুজরাতি ও ইংরেজি ভাষায় লেখালেখি করেন। বর্তমানে তিনি লেখক এবং অনুবাদক হিসেবে পারি-র সঙ্গে যুক্ত।

Other stories by Pratishtha Pandya
Illustration : Priyanka Borar

নিউ-মিডিয়া শিল্পী প্রিয়াঙ্কা বোরার নতুন প্রযুক্তির সাহায্যে ভাব এবং অভিব্যক্তিকে নতুন রূপে আবিষ্কার করার কাজে নিয়োজিত আছেন । তিনি শেখা তথা খেলার জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করছেন; ইন্টারেক্টিভ মিডিয়ায় তাঁর সমান বিচরণ এবং সেই সঙ্গে কলম আর কাগজের চিরাচরিত মাধ্যমেও তিনি একই রকম দক্ষ ।

Other stories by Priyanka Borar
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan