2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

' சிக்கிம்மில் 300 ஹிமாலய எருதுகள் உணவின்றி உயிரிழப்பு '
' வடக்கு சிக்கிம்மில் உறைபனியில் சிக்கிய 300 எருதுகள் உணவின்றி உயிரிழப்பு'
' சிக்கிம் எருதுகள் மரணம்: பனியில் நிகழ்ந்த அவலம் '

' மே மாதம் 12ம் தேதியன்று வந்த தலைப்புச் செய்திகள் என்னைப் பாதித்தன. ஃபோட்டோ ஜர்னலிஸ்ட்டாக என்னுடைய இமய மலைப் பயணங்களிலிருந்து நான் தெரிந்துகொண்ட விஷயம் ஒன்று இருக்கிறது. கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அங்கிருக்கும் நாடோடி மேய்ப்பர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். உயர்ந்த அந்த மலைகளின் எல்லை முழுவதுமுள்ள மேய்ப்பர்களுக்கு திபெத்திய எருதுகள் மிக முக்கியமானவை. கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் இடம்பெயரும் அந்த மேய்ப்பர்களுக்கு உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எருதுகள் தான் முதன்மையானவை.

அத்தகைய தலைப்புகளை உடைய சில கட்டுரைகள் பூமி வெப்பமயமாதலால் அபாயத்திற்கு உள்ளாகும் எருதுகளைப் பற்றி பேசுகின்றன. எருதுகளுக்கு இத்தகைய அபாயம் நேர்வது, மேய்ப்பர்களை பிரச்சனைக்குள்ளாக்குகிறது. லடாக்கின் ஹன்லே பள்ளத்தாக்கில் இருக்கும் சங்பா குடும்பங்களுக்குத் திரும்ப முடிவெடுத்தேன். எருதுகளும் மேய்ப்பர்களும் என்னவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முடிவெடுத்தேன்.

திபெத்திய சமவெளியின் மேற்கு நீட்சியான, இந்தியாவில் இருக்கும் சங்தங் மண்டலத்தின் சங்பாக்கள்தான் காஷ்மீரி உல்லனின் முதன்மையான தயாரிப்பாளர்கள். திபெத்திய எருதுகளின் மேய்ப்பர்களும் அவர்கள்தான். சங்பாவின் பல மேய்ப்புக் குழுக்களான திக்யூ, கர்லூக், மேக், ரேக் மற்றும் யுல்பா ஆகியவைதான் ஹன்லே பள்ளத்தாக்கின் லே மாவட்டத்தின் ந்யோமா ப்ளாக்தான் இருப்பிடம்.

ஹன்லேவில் 35 வயதான நிபுணரான திக்யூ மேய்ப்பரான ஜம்பல் செரிங், ”பல எருதுகளை இழந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். ”இப்போது, மலைகளில் இப்போது இருக்கும் வானிலை யூகிக்க முடியாததாக இருக்கிறது”. செரிங்கைச் சந்தித்ததற்காக, ஹன்லேவில் இந்திய வானியல் ஆய்வகத்தில் இருக்கும் கல்டோ கிராமத்தின் சோனம் டோர்ஜீக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். 14000 உயரத்தில் இருக்கும் டக்னக்போ புல்வெளி நிலத்தில் இருக்கும் லடாக்கி மொழியின் ராணுவ முகாமான குர்ரில் அமர்ந்து செரிங் நம்மிடம் பேசினார்.

2019 மே மாதத்தில் சிக்கிம்மின் பேரழிவுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னதாக, நேபாலைச் சேர்ந்த ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம், ஒரு ஆய்வை வெளிப்படுத்தியிருக்கிறது. ”சமீபத்திய வருடங்களில் இந்தியா, பூட்டான், நேபாலில் இந்த எருது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது” என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ”1977-இல் 132000-இல் இருந்த எண்ணிக்கை 1997-ஆக எருதுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக” ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அடுத்த முப்பதாண்டுகளில் 60 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

லே மாவட்டத்தில், உள்ளூரில் விலங்குகள் நல வாரியம் மற்றும் பால்வளத்துறையின் தரவுகளின்படி, 1991-இல் 30000 ஆக இருந்த எருதுகளின் எண்ணிக்கை 2010-இல் 13000 ஆக குறைந்திருக்கிறது. இருபது ஆண்டுகளில் அது 57 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. உள்ளூர் தரவுகளுக்கும் அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கும் வித்தியாசம் உள்ளது. அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 2012-இல் எருது எண்ணிக்கை 18877 (21 வருடங்களில் 37 சதவிகிதம் குறைந்தது) ஆக இருந்ததாகத் தெரிவித்திருக்கிறது.

PHOTO • Ritayan Mukherjee

முழுதாக நன்கு வளர்ந்த ஹிமாலய எருது - லடாக்கின் ஹன்லே பள்ளத்தாக்கின் புல்வெளியில் இருக்கும் சங்கா நாடோடி மேய்ப்பர்களின் நூற்றாண்டுகால வாழ்வாதாரம்.

திக்யூ இருப்பிடத்தை அடைவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. மற்ற மேய்ப்புக் குழுக்களை விட மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்தன. இந்திய சீன எல்லைக்கு அருகில் அவர்களது முகாம்கள் சில இருந்தன. அங்கு குடிமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அது இளவேனிற்காலமாக இருந்தாலும் சோனம் டோர்ஜீயின் உதவியால் அதைச் சென்றடைய முடிந்தது.

”எருதுகள் மிக அற்புதமானவை” என்றார் ஜம்பல் செர்சிங். உறைநிலைக்கு கூட எருதுகள் பழக்கப்பட்டவை. ”மைனஸ் 35 சதவிகிதம் முதல் மைனஸ் 40 சதவிகிதம் செல்சியஸ் வரை தாங்கும் திறன் படைத்தது. 12 முதல் 13 வரையிலான டிகிரி வெப்பநிலை கூடினால் அவற்றிற்கு சிரமம் ஏற்படுகிறது. மோசமான பனியிலும் அவற்றின் உடல் வளர்சிதை மாற்றத்தால், உடல் வெப்பநிலையை காத்துக்கொண்டு அவற்றால் வாழ முடியும். ஆனால் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றிற்கு சிரமமானதாக இருக்கும்”.

திக்யூ இருப்பிடத்திலிருந்து 40 கிலோமீட்டர்களுக்குள் காலா பரியில் (கருப்பு மலை) ஹன்லே பள்ளத்தாக்கில் உள்ள எருதுகள் வைத்திருக்கும் சில பெண் உரிமையாளர்களுள் ஒருவரான சிரிங் சோம்சம்முடன் பேசினேன். ”முன்பை விடவும் கதகதப்பாக இருந்ததால், செம்மறி ஆடுகள், பாஷ்மினா ஆடுகள் மற்றும் எருதுகள் முன்பைப்போல அவற்றிற்கு அடர்த்தியான ரோமமும் உடலில் இல்லை. இப்போது அது மிக மெலிதாகவும் குறைவாகவும் உள்ளது” என்று சிரிங் கூறினார். ”அவை மிகவும் பலவீனமாக உள்ளன. பலவீனமான ஆடுகளால் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவாக இருக்கும். குறைவான பால் கிடைப்பதால் குறைவான வருமானம் கிடைக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது”. சோம்சம் ரேக் மேய்ப்புக் குழுவிலிருந்து வந்த மேய்ப்பர் ஆவார். பலரிடமும் இருந்து கிடைத்த தரவுகளின்படி, 2012-இல் ஒரு மேய்ப்பருக்கு கிடைக்கும் மாத வருமானம் 8500-ஆக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேய்ப்பாளரின் முதன்மையான வருமானம் வருவது எருதுப்பாலின் மூலம்தான். மேய்க்கப்படும் எருதுகளிடமிருந்துதான் 60 சதவிகிதம் வருமானம் அவர்களுக்கு கிடைக்கிறது. சங்பாக்களில் மீதமிருக்கும் பலர் எருதின் குலூ (எருதின் முடி) மற்றும் உல்லன் மூலமாக வருமானம் ஈட்டுகிறார்கள். வீழ்ச்சியடைந்து வரும் எருதுகளின் எண்ணிக்கையாலும், பால் உற்பத்தி குறைவாலும் அவர்கள் பெரிய வருமான இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். இவையனைத்தும் சேர்ந்து எருதுகள் சார்ந்த பொருளாதாரத்தில் பெரும் இழப்பை உண்டு செய்கிறது.

”சரியான நேரத்தில் பனிப்பொழிவோ அல்லது மழையோ இருப்பதில்லை” என்கிறார் செரிங் சோம்சம். ”மழையில்லாமல் போவதால், மலைகளில் தேவையான அளவுக்கு புல்லும் இருப்பதில்லை. இதனால், இங்கு வரும் நாடோடிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. புட்கள் கிடைக்காமல் இருப்பதாலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளாலும் நாடோடிகளின் வரவு 40 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. (290 குடும்பங்கள் வரையிலான மேய்ப்பர்களின் எண்ணிக்கை) என்று தெரிவித்தார் செரிங்.

நிம்மதியைத் தரும் விஷயம் என்னவென்றால் எனது மகன் உள்ளூர் கண்காணிப்பகத்தில் வேலை செய்கிறார். சங்பா குடும்பங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் எல்லைச் சாலைகள் நிறுவனம் அல்லது சாலைத் திட்டங்களில் தினக்கூலிகளாக பணிபுரியத் தொடங்கிவிட்டார்கள்” என்று தெரிவிக்கிறார் செரிங். வேறு பலர் வேலைகளைத் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது.

உள்ளூர் கண்காணிப்பகத்தில் பணிபுரியும் அவரது மகனின் பெயர் சோனம் டோர்ஜீ. அவர்தான் இந்தப் பயணத்துக்கு எனக்கு உதவியவர். மலைகளில் நடக்கும் இந்த மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனித்து வருபவர் சோனம்.

PHOTO • Ritayan Mukherjee

”வானிலையில் பல மாறுதல்கள் நடந்து வருகிறது.” ”எனக்கு 15 வயது இருக்கும்பொழுது, இங்கு மிக அதிகமான அளவில் குளிர் இருக்கும்... அப்போதைய குளிரை அறிந்தவர்கள் மைனஸ் 35 செல்சியஸ் வரை செல்லலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

”வானிலையில் பல மாறுதல்கள் நடந்து வருவதாக” தெரிவித்த அவர், ”எனக்கு 15 வயது இருக்கும்பொழுது (இப்போது எனக்கு 43 வயதாகிறது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் பற்றிப் பேசுகிறேன்) இங்கு மிகவும் அதிகமான குளிர் இருக்கும். நான் இங்கு இருந்த குளிரை அளந்ததில்லை. ஆனால், மைனஸ் 35 செல்சியஸ் வரை இது செல்லலாம் என அதைப்பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த மோசமான குளிரை தாங்குமளவுக்கு அவர்களின் உடை வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது அவர்கள் அணித்திருக்கும் சிந்தெடிக் சட்டைகள் இல்லை. பாஷ்மினா ஆடுகளின் ரோமத்தில் செய்யப்பட்ட தொப்பிகள், உடைகளைத்தான் அணிந்திருப்பார்கள். காலணிக்குள் எருதுகளின் தோலால் ஆன அடுக்கு இருக்கும். மூட்டு வரையிலான காலணியை துணிகள் கொண்டு வடிவமைத்து அதை இறுக்கமாக கட்டும்படி வடிவமைத்திருப்பார்கள். இப்போது அப்படியான காலணிகளைப் பார்க்கமுடியாது”.

வெப்பமயமாதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது - மேற்கு இமய மண்டலத்தின் லடாக், லாஹல் மற்றும் ஸ்பிடியில் பருவ நிலை மாற்றத்தைப் பற்றிய 2016 ஆவணத்தில் இப்படிக் கூறியிருக்கிறார்கள் டுண்டுப் ஆங்மோவும், எஸ்.என் மிஷ்ராவும். ”எரிகற்கள் துறையிலிருந்து கிடைத்த தரவுகள் (விமான நிலையம், லே) லேவில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து வருவதையும், குளிர்காலங்களில் 1 டிகிரி செல்சியஸாகவும், கோடைக்காலங்களில் 0.5 டிகிரி செல்சியஸாகவும் கடந்த 35 வருடங்களுக்கு இருந்துவருகிறது. நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை பனிப்பொழிவு குறைவதில் ஒரு குறைந்த போக்கு நிலவுகிறது.”

”கடந்த சில வருடங்களாக லடாக்கில், லஹாலில், ஸ்பிடியில் அதிகரித்து வரும் உலக வெப்ப மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழை மற்றும் பனிப்பொழிவின் போக்கு மாறிக்கொண்டிருக்கிறது” என்று தெரிவிக்கிறார்கள் அவர்கள். சிறு பனிக்கட்டிகள், நிரந்தர பனி உறைவுகள் உருகி, ஆறுகளிலும் ஓடைகளிலும் நீரோட்டத்தை அதிகரித்து வெப்பநிலையிலும் ஈரப்பதத்திலும் அதிக வீரியத்தை உண்டாக்குகிறது. பூச்சித் தாக்குதல்களுக்கும் இத்தகைய நிலை சாதகமாக இருக்கிறது”.

ஜம்பல் செரிங்கின் முகாமில், அவரது நண்பரான சங்டா டோர்ஜீ எங்களைப் நோக்கி, ”இந்த முறை எத்தனை ரெபோக்களைப் பார்த்தீர்கள்” என்று கேட்டார்?

சங்பாக்கள் ரெபோக்கள் என்று அழைக்கப்படும் முகாம்களில் வாழ்கிறார்கள். ஒரு ரெபோவை உருவாக்குவதற்கு, எருதுகளின் ரோமங்களால் ஆன துணி குடும்பங்களால் உருவாக்கப்படுகிறது. அவற்றை வைத்து தடிமனான ஆடைகள் நெய்யப்படுகின்றன. மிக மோசமான பனியிலிருந்தும் குளிர் காற்றிலிருந்தும் இந்த துணி அவர்களைப் பாதுகாக்கிறது.

”பல குடும்பங்களுக்கு ஒரு ரெபோ கூட இப்போது இருப்பதில்லை” என்று சங்டா கூறுகிறார். ”புதிய ரெபோக்களை உருவாக்குவதற்கான உல்லன் எங்கு இருக்கிறது? கடந்த சில வருடங்களாக எருதிலிருந்து கிடைக்கும் உல்லனின் அளவு அதீதமாகக் குறைந்திருக்கிறது. ரெபோ இல்லாமல், நாடோடி வாழ்வின் முக்கியமான பகுதியை இழந்திருக்கிறார்கள் இவர்கள்”.

சிக்கிம்மில் மே மாதம் நடந்த அந்த நிகழ்வு சாதாரணமாக நிகழ்ந்த ஒன்றல்ல. மோசமான நிகழ்வுகள் இன்னும் காத்திருக்கக்கூடும். மேய்ப்பர்கள், பருவநிலை மாற்றம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதனால் ஏற்படும் தாக்கத்தை நன்றாகவே விளக்குகிறார்கள்.  சோனம் டோர்ஜீ மற்றும் செரிங் சோம்சொம் கூறுவதைப்போல மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அவர்களது வார்த்தைகளில் இருந்தே அறிய முடிகிறது. மிகப் பெரிய மாற்றங்கள் மனிதர்களால் நிகழ்ந்திருப்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். ”ஆம், மலையின் பருவநிலை மிகவும் தந்திரமானதுதான். யூகிக்க முடியாத ஒன்றுதான். என்றாலும், மலைக் கடவுளை நாம்தான் கோபப்பட வைத்திருக்கிறோம்” என கூறியிருக்கிறார் மூத்த மேய்ப்பர் கும்பு டஷி.

PHOTO • Ritayan Mukherjee

நெடிய உயர்ந்த மலைகளின் நீளம் முழுவதுமிருக்கும் சங்பா நாடோடி மேய்ப்பர்களின் வாழ்வாதாரம் இந்த ஹிமாலய எருதுகள். குளிர்காலத்தின் உணவுத் தேவையும் அவர்களின் வருமானமும் இவைகளைச் சார்ந்தே இருக்கிறது.

PHOTO • Ritayan Mukherjee

உயர்ந்த புல்வெளித் தளங்களைச் சார்ந்திருக்கும் சங்பா நாடோடிகளின் கால்நடைகளான பாஷ்மினா ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் எருதுகள் ஆகியவற்றை பாதிக்கும் பருவநிலை மாற்றங்கள்.

PHOTO • Ritayan Mukherjee

வாழ்வியல் மாற்றங்களின் காரணமாக, சங்பா குடும்பங்கள் பல இப்போது ரெபோ என்னும் பாரம்பரியமான எருதுத்தோல் குடில்களைப் பயன்படுத்துவதில்லை. லே நகரிலிருந்து கிடைக்கும் ராணுவ டெண்ட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்

PHOTO • Ritayan Mukherjee

இருந்தாலும், இச்சமூகம் இன்னும் எருதுகள் மூலமாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிப்புகளை மேற்கொள்கிறார்கள். கால்நடைகளை மேய்க்கும் பணியில் இருக்கிறார் குழந்தை டோன்செனின் அம்மா. எருதின் ரோமத்தால் ஆன போர்வைக்குள் அமைதியாக உறங்குகிறார் குழந்தை டோன்சென்.

PHOTO • Ritayan Mukherjee

சங்தங் சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகத்துக்கு உணவுக்கும், பால் மற்றும் வருமானத்திற்கும் முதன்மையானது எருதுகள்தான். எருதுகளைக் கொல்வது இச்சமூகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. எருதுகள் இயற்கையாக இறந்துவிட்டால், குளிர்காலத்தில் உண்பதற்காக அவற்றின் இறைச்சி சேமிக்கப்படுகிறது.

PHOTO • Ritayan Mukherjee

சங்பா சமூகத்தின் ரேக் பிரிவைச் சேர்ந்தவரான கும்பு டஷி 80 எருதுகளின் உரிமையாளர். நாடோடி மேய்ப்பர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறார்கள் இவரும் சக மேய்ப்பர்களும்.

PHOTO • Ritayan Mukherjee

புல் வளரும்தன்மையை இழந்துவிட்ட நிலத்தைச் சுட்டிக்காட்டுகிறார் கோன்போ டோண்ட்ரப். தனது எருதுகளுக்காக இன்னும் உயரமான புல்தளங்களைத் தேட வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

PHOTO • Ritayan Mukherjee

தாயை இழந்த குட்டி எருதுடன் இருக்கும் செரிங் சோம்சொம். ஹன்லே பள்ளத்தாக்கின் ஒரே பெண் எருது உரிமையாளர் இவர்தான்

PHOTO • Ritayan Mukherjee

அதிகரித்துவரும் புல்வெளித் தளத் தட்டுப்பாட்டால், தொடர்ச்சியாக மேய்ச்சல் இடங்களை மாற்றிவரும் நாடோடி மேய்ப்பர்கள்

PHOTO • Ritayan Mukherjee

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மிகக் கடினமான குளிர்காலம். குடும்பத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களை வாங்குவதற்காக லே நகருக்குச் செல்லும் சங்பா மேய்ப்பர்.

PHOTO • Ritayan Mukherjee

ஹன்லே பள்ளத்தாக்கின் உயர்ந்த நிலத்தில், மேய்ச்சலுக்கான புல்தளங்களை இழந்து வரும் நிலத்தில் நடந்துசெல்லும் கர்மா ரிஞ்சென் (நோர்லா டோண்ட்ருப்புடன் முதன்மைப் படத்தில் இருப்பவர்).

பருவநிலை மாற்றத்தைக் குறித்த நாடு முழுவதுமான செய்திப்பணியிலிருக்கும் PARI, UNDP முயற்சியின் ஒரு பகுதி. சாமான்ய மக்களின் வாழ்வனுபவம் வழியாகவும், அவர்களின் குரல்களின் மூலமாகவும் ஆவணப்படுத்தும் முயற்சி. PARI இணையதளமான https://ruralindiaonline.org/-இல் இந்தக் கட்டுரைகள் உள்ளன.

இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected], [email protected] இருவருக்கும் தெரிவிக்கவும்.

தமிழில் : குணவதி.

Reporter : Ritayan Mukherjee

ঋতায়ন মুখার্জি কলকাতার বাসিন্দা, আলোকচিত্রে সবিশেষ উৎসাহী। তিনি ২০১৬ সালের পারি ফেলো। তিব্বত মালভূমির যাযাবর মেষপালক রাখালিয়া জনগোষ্ঠীগুলির জীবন বিষয়ে তিনি একটি দীর্ঘমেয়াদী দস্তাবেজি প্রকল্পের সঙ্গে যুক্ত।

Other stories by Ritayan Mukherjee
Editor : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : Sharmila Joshi

শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।

Other stories by শর্মিলা জোশী
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

Other stories by Gunavathi