90 ரூபாய்க்கே பாலிஸ்டர் புடவை கிடைக்கையில், 300 ரூபாய்க்கு தான் நெய்த கொட்பட் புடவையை, யார் வாங்குவாரென யோசிக்கிறார் மதுசூதன் தண்டி.
நாற்பது வயதுகளில் இருக்கும் நெசவாளரான அவர், ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்திலுள்ள கொட்பட் தாலுகாவின் தொங்க்ரிகுடா கிராமத்தை சேர்ந்தவர். பல்லாண்டுகளாக பிரபல கொட்பட் புடவைகளை அவர் நெய்து வருகிறார். கொட்பட் புடவைகள், நுட்பமான படங்களை கொண்டு, கறுப்பு, சிவப்பு, பழுப்பின் பல வண்ணங்களில் பருத்தி நூல்களால் நெய்யப்படுகின்றன.
“நெசவு என்னுடைய குடும்பத் தொழில். என் தாத்தா நெய்தார். தந்தை நெய்தார். இப்போது என் மகன் நெய்கிறான்,” என்னும் மதுசூதன், எட்டு பேர் கொண்ட குடும்பம் பிழைக்கவென பல வேலைகள் செய்கிறார்.
நேரத்தில் நெய்யுதல் என்கிற இப்படம் 2014ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பாரம்பரியமாக மதுசூதன் செய்து வரும் கலையையும் அதை தொடர்வதில் இருக்கும் கஷ்டங்களையும் ஆராய்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்