காணொளியைக் காண: கரிமுலின் மருத்துவ மோட்டார் சைக்கிள் டைரீஸ் – ஒரு தேயிலை தோட்டப் பணியாளரின் ‘இருசக்கர அவசர ஊர்தி’

மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேயிலை தோட்டத்தில் கரிமுல் ஹக் வேலை செய்கிறார். இவர் தலாபாரி மற்றும் அருகாமை கிராம மக்களை மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்கிறார். அளவான வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலாபாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கிராந்தியில் உள்ளது. இப்பகுதிக்கு என முறையான நான்கு சக்கர அவசர ஊர்தி சேவை கிடையாது.

கரிமுலின் தனித்துவமான ‘இருசக்கர அவசர ஊர்தி‘ மற்றும் கைப்பேசி எண் (மருத்துவ தேவையில் உள்ள மக்கள் அழைப்பதற்கு) ஆகியவை கிராமங்களில் மிகவும் புகழ்பெற்றது. வட்டார அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் மருத்துவர்களும் அவரது சேவையை நன்கு அறிந்துள்ளனர்.

தேயிலை தோட்ட வேலையில் கரிமுல் மாதந்தோறும் ரூ.4000 ஈட்டுகிறார். அதில் 25 சதவீதத்தை இருசக்கர வாகன எரிபொருள் மற்றும் பிற செலவுகளுக்கு ஒதுக்குகிறார். மற்றொரு 25 சதவீத பணத்தின் மூலம் வங்கிக் கடனை திருப்பி செலுத்துகிறார். கூடுதல் பணத்தை கரிமுல் தேடவில்லை. அவரது பணிக்கு அல்லா பரிசளிப்பார் என அவர் நம்புகிறார்.

Karimul's unique ‘bike ambulance’ and mobile number (for calls from people in need of medical help) have become very popular in the villages
PHOTO • Souryajit Nath & Arindam Bachar & Debannita Biswas
Karimul Haque has created a two wheeler ambulance to take his fellow villagers to the Doctor in case of emergency
PHOTO • Souryajit Nath & Arindam Bachar & Debannita Biswas

தலாபாரி மற்றும் அருகாமை கிராம மக்களை மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களுக்கு கரிமுல் தனது இருசக்கர வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்கிறார்

மாணவரால் தயாரிக்கப்பட்ட இக்காணொலியில் இடம்பெறும் ‘கோல்ட்’ எனும் அழகான பின்னணி இசையை இசைக்க அனுமதித்த ஜோர்க் மென்டசுக்கு பாரி நன்றித் தெரிவிக்க விரும்புகிறது.

கரிமுல் ஹக்கிடம் குழுவை அறிமுகம் செய்ததுடன் இத்திரைப்படத்திற்கான இருப்பிட மேலாளராகவும் பங்காற்றியவர் அனுசுயா சவுத்ரி. திரைப்படத்தின் ஒலி மேலாளராக பணியாற்றியவர் மவுமிதா புரக்யஷ்தா.

இந்த இருவருடன் சேர்ந்து பணியாற்றிய மூன்று இயக்குநர்களும் (கீழே குறிப்பிடப்பட்டுள்ளது) சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் முதுநிலை நான்காவது செமஸ்டர் மாணவர்கள்.

தமிழில்: சவிதா

Souryajit Nath & Arindam Bachar & Debannita Biswas

சவுர்யாஜித் நாத் மற்றும் அரிந்தம் பச்சார் திரைப்பட ஒளிப்பதிவு இயக்குநர்களாகவும், அவற்றின் இணை இயக்குநர்களாகவும் உள்ளனர். தேபன்னிதா பிஸ்வாஸ் திரைப்படத் தொகுப்பாளராகவும், இணை இயக்குநராகவும் உள்ளார்.

Other stories by Souryajit Nath & Arindam Bachar & Debannita Biswas
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha