பாலினம் சார்ந்த வன்முறை (SGBV) பற்றிய பாரி கட்டுரை தொடர்
பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த் வன்முறை குறித்த இக்கட்டுரைகள் வெளிப்படுத்துவது போல, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கென பல வடிவங்கள் இருக்கின்றன. பாலியல் தொழில், புலப்பெயர்வு, பாலின உறுதி அறுவை சிகிச்சை மற்றும் நீதி வேண்டி மேலதிகாரிகளுக்கு எதிரான ஒரு பெண் காவலரின் போராட்டம் ஆகியவை இங்கு இடம்பெற்றிருக்கின்றன. பெண்களின் நடத்தை கட்டுப்பாடு, பெண்கள் மீதான வன்முறை, காதல் என்கிற பெயரில் இளம்பெண்கள் கடத்தப்படுதல் போன்ற ஆணாதிக்கதன்மைதான் இவை எல்லாவற்றிலும் அடிநாதமாக இருக்கின்றன. பாலின குற்றங்கள் பற்றிய இக்கட்டுரைகளில் சட்டம் என்ன சொல்கிறது, சட்ட நடவடிக்கைக்கு எத்தனை காலம் ஆகிறது ஆகியவையும் பேசப்படுகிறது. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் இணைந்து பாரி வழங்கும் குறுந்தொடர் இது.