அன்புள்ள PARI வாசகருக்கு,
www.ruralindiaonline.org-ல் இது பல வேலைகள் முன்னெடுக்கப்பட்ட ஆண்டு.
2023-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், PARI குழுவானது, வருட இறுதி மதிப்புரைகளை வியக்க வைக்கும் படக்காட்சிகள் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும், PARI-ன் சிறப்பானவை - கதைகள், கவிதைகள், இசை மற்றும் விளக்கப்படங்கள், திரைப்படங்கள், புகைப்படங்கள், மொழிபெயர்ப்புகள், நூலகம், முகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மாணவர்களுடனான எங்கள் ஈடுபாடு பற்றிய எடிட்டர்களின் தேர்வுகளை - நாங்கள் வெளியிடுவோம்.
நாங்கள் நாடு முழுவதிலுமிருந்து தொடர்ந்து பல வாழக்கைக் கதைகளை வெளியிட்டுள்ளோம். மேலும் இந்த ஆண்டு வடக்கு கிழக்கு உட்பட புதிய இடங்களில் இருந்தும் பல கதைகளைச் சேர்த்துள்ளோம். விவசாயம் பற்றிய எங்கள் இதழியல் பணி, இப்போது மல்லிகை, எள், உலர் மீன் மற்றும் பலவற்றைப் பற்றிய அபர்ணா கார்த்திகேயனின் ஆய்வுத்தொடர்களையும் உள்ளடக்கியுள்ளது. மனித-விலங்கு மோதலின் வீழ்ச்சி மற்றும் சரணாலயங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மீது அதன் மாபெரும் தாக்கம் பற்றி 'ஒரு புதிய வகையான வறட்சி' என்னும் ஜெய்தீப் ஹர்திகரின் இடைவிடா முயற்சியில் உருவான தொடரில் படிக்கலாம்.
சிலை தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் மற்றும் தமிழக மீனவர்கள் என எல்லைகளில் உள்ள மக்களின் மறக்க முடியாத புகைப்படங்களை பழனி குமார் படம்பிடித்திருந்தார். ரிதாயன் முகர்ஜி மற்றும் முஸாமில் பட் ஆகியோர், காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் மாறிவரும் காலநிலையை சமாளிக்க முயலும் மேய்ச்சல்காரர்களுடன் பயணம் செய்து, உயரமான மலைகளில் அவர்கள் பணிபுரியும் போது அவர்களை புகைப்படம் எடுத்திருந்தனர். மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், இளம் விளையாட்டு வீரர்கள், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கான கல்வி, மாதவிடாய் தடைகள் மற்றும் பல அழுத்தமான அநீதிகளை ஜோதி ஷினோலி தனது கதைகளில் உள்ளடக்கியிருந்தார். மேலும் எங்கள் பாரியின் சக எழுத்தாளர், உமேஷ் கே. ரேயின், பீகாரின் முசாஹர் சமூகம் மற்றும் மதுபானம் தொடர்பான மரணங்கள் பற்றிய காட்டமான தொடர்களையும் படைத்திருந்தோம்.
சமூகங்கள் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய புதிய கதைக் களங்களையும் இணைத்தோம்: கிழக்கு இமயமலையில் அழிந்துவரும் பறவையான புகுன் லியோசிச்லாவுக்கான அச்சுறுத்தல்களையும், அந்த நெருக்கடியைத் தணிக்க உள்ளூர்வாசிகள் எப்படி உதவுகிறார்கள் என்பதையும் விஷாகா ஜார்ஜ் கண்டறிந்தார். ராஜஸ்தானில் ஆபத்தான நிலையில் உள்ள கிரேட் இந்தியன் பஸ்டர்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளால் கைப்பற்றப்பட்ட புனித தோப்புகளை, இப்போது புனிதமற்றதாக மாறியிருந்ததை பிரித்தி டேவிட் பதிவிட்டிருந்தார்.
நாங்கள் மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் இணைந்து நடந்தது, மேலும் ஆதிவாசிகள் தங்கள் உரிமைகளுக்காக அணிவகுத்துச் செல்லும்போதும், அங்கன்வாடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோதும் அவர்களிடம் பேசியது, என செய்திகள் வர வர, சேகரித்து வெளியிட்டோம். பின்னர், 2023 டிசம்பரில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, புல்டோசர் அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் மற்றும் இந்த மாநிலங்களில் காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைகளைப் பற்றி பார்த் எம்.என். எழுதியிருந்தார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் களத்தில் இறங்கி பணியாற்றி, பீடித் தொழிலாளிகளை பற்றிய கதைகளை படைத்த ஸ்மிதா கட்டோர், பெண்களின் பாடல்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு போன்றவற்றை உள்ளடக்கிய குறுகிய பயணக் கதைகளையும் வெளியிட்டிருந்தார். தானும் ஒரு ஆசிரியர் என்பதால், மேதா காலே, சிறப்புக் கல்வியாளர்களைப் பற்றிய ஒரு பாராட்டுப் பதிவை எழுதிய போது, ஆசிரியருக்கு மிக நெருக்கமான படைப்புகளாக அவை வெளியாகின. எங்கள் நிருபர்கள், மா போன்பிபி, ஷைலா நிருத்யா, சதர் பத்னி, பிலி வேஷா, இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களைப் பார்த்து, அவற்றைப் பற்றி எழுதியிருந்தார்கள் - அதற்கான பதிவு தான், 'சரி, யாருடைய ஆலயம் தான் இது?'
PARI குழு பல இடங்களில் பரவியுள்ளது என்ற சாதகத்தை பயன்படுத்தி, துரதிர்ஷ்டவசமான ஒப்பந்த தொழிலாளர்கள், மொழிபெயர்ப்பின் வேதனை மற்றும் பரவசம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வார்த்தைகள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் ‘ஓய்வு’ நேரங்களை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய இந்தியா முழுமைக்குமான பதிவுகளையும் படைத்திருந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் பல கதைகளை சொல்வோம் என்றும் நம்புகிறோம்.






